''குறும்படம் எடுப்பதில்... அவசரம் வேண்டாம்...!''

எஸ்.ஏ.இ. இன்ஸ்டியூட் பேஃம் திரைப்பட போட்டியை முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், திரைப்பட இயக்குநரருமான ஞானராஜசேகரன் தொடங்கி வைத்த போது, ''இப்போது, இளைஞர்கள் புதிய சிந்தனையுடன் திரைப்படத்துறைக்குள் வருகிறார்கள். அதே நேரத்தில் தங்களது கற்பனை திறனை அதிகளவு வளர்த்துக் கொள்ளாமல், உடனடியாக அதை படமாக்கிவிடுகிறார்கள். ஓஷோ சொல்வார், 'நீ ஒரு நீர் வீழ்ச்சிக்கு சென்றால், அதன் அழகை உடனடியாக எழுத்தில் வடிக்க துடிப்பாய்.

ஆனால், உன் ஆழ்மனம் பொறு, பொறு என்று சொல்லும். அடுத்த ஆறு மாதம் கழித்து, நீர் வீழ்ச்சியின் அழகு உன் மனதில் தங்கியிருந்தால் மட்டுமே... அதை எழுது. அப்போதுதான், அது அழியாத படைப்பு'. ஓஷோ சொல்வது போல, நமக்குள் ஊறும் கற்பனையை பல்கி பெருக வைத்து, அதை படைக்கும்போதுதான் வரலாற்றில் அழியாத காவியமாக இடம் பெறும்'' என்றார். ஜுலை 20 ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் இறுதிவரை பேஃம் திரைப்பட விருதுக்கான போட்டி நடைபெறும். குறும்படங்கள், சமூக பிரச்சனைகள் குறித்த படங்கள், இசை, வீடியோ, ஆவணப்படங்களை இந்தப் போட்டிக்கு அனுப்பலாம். தொழில்முறை கேமரா முதல் மொபைல் போன் கேமரா வரை அனைத்து வகை கேமராக்களில் எடுக்கப்படும் படங்களை இந்தப் போட்டி வரவேற்கிறது. இதற்கான தேர்வு ஆன்லைன் மூலமாக நடக்கும்.

தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரமுகர்கள் இந்த போட்டிக்கான நடுவர்களாக இருந்து சிறந்த போட்டியாளர்களை தேர்வு செய்வார்கள். முன்னதாக, எஸ்.ஏ.இ. இன்ஸ்டியூட் தனது இந்தியா கூட்டாளியான ஏஏடி அகாடமி இந்திய லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து பேஃம் மியூசிக் இந்தியா என்ற பிரத்யேக ஆன்லைன் இசைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!