'மூன்று முகம்' காட்டும் சந்தானம்! | சந்தானம், பூபதி பாண்டியன், விஷால், ஐஸ்வர்யா, பட்டத்து யானை

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (22/07/2013)

கடைசி தொடர்பு:11:30 (22/07/2013)

'மூன்று முகம்' காட்டும் சந்தானம்!

விஷால் - ஐஸ்வர்யா அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பட்டத்து யானை.' பூபதி பாண்டியன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.

'மலைக்கோட்டை' படத்துக்குப் பிறகு விஷாலும், பூபதி பாண்டியனும் இணையும் படம் இது. மைக்கேல் ராயப்பன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

தமன் இசையில் மதன் கார்க்கி அனைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறார். எஸ்.வைத்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சந்தானம், ஜெகன், மயில்சாமி, மனோபாலா, 'காதல்' சுகுமார், கிருஷ்ணமூர்த்தி, 'பட்டிமன்றம்' ராஜா என ஒரு காமெடிப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.

இருந்தாலும், சந்தானத்துக்குத்தான் இயக்குநர் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம். படம் முழுவதும் சந்தானத்தின் காமெடி இருக்கும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

இதற்காக தாத்தா, அப்பா, மகன் என மூன்று வேடங்களில் நடித்துள்ளாராம் சந்தானம். 'ஒரு கெட்டப்புல வந்து காமெடி பண்ணாலே வயிறு குலுங்க சிரிக்க வைப்பாரு, இதுல மூணு கெட்டப்பா...' என ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள் சந்தானத்தின் ரசிகர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்