விறுவிறு 'ஜெய்ஹிந்த் 2' | ஜெய்ஹிந்த், அர்ஜுன்

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (09/08/2013)

கடைசி தொடர்பு:13:40 (09/08/2013)

விறுவிறு 'ஜெய்ஹிந்த் 2'

'ஜெய்ஹிந்த்' ஹிட் அலைவரிசையைத் தக்கவைப்பதற்காக 'ஜெய்ஹிந்த்-2' படத்தை இயக்கி வருகிறார் அர்ஜுன். 'மூன்று பேர் மூன்று காதல்' படத்தில் நடித்த சுர்வீன் சாவ்லா இதிலும் அர்ஜுனுடன் ஜோடி சேர்கிறார்.

இதுகுறித்துப் பேசிய அர்ஜுன், "படப்பிடிப்பை மைசூரில் துவங்கினோம். இரண்டு ஏக்கர் நிலத்தில் 25 லட்சம் ரூபாய் செலவில் சிறைச்சாலை அரங்கை அமைத்து, அதில் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சிகளைப் படமாக்கினோம்.

பெற்றோர்கள் குழந்தைகளைத் தங்கள் சொத்தாக மட்டுமே நினைக்கிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களின் சொத்து மட்டுமல்ல, இந்த நாட்டின் பொக்கிஷம். அப்படிப்பட்டப் பொக்கிஷத்தை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் கதைக்கருவாக 'ஜெய்ஹிந்த்-2'வில் கையாண்டிருக்கிறேன்.

அடுத்த கட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. லண்டன் ,டெல்லி, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

கல்வி பற்றிய படம்தான் என்றாலும், கமர்ஷியல் கலந்து இதை உருவாக்கி வருகிறோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்