'அடுத்தடுத்து சிவகார்த்திகேயனுடன் படம் பண்ண ஆசை' - மகிழ்ச்சியில் மதன்! | வருத்தப்படாத வாலிபர் சங்கம், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட், மதன், சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (04/09/2013)

கடைசி தொடர்பு:11:40 (04/09/2013)

'அடுத்தடுத்து சிவகார்த்திகேயனுடன் படம் பண்ண ஆசை' - மகிழ்ச்சியில் மதன்!

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் தயாரிக்கும் ஐந்தாவது படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்.' படம் குறித்து தயாரிப்பாளர் மதனிடம் பேசினோம்.

'' 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அழகர்சாமியின் குதிரை', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'தேசிங்கு ராஜா' என்று நான்கு படங்களை இதுவரை தயாரித்து, ரிலீஸ் செய்திருக்கிறோம்.

எங்கள் தயாரிப்பில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' ரொம்பவே முக்கியமான படம். நிச்சயம் எல்லா தரப்பு மக்களையும் ஈர்க்கும்.

இயக்குநர் பொன்ராம் இந்தக் கதையைச் சொன்னதும் சிவகார்த்திகேயன் தான் ஹீரோ என்று முடிவு செய்துவிட்டோம். சத்யராஜ் ஃபெர்பாமன்ஸ் இந்தப் படத்தில் வித்தியாசமாக இருக்கும். தியேட்டரில் கிளாப்ஸ் பறக்கும்.

எனக்கும், சிவாவுக்கும் திருச்சிதான் சொந்த ஊர். இருவரும் ஒரே ஸ்கூலில் தான் படித்திருக்கிறோம் என்பது தற்போதுதான் தெரியும்.

அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் 'மான்கராத்தே' படத்தைத் தயாரிப்பதும் நாங்கள்தான். ஓராண்டுக்கு ஒரு படமாவது சிவகார்த்திகேயனை வைத்துத் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் ' வருத்தப்படாத வாலிபர் சங்கம்' சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தும்'' - மதன் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் மகிழ்ச்சி தெரிகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்