வெளியிடப்பட்ட நேரம்: 09:38 (05/10/2013)

கடைசி தொடர்பு:09:38 (05/10/2013)

உங்க யூத் பேஸ்ட்ல வம்பு இருக்கா?

வித்தியாசம், விவகாரம்... இரண்டும் பார்த்திபனுக்கு இரு விழிகள்! 'எடக்கு மடக்கு வசனம் வேண்டாம். எதுகை-மோனை கவிதை பாணியில் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்!’ என்று அவருக்கு சவால் வைத்தோம்.

''அமைச்சரவை மாற்றங்கள்?''

''மாறுதல் ஒன்றுதான்
மாறாதது...
ஆறுதல்,
கவர்னர் இன்னும்
மாறாதது!''

''கோபாலபுரம் - தைலாபுரம்?''

''புறம் பேசாமை
நன்று!''

''2ஜி - 3ஜி?''

''எப்படிப் பார்த்தாலும்
'செல்’தான்!''

''கமலின் 'இதழ்’ வாரிசு... ஆர்யா, சிம்பு, அனிருத்?

''மன்னருக்கே 'வாய்’ப்பு
இன்னும் பிரகாசம்...
வாரிசுக்கு என்ன
அவசரம்?

அவர் உதடுவிட்டு இறங்கட்டும், ஸாரி...
பதவிவிட்டு இறங்கட்டும்
பிறகு பார்க்கலாம்!''

''சிம்பு - ஹன்சிகா..?''

''இரண்டு பெயர்களுக்கும்
இடையில் உள்ள -
ampersand logogramஐ
நோக்க நோக்க - அது
ஆதாம் ஏவாள் கடித்த
ஆப்பிளின் எச்சம்
போன்றே தோன்றுகிறது.

apple is symbol of love
simbu as ample of love !’

''நடிகர் சங்கப் பஞ்சாயத்துகள்?''

''இடிந்த பின்னும்
இடித்துக்கொண்டிருக்கிறார்கள்!
புதிதாக மார்க்கெட்டுக்கு வந்திருக்கும்
யூத் பேஸ்ட்டை கொண்டு
பூசி, ஜாயின்ட்டுகளை சரிசெய்து
கட்டடம் உயர்ந்தால் சரி!''

''உகாண்டாவில் பார்த்திபன்...''

''அங்கு நானே
வெள்ளைக்காரன்!
ஆலை இல்லாத ஊருக்கு
இலுப்பைப் பூதானே சர்க்கரை?''

''பெல்லி டான்ஸர் - சிக்ஸ் பேக் ஹீரோ..?''

''ஒண்ணு குட்டை,
இன்னொண்ணு மட்டை
ஆக, எல்லாம் ஒரே குட்டையில ஊறுன மட்டைதான்!''

''சமந்தா - சித்தார்த்...?''

''சமத்து
சமந்தா
இடைப்பட்டதால்,
புத்தன்
மீண்டும்
சித்தார்த்தன் ஆனான்!''

''நயன்தாரா..?''

''கிதாரா
சிதாரா
புல்புல்தாரா
இசைத்தால்தான்...
நயன்தாரா
இசைந்தாலே...''

''அம்மா குடிநீர்..?''

''தாயைப் பழித்தாலும்
தண்ணீரைப் பழிக்காதே - பழமொழி!
'குடி’க்கான நீராய் மிக்ஸ்
ஆகாத வரையில்
மகிழ்ச்சியே - மனைவி மொழி!''

''குஷ்பு..?''

''அழகால் கட்டிய ஆலயம் - இன்று
அறிவாலய வாசலை அலங்கரிக்கும்
கறுப்பு - 'சிவப்பு’ தோரணம்!''

- க.நாகப்பன். படங்கள்: ஆ.முத்துக்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்