'நடிகனுக்கு எது சந்தோஷம்?' - சத்யராஜ் | வருத்தப்படாத வாலிபர் சங்கம், சத்யராஜ், சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா

வெளியிடப்பட்ட நேரம்: 11:01 (04/09/2013)

கடைசி தொடர்பு:11:01 (04/09/2013)

'நடிகனுக்கு எது சந்தோஷம்?' - சத்யராஜ்

சிவகார்த்திகேயன் - ஸ்ரீதிவ்யா நடித்துள்ள 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சத்யராஜுக்கு மிக முக்கியமான வேடம். ஹீரோயினுக்கு அப்பாவாக, சிவனாண்டி கேரக்டரில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் சத்யராஜ்.

"சிவகார்த்திகேயன் குரூப், என்னை முறைச்சுக்கிட்டு இருக்குற, எப்பவும் எனக்குத் தொந்தரவு கொடுக்குற இம்சை இளவரசர்கள். அவங்களை நான் சமாளிக்குறதுதான் படத்தோட சுவாரஸ்யமான கதை.

சிவகார்த்திகேயனுக்கு மிமிக்ரி நல்லா வரும்னு தெரியும். ஆனா, என்னோட ஸ்டைல்ல  'என்னம்மா கண்ணு... சௌக்கியமா 'ன்னு சொல்லும்போது சந்தோஷமா இருந்தது.

'சென்னை எக்ஸ்பிரஸ்'ல ஷாருக், 'என்னம்மா கண்ணு... சௌக்கியமா'ன்னு சொன்னது நல்லா ரீச் ஆச்சு. ஃப்ளைட்ல மொழி தெரியாத ஒருத்தர்  'என்னம்மா கண்ணு 'ன்னு கேட்டார். ஷாருக் சொன்னது இந்தியா முழுக்க பிரபலம் ஆகும்னா, சிவகார்த்திகேயன் ஸ்டைல் தமிழ்நாட்டுக் குழந்தைகள் முழுக்கப் பிரபலமாகும்.

அடுத்தடுத்த தலைமுறைக்கு இதை அறிமுகப்படுத்துற பெருமை சிவகார்த்திகேயனை சேரும். இதைவிட வேற எதுவும் ஒரு நடிகனுக்கு சந்தோஷத்தைத் தராது" என்கிறார் சத்யராஜ். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்