சிக்ஸ்பேக் வைக்க நான் ரெடி! - 'மிர்ச்சி' சிவா அதிரடி | யா யா, 'மிர்ச்சி' சிவா, தன்ஷிகா, சந்தியா

வெளியிடப்பட்ட நேரம்: 14:09 (11/07/2013)

கடைசி தொடர்பு:14:09 (11/07/2013)

சிக்ஸ்பேக் வைக்க நான் ரெடி! - 'மிர்ச்சி' சிவா அதிரடி

‘சென்னை-28’ விமர்சனத்தில் 'சிவா... நீங்க ரேடியோல காம்பியர் பண்ணது போதும். சினிமாவுக்கு வந்துடுங்க’னு எழுதியிருந்தீங்க. அந்த வார்த்தைகள்தான் எனக்குத் தைரியமும் நம்பிக்கையும் கொடுத்துச்சு. தேங்க்ஸ் டு விகடன்!'' - உற்சாகமாகப் பேசுகிறார் சிவா. இடம் 'யாயா’ பட ஷூட்டிங்.

'' 'கலகலப்பு’, 'தில்லுமுல்லு’னு அடுத்தடுத்து ஹிட் கொடுத்திருக்கீங்க... எப்படி இருக்கு?''

''போன மாசத்துக்கும் இந்த மாசத்துக்கும் எந்த வித்தியாசமும் தெரியலை. இன்னைக்கும் அதே அம்மா கையால சாம்பார் ரைஸும், வடகமும்தான் சாப்பிடுறேன். எந்தக் காலத்திலும் சிவா மாறமாட்டான். நமக்கு வர்றதை நாம செய்வோம். வெற்றியோ, தோல்வியோ எதையும் தலைக்கு ஏத்திக்கக் கூடாது. அதுல தெளிவா இருக்கேன்!''

'' 'அகில உலக சூப்பர் ஸ்டார்’னு டைட்டில்ல போடச்சொல்றீங்களாமே?''

''அது ஒவ்வொரு படத்துலயும் ஒவ்வொரு டைட்டில் கொடுக்குறாங்க. ஏதும் கேட்டா, நம்ம பேரையே   போடாம விட்டுடுவாங்களோங்கிற பயத்தில் நான் கேட்கிறதில்லை. என்ன டைட்டில் போட்டாலும் நான் சூப்பர் ஸ்டார் ஆகப்போறது கிடையாது. அப்புறம் என்ன?''

''சீரியஸான ரோல் பண்ற ஐடியாவே இல்லையா?''

''நான் ரெடியா இருக்கேன் பிரதர். ஆனா, ஒரு புரொடியூசர்கூட என்கிட்ட வந்து 'இந்தப் படத்துல நீங்க சிக்ஸ்பேக் வைக்கணும். இப்படி சீரியஸா வசனம் பேசணும்’னு சொல்ல மாட்டேங்கிறாங்களே? வர்ற கேரக்டர் எல்லாமே ஃப்ராடு, மொள்ளமாறி, முடிச்சவிக்கியா இருக்கு!''

''உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் பார்ட்டி பாய்ஸ்... நீங்கமட்டும் எப்படி நல்லவரா இருக்கீங்க?''

''அவங்கள்லாம் பார்ட்டி முடிச்சுட்டுப் படுக்கப் போகும்போது காலைல ஆறு மணி ஆகிரும். அப்போ எனக்கு ரேடியோவில் ஷோ டைம் இருக்கும். அதனால், பார்ட்டி பக்கமே போக முடியலை. அந்தப் பசங்களையும் மிஸ் பண்ணிட்டேன். எனக்கு பார்ட்டியைவிட ரேடியோ பிடிச்சிருந்தது. அதனால், நல்ல பையனாவே இருந்துட்டேன்!''

''தன்ஷிகா, ப்ரியா ஆனந்த் கூட ஜோடியா நடிக்குறீங்க... எப்படி இருக்கு கெமிஸ்ட்ரி?''

''பிரதர்... நான் ஒண்ணும் ஆர்யா இல்லை. ப்ரியா ஆனந்த், நிறையக் கலாய்க்கிறாங்க. தன்ஷிகா, ரொம்ப அமைதி. மத்தபடி நம்ம படத்தில் எங்கே ஹீரோயின்கூட டூயட் பாடவிடுறாங்க... ஏதாவது காமெடி பண்ணிட்டு, கடையைச் சாத்திட்டுப் போய்ட்டே இருக்க வேண்டியதுதான்!''

'' 'தமிழ்ப் படம்’, 'குவார்ட்டர் கட்டிங்’, 'வணக்கம் சென்னை’ இப்படி வரிசையா கலைஞர் குடும்பத்துல உள்ளவங்க தயாரிக்கும் படமா நடிக்கிறீங்களே?''

''எப்படி எல்லாம் கோத்துவிட பிளான் பண்றீங்க! என்னோட படங்கள் எல்லாமே புது கம்பெனியாதான் இருக்கும். அதை வேணா செக் பண்ணிப் பாருங்க. சுந்தர்.சி தவிர, எல்லாருமே புது இயக்குநர்கள். எல்லாரும் ராசியான ஆளுனு என்னை முடிவுபண்ணிட்டாங்கபோல. நல்ல விஷயம்தானே?!''

- க.ராஜீவ் காந்தி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்