அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்... | நயன்தாரா, அனுஷ்கா, ஹன்சிகா, சாவித்திரி, பத்மினி, ஹீரோயின், கதாநாயகி

வெளியிடப்பட்ட நேரம்: 10:57 (22/07/2013)

கடைசி தொடர்பு:10:57 (22/07/2013)

அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்...

அந்தக் காலத்து ஹீரோயின்

 

ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்திலும் மேக்-அப் அப்பி ஸ்க்ரீனில் தெரிந்தவர்கள். லிப்ஸ்டிக் போடாமல் வெண்திரையில் வந்தால் சாமிக்குத்தம் ஆகிவிடும் என்பது இவர்களின் எவர் ஈஸ்ட்மென்ட் நிற நம்பிக்கை.

கிளிசரின் போடாமலே நன்கு அழத் தெரிந்தவர்கள். 'என்னை மன்னிச்சிடுங்க கோப்ப்பால்... என்னை மன்னிச்சிடுங்க!’ எனக் குரலில் நடுக்கத்தோடு காலில் விழுந்து கதறி பெர்ஃபார்மென்ஸ் பணணி பீதியைக் கிளப்புபவர்கள்.

ஹீரோவைக் காதலித்தாலே 'அத்தான்’ என்று கூப்பிடு வார்கள். எவ்வளவு கர்வமானப் பெண்ணாக இருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு, கல்லானானும் கணவன் புல்லானாலும் புருஷன் என கணவன் காலடியில் விழுந்து கிடப்பதையே பெரும்பாக்கியமாகக் கருதுவார்கள். 

 

குடிசை வீட்டிலே வசிக்கும் ஏழைப் பெண்ணானாலும் கேட்வாக் நடைதான் நடப்பார்கள். ஹீரோவைப் பார்த்து முகத்தை மூடிக்கொண்டு வெட்கப்படுவார்கள்.

பெரும்பாலும் தாட்டியாய் தலைவாரிப் பூச்சூடி தழையத் தழைய சேலை எல்லாம் கட்டி மங்களகரமாக இருப்பார்கள். தலைவிரி கோலமாக இருந்தாலே பெருஞ்சோகக் காட்சி கம்மிங் சூன் என்று அர்த்தம்.  

உயிருடன் இருக்கும்போதும் சரி.... இறந்த பிறகு ஆவியானாலும் சரி, கதாநாயகனை மூங்கில் காட்டுக்குள் பாடியே அழைத்துச் செல்லும் திறமை படைத்தவர்கள். முழுப் பாடல் முடிந்த பிறகுதான், ஹீரோயினை ஹீரோ பார்ப்பார்!


 இந்தக் காலத்து ஹீரோயின்

மேக்-அப்பைவிட காஸ்ட்யூமுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தெரிந்தவர்கள். கறட்டுமேட்டில் ஆடு மேய்ப்பவராய் நடித்தாலும் புருவத்தை த்ரெடிங் பண்ணியே நடிப்பார்கள்.

கிளிசரின் போட்டு அழுவதால் அழுகைக்கும் சிரிப்புக்கும் வித்தியாசமே இருக்காது. 'இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான்தான்டா உன் பொண்டாட்டி’ என ஹீரோவையே மிரட்டி லவ் பண்ணவைப்பார்கள்.

ஹீரோவை அநியாயத்துக்கு அலையவிடுவார்கள். சப்போஸ், காதல்வயப்பட்டால் இங்கிலீஷ் கிஸ், பிரெஞ்சு கிஸ் என உதட்டைக் கவ்வித் தவ்வி நிஜக் காதலை ஸ்க்ரீனில் வளர்ப்பார்கள். ஹீரோவோடு சேர்ந்து சரக்கடித்து சமத்துவக் கொடி ஏற்றுவார்கள்.

பாரதிராஜா காலத்தோடு வெட்கப்படும் ஹீரோயின்கள் மலையேறிவிட்டார்கள். ஆண்களை வெட்கப்படவைப்பதுதான் இப்போதைய ஹீரோயின்களின் டிரெண்ட்.

பெரும்பாலும் ஒல்லிக்குச்சி உடம்புக்காரிகள். எந்தக் காட்சி ஆனாலும் தலைவிரி கோலம்தான். குத்தாட்டம் என்றால் சும்மா இறங்கிக் குத்துவார்கள். அவார்டு படத்தில் மட்டும்தான் பெருஞ்சோகக் காட்சிகள் எல்லாம் இருக்கும்.

ஹீரோவை பப்களுக்கும் கிளப்களுக்கும் அழைத்துப்போய் போதையேற்றும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். பனிப் பிரதேச ட்ரீம் ஸாங்கில் ஹீரோ இரண்டு கோட், இரண்டு சூ¨ட் போட்டு ஆடினாலும் டூ-பீஸில் தொப்புள் தெரிய ஹீரோவைச் சுற்றிச்சுற்றி குலுக்கல் டான்ஸ் ஆடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்!

- ஆர்.சரண்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close