அட... நீலிமாவா இது!? | மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், simran, soundarya, metti oli, kolangal, thenral, சிம்ரன், செளந்தர்யா

வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (23/09/2013)

கடைசி தொடர்பு:12:21 (23/09/2013)

அட... நீலிமாவா இது!?

'மெட்டி ஒலி’, 'கோலங்கள்’, 'தென்றல்’ உள்ளிட்ட மெகா சீரியல்கள்... பிறகு சிலபல சினிமாக்களில் தோழி, தங்கை போன்ற கேரக்டர்கள் (சமயங்களில் ஹீரோயினை விட இவர் பிரகாசமாக ஜொலிப்பார்!) என அழகு தரிசனம் கொடுத்துக்கொண்டிருந்த நீலிமா, சில மாதங்களாக 'நாட் ரீச்சபிள்’! என்ன... ஏது.. என்று 'அக்கறை’யாக விசாரித்தால், 'அமளி துமளி’ என்ற படத்தில் இந்த அழகிதான் ஹீரோயினாம்.

''சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு இல்லாதப்பதான் சீரியலுக்குப் போவாங்க. ஆனா, நீங்க சீரியல்ல நடிச்சு, கல்யாணம் முடிச்சு அப்புறம் சினிமானு ரிவர்ஸ்ல வர்றீங்களே..!''

''எனக்கு இப்படித்தான் நடக்கணும்னு எழுதியிருக்கு போல. நான் குழந்தை நட்சத்திரமா நடிச்ச முதல் படம் 'தேவர் மகன்’. அப்புறம் 'பாண்டவர் பூமி’, 'விரும்புகிறேன்’, 'தம்’, 'பிரியசகி’, 'சந்தோஷ் சுப்ரமணியம்’, 'நான் மகான் அல்ல’னு பல படங்கள்ல நடிச்சேன். நடுவுல கல்யாணமும் பண்ணி செட்டில் ஆகிட்டேன். ஆனா, 'நான் மகான் அல்ல’ ஷூட்டிங் சமயம் காஜல் அகர்வால்தான் என் கண்களைத் திறந்தாங்க!''  

''அப்படி என்ன சொன்னாங்க?''

''அந்தப் படத்துல நடிக்கும்போது எனக்கு நல்ல ஃப்ரெண்ட் ஆகிட்டாங்க காஜல். 'நீ ஏன் ஹீரோயினா நடிக்காம இப்படி சின்னச் சின்ன ரோல்ல நடிக்கிறே? அடுத்து நீ நடிச்சா, ஹீரோயினாதான் நடிக்கணும்’னு சொல்லிட்டாங்க. என் மத்த தோழிகளிடம் பேசினேன். அவங்களும் அது சரிதான்னு சொல்ல, எனக்கு  கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு. ரெண்டு வருஷம் பிரேக் எடுத்துகிட்டு, என் தோற்றம், பாடி லாங்குவேஜ், கூந்தல் அலங்காரம், ஸ்டைல்னு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து மாத்திக்கிட்டேன்.

இப்போ கண்ணாடியில் பார்த்தா எனக்கே என் மேல பயங்கர நம்பிக்கை வந்திருக்கு. ஸோ, ஹீரோயினா நடிக்க நான் ரெடி. எனக்கு இப்ப 24 வயசுதான் முடிஞ்சிருக்கு. அதனால சரியான சமயம்தான் இது!''

''சரி... ஜிம், பியூட்டி பார்லர், டச்சப் மட்டும் ஒரு ஹீரோயினுக்கான தகுதி ஆகிடுமா?''

''ஸ்பீல்பெர்க், குரோசோவா, ஹிட்ச்காக், பெர்க்மன், செர்ஜி ஐசன்ஸ்டீன், பஸ்டர் கீட்டன்னு நிறைய க்ளாஸிக் இயக்குநர்களின் படங்களைத் தொடர்ந்து பார்த்தேன். 'தி ஆர்ட்டிஸ்ட்’, 'கலர் ஆஃப் பாரடைஸ்’, 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’, 'பைசைக்கிள் தீவ்ஸ்’, 'ரஷோமோன்’, 'சினிமா பாரடைஸோ’ மாதிரியான க்ளாஸிக் படங்களைப் பார்த்தேன். சினிமா சம்பந்தமா நிறையப் புத்தகங்கள் படிச்சேன். ஜிம் என் உடலை மாத்துச்சு. சினிமாவும் புத்தகங்களும் என் மனசை மாத்துச்சு. ஒரு ஹீரோயினுக்கான தகுதிகள் இப்போ எனக்கு இருக்குனு நான் நம்புறேன். இந்த மாற்றத்துக்கு காஜல்தான் முதல் காரணம். தேங்க்ஸ் காஜல்!''  

''எந்த மாதிரி ஹீரோயினா நடிக்க ஆசை?''

''சிம்பிளா சௌந்தர்யா, சிம்ரன், ஜோதிகா மாதிரினு சொல்லலாம். சிம்ரன் பண்ணாத கிளாமரே இல்லை... ஆனா, அடுத்த  சீன்லயே சேலை கட்டி வந்து குத்து விளக்கேத்தி ஆச்சர்யப்படுத்துவாங்க. அப்படியொரு ஹீரோயின் ஆகணும்!''

''ஏற்கெனவே நீங்க ஹோம்லி அழகு... இப்போ மாடர்ன் பியூட்டியையும் எப்படி அப்டேட் பண்ணீங்க?''

''பீட்சா, பர்கர் மாதிரியான ஃபாஸ்ட் ஃபுட்களைத் தொடவே மாட்டேன். காய்கறி, பழங்கள் அதிகம் சாப்பிடுவேன். தியானம் பண்ணுவேன். அப்புறம் எப்பவும் ஜாலியா சிரிச்சுட்டு மனசை சந்தோஷமா வெச்சுக்குவேன். மத்த எது இல்லைன்னாலும், அந்த சந்தோஷமே நம்மளை அழகாக்கும்!''

- க.நாகப்பன், படங்கள்: ஜி.வெங்கட்ராம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close