'தன்னம்பிக்கையின் இன்னொரு பெயர் சிவகார்த்திகேயன்'

'மெரினா', 'எதிர்நீச்சல்' ஆகிய இரண்டு படங்களிலும் சிவகார்த்திகேயனுடன் காமெடி மேளா நடத்தியவர் சதீஷ். இப்போது 'மான்கராத்தே'வில் மிரட்டிக் கொண்டிருக்கும் அவர், சிவகார்த்திகேயன் குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

''நானும், சிவகார்த்திகேயனும் ஒண்ணாதான் ஃபீல்டுக்கு வந்தோம். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸ். எப்படி கதையை, சீனை டெவலப் பண்ணி நடிக்கலாம்? எப்படி பேசலாம்னு நெறைய டிஸ்கஸ் பண்ணியிருக்கோம்.

'முகப்புத்தகம்'னு ஒரு குறும்படத்துல ரெண்ணு பேரும் ஒண்ணா நடிச்சோம். அது செம ஹிட் ஆச்சு. அந்த அடையாளம்தான் 'மெரினா'வுல நடிக்கக் காரணம். அப்படியே 'எதிர்நீச்சல்' படத்துலயும் சேர்ந்து நடிச்சோம்.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' ரொம்ப கலர்ஃபுல்லான படம். நான் இந்த படத்துல நடிக்கலை. ஆனா, படம் பார்த்தாச்சு, எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. சத்யராஜ் வீட்ல சிவகார்த்திகேயன் நுழைஞ்சு பண்ற அலப்பறைகளுக்கு ஆடியன்ஸ் தியேட்டருக்கு ரிப்பீட் ஆவாங்க.

சிவகார்த்திகேயன் தினம் தினம் ஏதாவது ஒரு விஷயத்தைக் கத்துக்கணும்னு ஆர்வமா இருப்பார். உடம்பை ஏத்துறது, குறைக்குறதுன்னு கேரக்டருக்கு ஏத்தமாதிரி தன்னை மாத்திக்கணும்னு மெனக்கெடுவார். கடின உழைப்புக்கும், தன்னம்பிக்கைக்கும் உதாரணம் யார்னு கேட்டா நான் சிவகார்த்திகேயனைத்தான் சொல்வேன்.

சிவகார்த்திகேயன் வளர்ச்சியை சக நண்பனா இருந்து பார்க்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என நெகிழ்கிறார் சதீஷ்.

- க.நாகப்பன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!