Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்களில் யார் கோடி லேடி?

'கோடம்பாக்கக் கோடி லேடி’ ரேஸில் பங்கெடுக்கவிருக்கும் அறிமுக ஹீரோயின்களின் டிட்பிட் பயோடேட்டா இங்கே...

லைச் சாலைப் பேருந்துப் பயணத்தின் ஜன்னலோர சாரலாக வசீகரிக்கிறார் 'நெடுஞ்சாலை’ சிவதா...  

''சிவனிடம் வரம் பெற்றவள்னு அர்த்தம். பார்வதிக்கு இன்னொரு பெயர் சிவதா.  நான் திருச்சியில் பிறந்த கேரளா பொண்ணு. 2007-ல் பரதநாட்டியத்துக்காக தேசிய விருது வாங்கியிருக்கேன். கல்லூரிப் படிப்பு முடிச்சதும், பாசில் இயக்கத்தில் 'லிவிங் டுகெதர்’ படத்தில் ஹீரோயின் வாய்ப்பு. அப்புறம் 'கேரளா கஃபே’. இப்போ தமிழ் 'நெடுஞ்சாலை’யில்கூட எனக்கு மலையாளப் பெண் கேரக்டர்தான்!''

''உங்களிடம் நீங்களே விரும்பும், வெறுக்கும் விஷயம்?''

''சின்ன சோகம்னாகூட குலுங்கிக் குலுங்கி அழுவேன். அது பிடிக்காது. அப்புறம், 'இதுக்கா அழுதோம்’னு நினைச்சு நினைச்சு சிரிப்பேன். அது பிடிக்கும்!''  

''அழகு ரகசியம்?''

''வெந்நீர் நிறையக் குடிப்பேன். டென்ஷனா இருந்தா, சாக்லேட் சாப்பிடுவேன். தினம் சின்னச் சின்னதா எக்சர்சைஸ் செய்வேன்!''

'நாரதன்’ நிகிஷா படேல் மெல்லிடை அழகி!  

 

''குஜராத்திப் பொண்ணு. ஆனா, பிறந்துவளர்ந் தது லண்டன். 'மிஸ் வேல்ஸ் பியூட்டி’ டைட்டில் ஜெயிச்சேன். தெலுங்கில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய 'புலி’ படத்தில் சினிமா அறிமுகம். ஆந்திரா, கர்நா டகா, கேரளானு ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு இப்போ தமிழ்நாடு விசிட்!''  

''தென்னிந்திய சினிமாவில் பிடிக்காதது?''

''சினிமா ஹீரோயின் கொஞ்சம் பப்ளியா இருக்கணும். ஓவர் ஆக்டிங் பண்ணணும்னு எதிர்பார்க்கிறாங்க. இந்த டிரெண்ட் மாற¬லன்னா, நான் சீக்கிரமே டைரக்டர் ஆகிடுவேன்!''  

''லட்சியம்?''

''எவ்வளவு சின்ன கேரக்டரா இருந்தாலும் ஒரு படத்துலயாவது குஜராத்திப் பொண்ணா நடிச்சிரணும்!''

''கெட்ட பழக்கம்?''

''தூங்கும்போது அப்பப்போ குறட்டை விடுவேனாம்!''

'நினைத்தது யாரோ’ நிமிஷாவும் அதேகேரளா!

''எண்ட ஊர் எர்ணாகுளம். படிப்பு எம்.சி.ஏ. அப்புறம் மாடலிங், சினிமா. விக்ரமன் சார் படத்துல தமிழ்ல அறிமுகம் ஆவதில் சந்தோஷம். விஜய் படங்கள்னா அவ்ளோ இஷ்டம். அவர் டான்ஸ் ரொம்பப் பிடிக்கும்!''

''க்ளோஸ் ஃப்ரெண்ட்?''

''பாவனா. சினிமா பத்தித்தான் நிறையப் பேசிக்குவோம்!''

''நிமிஷாவின் ப்ளஸ், மைனஸ்?''

''செம பங்ச்சுவல். தீயா வேலை செய்வேன். அடிக்கடி கோபப்படுவேன்!''

''ஹீரோயின் போட்டியை எப்படிச் சமாளிப்பீங்க?''

''திறமை, எளிமை... இது ரெண்டும் இருக்கு என்கிட்ட. கொஞ்சமேகொஞ்சம் அதிர்ஷ்டம் சேர்ந்தா, ஹிட் ஹீரோயின் ஆகிடுவேன்!''

'வானவராயன் வல்லவராயன்’, 'சிகரம் தொடு’ படங்களில் அறிமுகமாகும் மோனல் கஜ்ஜார், மாடலிங் உலகில் 'மிஸ் குஜராத்’ சிகரத்தை ஏற்கெனவே எட்டிப் பிடித்தவர்...

''22 வயசுக்குள் மூணு தெலுங்குப் படம். ஒரு மலையாளப் படம் முடிச்சுட்டு, இப்போ கோலிவுட் வந்திருக்கேன்!''

''பிடிச்ச பாலிசி?''

'' 'காலம் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை. எவருக்காகவும் காலம் நின்றுவிடுவது இல்லை’னு ஒரு ஜென் தத்துவம். அதனால நான் நேத்து பத்தின நினைப்பே இல்லாம, நாளை பத்தின  கவலையும் இல்லாம இந்த நிமிஷத்தை நேர்மையா, உண்மையா வாழ்றேன்!''

''கிளாமர், ஹோம்லி.... எது உங்கள் ரூட்?''

''ஒரே சாய்ஸ் வித்யாபாலன்தான்... 'டர்ட்டி பிக்சர்’ல செடியூஸ் பண்ணுவாங்க... 'கஹானி’ல சென்சிபிளா இருப்பாங்க. அப்படி எந்த பால் சிக்கினாலும் சிக்ஸர் சாத்தணும்!''

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மூலம் தமிழ் திரை தொடும் ஸ்ரீதிவ்யா, தெலுங்கில் ஏற்கெனவே கன் பார்ட்டி. இவருடைய அக்கா ஸ்ரீரம்யாவும் தெலுங்கில் 'நந்தி’ விருது வாங்கிய நடிகை.

''காலேஜ் படிக்கும்போதே மாடலிங் பண்ணேன். அக்கா வழியில சினிமாவுக்கு வந்துட்டேன்!''

''கலகலன்னு பேசுறீங்க... செம அரட்டை பார்ட்டியா?''

''இல்லைங்க. நான் ரொம்ப சைலன்ட். வீட்லகூட அதிகம் பேச மாட்டேன். ஆனா, ஷூட்டிங்ல யூனிட் ஆட்களோட பேசிப் பேசி வாயாடி ஆகிட்டேன். என் நிஜ கேரக்டரையே மாத்திட்ட சினிமா, எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அக்கா ஸ்ரீரம்யா அறிமுகமான படத்துலயே மொட்டை போட்டு நடிச்சு பல விருதுகள் வாங்கிட்டா. நானும் அப்படி நல்ல பேர் வாங்கணும்.  அதே சமயம் கேரியர்னு வந்துட்டா சினிமாவில் அக்காவும் எனக்குப் போட்டிதான்!''

- க.நாகப்பன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்