வெளியிடப்பட்ட நேரம்: 13:56 (15/06/2013)

கடைசி தொடர்பு:13:56 (15/06/2013)

'சமத்துப் பையன் சந்தானம்' - சித்தார்த்

'தீயா வேலைசெய்யணும் குமாரு' படத்தின் மூலம் அடுத்த இன்னிங்ஸை அதிரடியாக ஆரம்பித்திருக்கிறார் சித்தார்த். கொஞ்ச நாளாய் நாட் ரீச்சபிள் ஏரியாவில் இருந்தவரை போனில் பிடித்தோம்.  

" 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்துல உங்க கேரக்டர்?’’

‘‘பேசவே கூச்சப்படுற பையன். பரம்பரை பரம்பரையா காதல் கல்யாணம் பண்ற குடும்பத்துல பொறந்த எனக்கு காதல்னாலே ஆகாது. ஐ.டில வேலை செய்ற ஹன்சிகாவைப் பார்த்ததும் காதல் வருது. என் காதலுக்கு ஹெல்ப் பண்ணச் சொல்லி லவ் குரு சந்தானம்கிட்ட சொல்றேன். அவர் ஹெல்ப் பண்றதால என் காதல்  என்ன ஆகுதுன்னு அழகா சொல்ற படம்.’’

‘‘ சுந்தர் சி. என்ன சொல்றார்?’’

‘‘சுந்தர்.சி கிட்ட நானாத்தான் உங்க படத்துல நடிக்க ஆர்வமா இருக்குன்னு சொன்னேன். உடனே கதை சொன்னார். ரொம்பப் பிடிச்சிருந்தது. சரின்னு நடிச்சேன். பொறுமையா இருக்குறது, தொழிலை முழுமையாகக் காதலிக்குறதுன்னு ரெண்டு விஷயங்களை சுந்தர்.சி கிட்ட கத்துக்கிட்டேன்.’’

‘‘ஹன்சிகா உங்களுக்கு க்ளோஸ் ஆகிட்டாங்களா?’’

‘‘ஏற்கனவே நாங்க ஒரு தெலுங்குப் படத்துல சேர்ந்து நடிச்சிருக்கோம். ஹன்சிகாவை பார்பிடால், பப்ளி கேர்ளா மட்டும் பார்க்க முடியாது. ரொம்ப கஷ்டப்பட்டு ஜப்பான் குளிர்ல ஷார்ட்ஸ் போட்டு நடிச்சாங்க. பார்க்கவே பாவமா இருந்தது. தமிழ் தெரியலன்னாலும் புரிஞ்சுக்க ட்ரை பண்றாங்க. ஹன்சிகா ஃபெர்பாமன்ஸ்க்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும்.’’

‘‘சந்தானம் உங்களைக் கலாய்க்கிறாரா?’’

‘‘சந்தானம் தங்கமான பையன். சமத்துப்பையன். பெரிய ஜாம்பவான் கூட நடிக்கணுமேன்னு ஆரம்பத்துல பயந்திருக்கேன். ஆனா நான்தான் சந்தானத்தை அதிகம் கலாய்ச்சேன். சந்தானம் ரொம்ப நல்லவர். அதனாலதான்  உயர்ந்துகிட்டே இருக்கார். அவரோட சின்சியாரிட்டிக்கு இன்னும் நல்ல வருவார். எங்க கெமிஸ்ட்ரி பிடிச்சிருந்தா அடுத்தடுத்த படங்கள்லயும் சேர்ந்து நடிப்போம்.’’  

‘‘இப்போ தமிழ்சினிமாவுல என்ன பிடிச்சிருக்கு?’’

‘‘ 'சூதுகவ்வும்' படம் ரொம்பப் பிடிச்சது. விஜய் சேதுபதி, நலன் டீமுக்கு என் பாராட்டுகள். மரியான்ல ரஹ்மான் மியூசிக் பிடிச்சது. குறிப்பா சக்தி ஸ்ரீகோபாலன் பாடுன 'எங்கே போன ராசா' பாடலை ரொம்ப ரசிச்சேன்.’’

- க. நாகப்பன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்