வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (13/06/2013)

கடைசி தொடர்பு:14:03 (13/06/2013)

ஜாலியான இயக்குனர் சுந்தர்.சி : ஹன்சிகா!

யாரோ ஹன்சிகாவைப் பார்த்து "நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கு’’ என்று சொல்லியிருக்கவேண்டும். இரண்டு வார்த்தைகளுக்கு ஒருமுறை ‘களுக்‘ என்று ஒரு சிரிப்பு சிரித்துவைக்கிறார். அதுவும் அழகாகத்தான் இருப்பதால் ரசித்துக்கொண்டே பேசினேன்.

‘‘ஒரே நேரத்துல 7 படங்களா?’’

  ‘‘ஆமா, ஐ அம் வெரி லக்கி. எல்லாமே யங் டீம்ஸ். யங்கா இருந்தாலும் செம்ம ஹார்ட் வொர்க் பண்றாங்க. ஹெவி வொர்க்கும் வாங்கிடறாங்க...’’

‘‘அதெப்படி எல்லா ஹீரோக்களுமே ஹன்சிகா தான் வேணும்னு அடம் பிடிக்கிறாங்க?’’

  (சிரிக்கிறார்)‘‘நான் கொடுக்குற வேலைய கரெக்டா பண்றேன். அதுக்கு மேல ஒண்ணும் பண்றது கிடையாது. உங்களுக்கு ஏன் என்னை பிடிக்குது? அதே காரணம் தான் அவங்களுக்கு என்னை பிடிக்க காரணமா இருக்கலாம்.’’

‘‘‘தீயா வேலை செய்யணும் குமாரு’ எக்ஸ்பீரியன்ஸ் பத்தி சொல்லுங்க?’’

  ‘‘சுந்தர்.சி மாதிரி ஒரு ஜாலியான டைரக்டர் கூட நான் வொர்க் பண்ணதே இல்லை. படம் எப்படி ஜாலியா இருக்கோ அதை விட 10 மடங்கு ஜாலியா இருந்துச்சு பட ஷுட்டிங்கும். இந்த படம் மட்டும் எனக்கு ஷுட்டிங் ஆரம்பிச்சதும் தெரியலை. முடிஞ்சதும் தெரியலை..அவ்ளோ கலகலப்பா போனிச்சு.’’

‘‘சித்தார்த்?’’

 ‘‘இத்தனை ஹீரோக்கள் கூட வொர்க் பண்ணாலும் அது என்னமோ தெரியலை. எனக்கு சித்தார்த் கூட நடிச்சது தான் ரொம்ப கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ணேன். எனக்கு செம மேட்சிங்கா இருப்பார்.’’

‘‘சந்தானம்?’’

‘‘ஓகேஓகே பண்ணும்போதே சந்தானம் எனக்கு ஃப்ரெண்ட் ஆயிட்டாரு. கிட்டதட்ட இப்ப நான் நடிக்கற எல்லா படத்துலயும் அவரும் கூடவே இருக்காரு. ஸோ ஃப்ரெண்ட்லி. சந்தானத்தோட காமெடி மட்டும் தான் நமக்கு தெரியும். அவர் ஒரு நல்ல மனிதர். அது அவர் கூட நெருங்கி பழகுறவங்களுக்கு மட்டும் தான் தெரியும்...’’

‘‘எல்லாம் சரி... ஆனா சினிமா நிகழ்ச்சிகள்ல மட்டும் ஓவர் கிளாமரா டான்ஸ் ஆடுறீங்க? சினிமால மட்டும் கவர்ச்சிக்கு தடாவா?’’

  ‘‘நான் எப்பங்க கவர்ச்சி காட்டமாட்டேன்னு சொன்னேன்? டைரக்டர் சொல்றபடி தான் நடிச்சுட்டு இருக்கேன். எவ்வளவு கிளாமராவும் நடிக்க ரெடி. வேலாயுதத்துல கூடத்தான் கிளாமர் ரோல் பண்ணேன். கிளாமர் ரோலுக்கு தகுந்த ஸ்க்ரிப்ட் அமையணும்ல. தீயா வேலை செய்யணும் குமாருல ஒரு கிளாமர் ஸாங் இருக்கு. ஹன்சிகாவா இதுனு கேப்பீங்க...’’

 ‘‘ட்ரீம்பாய் எப்படி இருக்கணும்னு சொன்னா தமிழ்நாட்டு இளைஞர்கள் தயாராவாங்க...’’

 ‘‘அப்படி ஒருத்தரை நினைச்சே பார்த்தது கிடையாதுங்க... யோசிக்கிறேன். மைண்டுல ஏதும் தோணுச்சுனா கண்டிப்பா எஸ் எம் எஸ் பண்றேன்’’.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்