வெளியிடப்பட்ட நேரம்: 13:42 (09/08/2013)

கடைசி தொடர்பு:13:42 (09/08/2013)

'ராஜா ராணி' ஃபர்ஸ்ட், 'இரண்டாம் உலகம்' நெக்ஸ்ட்!

எந்த நேரத்தில் செல்வராகவன் இப்படி ஒரு தலைப்பு வைத்தாரோ தெரியவில்லை. அந்த அளவுக்கு இரண்டு ஆண்டுகளாக படம் படம் இழுத்துக் கொண்டே இருக்கிறது.

'இரண்டாம் உலகம்' இருண்ட உலகத்தைக் காட்டாது என்ற நம்பிக்கையிலேயே எல்லாரும் ஆவலுடன் படத்தை எதிர்பார்க்கிறார்கள்.

அதுவும் காமெடி டிரெண்டைப் பற்றிப் பேசி விரக்தியின் விளிம்புக்குச் சென்ற செல்வா, இதுவே கடைசி படமாகக் கூட இருக்கலாம் என்று அதிர்ச்சி அளித்தார். எனவே, படத்தில் ஏகப்பட்ட விஷயங்களை அள்ளித் தெளித்திருப்பார் என யூகித்துக் கொண்டிருக்கிறார்கள் பலர்.

இதோ ரிலீஸ் ஆகிறது, ஆடியோ ரிலீஸ் செய்தாகிவிட்டது என்று பரபரப்புக் கிளம்பினாலும்.. எப்போது ரிலீஸ் என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை.

ஆனால், 'ராஜா ராணி' ரிலீஸூக்கு ரெடியாகிவிட்டது. இரண்டாம் உலகத்தில் கமிட் ஆன ஆர்யா, மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகுதான் 'ராஜா ராணி'யில் கமிட் ஆனார். ஆனால், 'ராஜா ராணி' சத்தமில்லாமல் செப்டம்பர் 3-வது வாரத்தில் ரிலீஸாக இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க