''இலியானாவாவது எலியானாவாவது!'' | இலியானா, த்ரிஷா, ஸ்ருதிஹாசன், ஸ்ரேயா, பாலா, பிதாமகன், ileyana, thrisha, shruthihasan, shriya, bala, pithamagan

வெளியிடப்பட்ட நேரம்: 11:09 (15/10/2013)

கடைசி தொடர்பு:11:09 (15/10/2013)

''இலியானாவாவது எலியானாவாவது!''

இலியானா, த்ரிஷா, ஸ்ரேயா, ஸ்ருதிஹாசன் இவர்களை எல்லாம்விட தமிழ் சினிமாவில் ஸ்லிம்மாக இருப்பவர் யார்? நம்ம மனோபாலாதானே!

 

நல்ல தூக்கத்தில் இருந்தவரின் தூக்கத்தைக் கெடுத்து எடுத்த பேட்டி இது.

''நீங்க பண்ணினதுல உங்களுக்குப் பிடித்த கேரக்டர் என்ன சார்?''

''அட ஏன்பா, நான் ஃபீல்டுக்கு வந்து 40 வருஷம் ஆச்சு. 600 படத்துக்கு மேல பன்ணியாச்சு. இன்னும் முதல் பட அனுபவம், பூர்வீகம்னு அதையே கேட்குறீங்க? ஒரு அவசரத்துக்கு நடிகன் ஆன ஆள்யா நான்.''

''சரி சார், உங்களுக்குப் பிடிக்காத கேள்வி என்ன?''

''முதல்ல ஒரு கேள்வி கேட்டே பாரு, அதான். நான் 55 படத்தில் போலீஸா நடிச்சு இருக்கேன். டஜன் படங்களில் காலேஜ் புரொஃபசரா நடிச்சு இருக்கேன். 'ஏதாவது புதுசா ரோல் கொடுங் கய்யா’னு கேட்டதுக்குப் 'பிதாமகன்’ல பாலா ஒரு ரோல் குடுத்தாரு பாரு, அதை மறக்கவே முடியாது.''

''இலியானா மாதிரி ஸ்லிம்மா இருக்கீங்களே, எப்படி சார்?''

''என்னைய ஒரு நாகேஷ் கூட கம்பேர் பண்ணு. தம்பி தனுஷ் கூட கம்பேர் பண்ணு. எனக்குப் பெருமையா இருக்கும். அத விட்டுப் புட்டு இலியானா, எலியானானு... அட போப்பா''

''ஏன் சார், உங்களைச் சின்ன சிலையா செஞ்சு லேசா ஆல்டர் பண்ணினா, ஆஸ்கர் விருது மாதிரியே இருப்பீங்கதானே?''

''அப்படி என்னைய வெச்சு சிலை செஞ்சு ஆஸ்கர் குடுத்தா, சிலை செஞ்சவனையும் உதைப்பேன். குடுக்கிறவனையும் உதைப்பேன். வாங்குறவனையும் உதைப்பேன்.''

''ஏப்ரல் 1 அன்னைக்கு யாரை ஏப்ரல் ஃபூல் ஆக்கலாம்னு இருக்கீங்க?'

''ஒருத்தனை சூடாக்கி, ஒருத்தனுக்கு சந்தோஷம் தேவையா? அது எனக்குப் பிடிக்காது. சின்ன வயசில உருளைக்கிழங்குல 'ஏ.எஃப்’னு அடிச்சு அதுல இங்க் தொட்டு, சட்டையில டாட்டூ மாதிரி குத்திவுட்டு ஓடிருவானுங்க. என்னைய இம்சை பண்ணினா உங்களுக்கு சந்தோஷம்னா பண்ணிக்கங்கடானு விட்ருவேன்யா!''

அவ்ளோ நல்லவரா சார் நீங்க? அப்போ உங்ககிட்ட அந்த ஆஸ்கர் விருது கேள்வி கேட்டிருக்கக் கூடாதுதான்!

- சத்யா சுரேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்