சத்யராஜைக் கலாய்த்த சிவகார்த்திகேயன்! | வருத்தப்படாத வாலிபர் சங்கம், சிவகார்த்திகேயன். ஸ்ரீதிவ்யா, டி.இமான், சூரி

வெளியிடப்பட்ட நேரம்: 09:56 (04/09/2013)

கடைசி தொடர்பு:09:56 (04/09/2013)

சத்யராஜைக் கலாய்த்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' இந்த வாரம் ரிலீஸாக இருக்கிறது. முதன்முதலாக இந்தப் படத்துக்காக பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார் சிவா.

''அழகான கிராமத்துல நடக்குற காமெடிக்கதை இது. நான் போஸ் பாண்டி, வருத்தப்படாத வாலிபர் சங்கத்தோட தலைவர். செயலாளர் கோடியா சூரி அண்ணன் நடிச்சிருக்கார்.

ஊர்ல எந்த விசேஷம் நடந்தாலும் நாங்க தான் முதல்ல நிப்போம். பேனர், கொடின்னு ஏரியா முழுக்க எங்க ராஜ்யம்தான். அந்த ராஜ்யம் பிடிக்காம முஷ்டியை முறுக்கிட்டு நிக்குறார் சிவனாண்டி கேரக்டர்ல நடிக்குற சத்யராஜ். அதுக்கப்புறம் எங்க ரெண்டு டீமுக்கும் நடக்குற ஜாலி மோதல்கள்தான் படத்தோட கதை.

சத்யராஜ் சாரைப் பார்த்து முதல்ல கொஞ்சம் பயந்தேன். அவரே ரொம்ப சகஜமா பேசினார். ஒரு சீன்ல அவரைக் கலாய்க்கலாம்னு 'என்னம்மா கண்ணு சௌக்கியமா'ன்னு அவர் ஸ்டைல்ல சொன்னதும் ரொம்பவே ரசிச்சார். தெனாவட்டா, கெத்தா திரியுற என் கேரக்டரும், எனக்கு எதிரா இருக்குற சத்யராஜ் சார் கேரக்டரும் ரொம்ப பெருசா பேசப்படும்.

இமான் அண்ணன், 'சும்மா ட்ரை பண்ணிப் பாருங்க'ன்னு பாடச் சொன்னார். அது நல்லா இருந்தா யூஸ் பண்ணப் போறாங்க. நல்லா இல்லைன்னா விட்டுடப் போறாங்கன்னு தைரியமா பாடினேன். அதுலயும் எஸ்.பி.பி. ரேஞ்சுக்கு மூச்சுவிடாம பாடுற மாதிரி 12 வரிகள் பாடச் சொல்லி பென்ட் எடுத்துட்டாங்க. அதனால பாட்டு அவ்ளோ அழகா வந்திருக்கு. ஏற்கெனவே யு டியூப்ல வெளியாகி எல்லாருக்கும் பிடிச்சிருக்கு.

சூரி அண்ணனோட எனக்கு இது மூணாவது படம். ஹீரோயினை விட சூரி அண்ணனோட கெமிஸ்ட்ரி தான் எனக்கு நல்லா வொர்க் அவுட் ஆகி இருக்குறது ஸ்க்ரீன்லயே தெரியும்.

இந்தப் படம் யாரையும் வருத்தப்பட வைக்காது. கேப் விடாம சிரிக்கவைக்கும்'' என்கிறார் சிவகார்த்திகேயன்.

- க.நாகப்பன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்