வெளியிடப்பட்ட நேரம்: 12:24 (25/07/2013)

கடைசி தொடர்பு:12:24 (25/07/2013)

ரிசல்ட்டுக்காக வெயிட்டிங் : ஐஸ்வர்யா அர்ஜுன்

பரீட்சை எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கும் மாணவியைப் போல பரிதவிப்பில் இருக்கிறார் ஐஸ்வர்யா. 'ஆக்‌ஷன் கிங்' அர்ஜுனின் மகள். அவர் நடித்த முதல் படமான 'பட்டத்து யானை' நாளை ரிலீஸ். வாழ்த்துகள், பேட்டிகள் என பரபரப்பாக இருந்தவரை போனில் பிடித்தேன்.

"நீங்க நடித்த முதல் படம் நாளைக்கு ரிலீஸாகப் போகுது. எப்படி ஃபீல் பண்றீங்க?"

"சுத்தமா ஒண்ணுமே இல்லை. பிளாங்க்கா இருக்கேன். உங்கள மாதிரி நிறைய பேரு போன் பண்ணி வாழ்த்தும்போது தான் எக்சைட்மெண்ட்டா இருக்கு."

"படத்துல உங்க கேரக்டர் என்ன?"

"ப்ளஸ்-2 படிக்கிற பொண்ணா நடிச்சிருக்கேன். ரொம்பவே டிபரண்ட்டான கதாபாத்திரம். முதல் படத்துலேயே இந்த கேரக்டர் கிடைச்சத லக்கியா நினைக்குறேன். என் பர்சனல் கேரக்டருக்கு அப்படியே ஆப்போசிட்டான கதாபாத்திரம். சிம்பிளா சொல்லப்போனா பர்ஃபெக்ட் பொண்ணா நடிச்சிருக்கேன்."

"விஷாலோட ஒத்துழைப்பு எப்படி இருந்துச்சி?"

"ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சி. இதுக்கு மேல எதுவும் இல்லைனு சொல்ற அளவுக்கு அப்படி ஒரு ஒத்துழைப்பு தந்தார். சின்ன வயசுல இருந்தே தெரியும். அதனால நல்லா பார்த்துக்கிட்டார். நடிகரா எனக்கு டிப்ஸ் கொடுத்தார். சில சமயங்கள்ல அவர்தான் என்னை டைரக்ட் பண்ணார்."

"உதவி இயக்குநர், நடிகர் - எந்த விஷால் பெஸ்ட்?"

"ரெண்டுலயுமே விஷால்ங்கிற பர்சன் தான் பெஸ்ட். இருந்தாலும், திரைக்குப் பின்னால இருக்குற விஷாலைத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு. ரொம்ப நல்லவர். ஸ்கிரீன்ல தெரியுற திமிரு அவர்கிட்ட சுத்தமா கிடையாது. பவ்யமா இருப்பாரு."

"அப்பா என்ன சொன்னார்?"

"அப்பா வெளியூர்ல இருக்குறதால இன்னும் படம் பார்க்கல. ஆனா, டிரெய்லர் பார்த்துட்டார். டிரெய்லரைப் பார்த்துட்டு நிறைய பேரு அப்பாவுக்குப் போன் பண்ணி நான் நல்லா பண்ணியிருக்கேன்னு சொல்லியிருக்காங்க. படம் பார்த்ததுக்குப் பிறகு அப்பா என்ன சொல்லப்போறார்னு தெரியல."

"அடுத்த படம்?"

"நிறைய ஆஃபர் வருது. ஆனா, இன்னும் எந்த படத்துலயும் கமிட் ஆகல. முதல் படத்தோட ரிசல்ட்டுக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்கேன். ரிலீஸுக்குப் பிறகு தான் அடுத்த படம் பத்தி யோசிக்கணும்."

- சி. காவேரி மாணிக்கம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்