ஸ்டார் மேனரிசம்ஸ்! | சிம்பு, அஜித், விஜய், தனுஷ், ஆர்யா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், டி.ஆர்.

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (13/08/2013)

கடைசி தொடர்பு:13:45 (13/08/2013)

ஸ்டார் மேனரிசம்ஸ்!

'நாம் பார்த்து வியக்கும் சினிமா பிரபலங்களின் மேனரிசங்கள், பழக்கவழக்கங்கள் நேர்ல எப்படி பாஸு?’ என டைம்பாஸ் ஆசிரியருக்கு ஸ்டாம்ப் ஒட்டாமல் வந்த கடிதத்துக்கான பதில்தான் இது... பொதுவாக பேட்டி எடுக்க யார் போனாலும் நம் சினிமா பிரபலங்களின் ரியாக்ஷன்கள் இவை...

 

சிம்புவைப் பார்க்கப் போனால், நல்ல டீ கொடுப்பார். 'பிரதர்’ என்று அழைப்பார். கொஞ்சம் பேச்சு நீண்டுகொண்டே போனால்... வரிசை கட்டி  ஃபாரின் பிஸ்கெட்கள், ஃப்ரெஷ் ஜூஸ் என ஜமாய்ப்பார். அடிக்கடி உதட்டைக் கடித்துக்கொண்டு பேசுவது சிம்பு ஸ்டைல். (அவர் உதட்டைத்தான் பாஸ்!)

தல அஜித் லேசாய் தலையைச் சாய்த்து ஏர் இந்தியா மகாராஜாபோல நெஞ்சில் கைவைத்து வரவேற்கும் ஸ்டைலே தனி. காபி, டீ, தண்ணீர் எது வானாலும் தன் கையால் கொண்டுவந்து சர்வ் செய்வது பிடிக்கும். புன்முறுவலை வலிய வரவழைத்து எதிராளியின் எனர்ஜி ஏற்றுவது தல பாலிஸி.

தளபதி அப்படியே 'தல’க்கு ஆப்போசிட் கேரக்டர். அமைதியின் திருவுருவமாய் கேரவனுக்குள் அமர்ந்திருப்பார். ஷூட்டிங்கின்போது வெளியே வந்தால், ரசிகர்கள் கூச்சலுக்கு லேசான புன்னகையோடு ஒருமுறை கையசைத்துவிட்டு கருமமே கண்ணாக ஷூட்டிங்கிற்குள் மூழ்கிவிடுவார். பேசும்போது கையில் இருக்கும் மோதிரத்தைக் கழற்றி மாட்டிக்கொண்டே பேசுவது இவர் மேனரிஸம்.

தனுஷ் நமக்கு எதிர் சேரில் அமர்ந்து, கைகளைக் கால்களுக்கு இடையே ஒன் றாகக் கோத்துவைத்துக்கொண்டு குனிந்து உட்கார்ந்து நம் கண்களைப் பார்த்தபடி பேசுவார். எல்லோரையும் 'சார்’ என்று அழைப்பார்.

ஆர்யா செம ஃப்ரெண்ட்லி. நீண்ட நாள் பழகியதைப்போல தோளில் கைபோட்டபடி பேசுவார். கொஞ்சம் உற்சாகமானால் இடுப்பில் செல்லக் குத்துக்கள் எல்லாம் விழும். காபி ஷாப்போ, ரெஸ்ட்டாரென்ட்டோ, சாப்பிட்டுக்கொண்டே பேசுவதில் சாருக்கு ஆர்வம் அதிகம்.

ஏ.ஆர்.ரஹ்மான் பக்கா புரொஃபஷனல். பேட்டி கொடுக்க நேரம் ஒதுக்கி இருந்தால், அந்த நேரத்தில் ஆஜராகிப் பேசுவார். தேவைக்கு அதிகமாக ஒரு வரிகூட பேச மாட்டார். ஆபீஸில்தான் பேட்டிகள் தருவார் என்றாலும் தண்ணீர் கொடுக்கக்கூட அங்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள். எல்லோரும் பிஸியாக இருப்பதால் பேட்டி முடித்ததும் கிளம்பி வந்து சாமியார் மட டீக்கடையில் ஒரு டீ குடித்துவிட்டு வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.

யுவன் தொட்டாற்சிணுங்கிபோல இருப்பார். கைகொடுக்கும்போதும் அதிக அழுத்தம் இருக்காது. ஆனாலும், ரஹ்மான் பாணியில் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டிக்கொள்ளாமல் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்வார். கால்களை ஆட்டிக்கொண்டு தலையை சாய்த்துக்கொண்டே கேஷ§வலாகப் பேசுவது யுவன் ஸ்டைல்.  

ஜி.வி.பிரகாஷ் முதல் சந்திப்பிலேயே சரளமாகப் பேசுவார். 'ப்ரோ’(பிரதர் என்ற வார்த்தையின் சுருக்கம்), 'சகோ’ என உரிமையோடு பேசுவார். ஓர் இடத்தில் நிற்காமல், நடந்தபடி பேசுவார். வாக் அண்ட் டாக் பேட்டிகள் என்றால் ஜி.வி.பி-க்குப் பிரியம். சிரித்து ஜோக் அடித்தபடியே பேசுவார்.

டி.ஆரைப் பேட்டி எடுக்கப் போவதற்கு தனித் தைரியம் வேண்டும். எவ்வளவு சாஃப்ட்டாக டேக்-ஆப் ஆனாலும் லேண்ட் ஆவதற்குள் ஆப்பிரிக்கன் கானா, ஆஸ்திரேலி யன் ஆலாப், குரோஷியா குத்து என இன்டர்நேஷனல் மியூஸிக்கை தன் தோளில் தொடையில் தட்டிப் பாடிக் காட்டுவார்.  தான் இன்னும் யூத்துதான் என்பதை விளக்க லேசாக மூவ்மென்ட்ஸ் கொடுப்பார். டயர்டாகி 'பேட்டியை சீக்கிரம் முடிச்சிக்கலாம்பா’ என லேண்ட் ஆவார். இந்த கேப்பில் கிடைக்கும் பாஸ் உங்களுக்கு செம எக்ஸைட்டிங் ரேப்பர் க்ளிக்ஸ்!

-ஆர்.சரண்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்