கலங்கிய இயக்குநர்; கட்டிப்பிடித்து அழுத ஹீரோ!

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விஷால் - ஐஸ்வர்யா அர்ஜுன் நடித்துள்ள படம் 'பட்டத்து யானை.' இந்தப் படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பூபதி பாண்டியன், "இந்தப் படத்தை நான் இயக்குவதற்கு விஷால் தான் காரணம். விஷாலைச் சந்தித்து கதை சொன்னேன். இடைவேளை வரும் இடத்தில் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, தயாரிப்பாளருக்கு போன் செய்து இந்தக் கதையைப் படமாக்கலாம் என்றார். என் வாழ்க்கையில் விஷாலை மறக்கவே மாட்டேன்" என கண் கலங்கினார்.

இதைப் பார்த்த விஷால் எழுந்துசென்று பூபதி பாண்டியனை கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்னார். இருந்தாலும் விஷாலுக்கும் அழுகை வந்தது.

பின்னர் மைக் பிடித்த விஷால், "பூபதி பாண்டியன் காமெடியாகக் கதை சொல்பவர். இன்று நிறைய இயக்குநர்கள் காமெடியில் ஹிட் கொடுப்பதற்கு அவர்தான் வழிகாட்டி. 'மலைக்கோட்டை' படம் முடிந்தபோதே நானும், அவரும் சேர்ந்து படம் பண்ண ஆசைப்பட்டோம். ஆனால், நேரம் அமையாததால் நடக்கவில்லை. 5 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் இணைந்துள்ளோம். இயக்குநருக்கும், ஹீரோவுக்கும் இடையில் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தால் தான் படம் வெற்றிபெறும். எங்களுக்குள் அந்த கெமிஸ்ட்ரி இருக்கிறது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!