வெளியிடப்பட்ட நேரம்: 14:46 (15/07/2013)

கடைசி தொடர்பு:14:46 (15/07/2013)

'நான் காந்தியின் ரசிகன்' - கமல்

"நான் மகாத்மா காந்தியின் ரசிகன். ஆனால், அவரது தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் இருப்பது போன்று சித்தரிப்பது எனக்குப் பிடிக்கவில்லை" என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.

"சாதாரண மனிதராக இருந்து தேசத்திற்காக அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபட்டார். 'ஹேராம்' படத்தை அதற்காகத்தான் எடுத்தேன். காந்தியை சாமியாராக, முனிவராக பார்க்கக் கூடாது.

தேசப்பற்று என்ற வார்த்தையை கவனமாகப் பயன்படுத்தாவிட்டால் ஆபத்தாகிவிடும். கிரிக்கெட் மீதான ஈடுபாடு தேசப்பற்றாகி விடாது.

'விஸ்வரூபம்' படத்தின் லொகேஷன்களுக்காக நிறைய சிரமப்பட்டோம். ஆனால், விஸ்வரூபத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை எடுக்கவில்லை. இருந்தாலும், முந்தைய படத்தின் உணர்வு தெரியும்.

இந்தியில் படம் பண்ணும் ஆசை இருக்கிறது. தயாரிப்பாளரைத் தேடி வருகிறேன். ஸ்ருதி பிஸியான நடிகையாக இருப்பது பெருமையாக இருக்கிறது. நேரம் அமைந்தால் இருவரும் சேர்ந்து நடிப்போம்" என கமல் கூறி உள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்