வாட் நெக்ஸ்ட் இயக்குநர்களே? | இயக்குநர்கள், directors

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (09/11/2013)

கடைசி தொடர்பு:17:25 (09/11/2013)

வாட் நெக்ஸ்ட் இயக்குநர்களே?

சூப்பர்’, 'பிரமாதம்’, 'தரமான முயற்சி’, 'தமிழ் சினிமாவின் நம்பிக்கைப் படைப்பு’, 'பிளாக் பஸ்டர் ஹிட்’ என்றெல்லாம் அங்கீகாரங்களையும் வசூலையும் குவித்த தமிழ் சினிமா அறிமுக இயக்குநர்களின், அடுத்த மூவ் என்ன?

'மௌனகுரு’ சாந்தகுமார்:

''முதல் படம் முடிச்ச களைப்பு போகவே இவ்ளோ காலமாகிடுச்சு. 'வருஷத்துக்கு ரெண்டு படம். இவ்வளவு சம்பாதிக்கணும்’னு எந்த டார்கெட்டும் எனக்கு இல்லை. ஸ்டூடியோ க்ரீனுக்கு அடுத்த படம் பண்றது மட்டும்தான் இப்போதைய முடிவு. 'மௌனகுரு’வுக்கு சம்பந்தமே இல்லாத புது பிளாட், புது லைன்னு இது வேற ஒரு வாழ்க்கை. டிசம்பர் கடைசியில்தான் ப்ரீ-புரொடக்ஷன் வேலை பார்க்க ஆபீஸ்ல உட்கார்வேன். அதுவரை நானும் என் பேப்பர்களும் மட்டும்தான். ஒரு மாஸ் ஹீரோதான் பண்றார். அதை, தயாரிப்புத் தரப்பே முறைப்படி அறிவிக்கும்!''

'காதலில் சொதப்புவது எப்படி’ பாலாஜி மோகன்:

'' 'காதலில் சொதப்புவது எப்படி’ தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் பண்ணின படம். அடுத்த படத்தை தமிழ், மலையாளத்துக்கு ஒண்ணா பிட்ச் பண்ணியிருக்கோம். 'ஒய் நாட் ஸ்டூடியோஸ்’ சஷிகாந்த்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். மம்முட்டி சார் மகன் துல்கர் சல்மான் ஹீரோ. நஸ்ரியா ஹீரோயின். நவம்பர்ல ஷூட்டிங்!''

'மதுபான கடை’ கமலக்கண்ணன்:

''என் அடுத்த பட ஸ்கிரிப்ட்டை இப்ப எந்த வகைலயும் அடக்க முடியாதே! எழுதினவரை ரொமான்டிக் பாலிடிக்ஸா இருக்கு. எழுதி முடிச்ச பிறகு ரொமான்டிக் காமெடியாக்கூட மாறலாம். ''மதுபான கடை’ ரிலீஸாகி ஒன்றரை வருஷமாகியும் ஏன் அடுத்தப் படம் கமிட் ஆகலை’னு கேட்கிறாங்க. நாலு கேரக்டர்கள், அவங்களுக்கு ஒரு பிரச்னை. அதைச் சரிபண்ற ஒரு க்ளை மாக்ஸுனு வழக்கமான படமா இருந்தால், சுலபமா ஒரு ஃப்ரேம்ல அடக்கிடலாம். ஆனா, அப்படிப் போறபோக்கில் என்னால் படம் இயக்க முடியாது. உண்மைக்குப் பக்கத்தில் நின்னு விஷயங்களைச் சொல்ல ஆசை. அதுக்காக நிறைய ரிசர்ச், ஸ்டடி பண்ணி லைன் பிடிக்கணும். இப்போதைக்கு அப்படி ஸ்க்ரிப்ட் பண்ணிட்டு இருக்கேன். இனிமேதான் நடிகர், நடிகைகள் தேடணும்!''

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பாலாஜி தரணிதரன்:

''காலத்தால் அழியாத கலையே நல்ல கலை. அப்படியான கலையைத் தருபவனே நல்ல கலைஞன். அப்படி ஒரு கலைஞனின் கதைதான் என் அடுத்த படம். ஹீரோவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிற கதை இல்லை. படத்தின் எல்லா கேரக்டர்கள் மீதும் கதை பயணிக்கும். நடிகர், நடிகைகள் தேர்வு நடக்குது. டெக்னிக்கல் டீம், 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ டீம்தான். படத் தலைப்பு இன்னும் சிக்கலை!''

'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ மணிகண்டன்:

'' 'லட்டு’க்கு முன்னாடி நிறைய விளம்பரப் படங்கள், டாக்குமென்டரி எடுத்துட்டு இருந்தவன் நான். இப்போ மும்பையில் நேஷனல் ஜியாகிராஃபிக் சேனலுக்கான டாக்குமென்டரி  பண்ணிட்டு இருக்கேன். அடுத்த சினிமாவுக்கு என்கிட்ட ரெண்டு ஸ்கிரிப்ட் இருக்கு. ஆனா, கமர்ஷியல் ஹிட் அடிக்க, நல்ல ஹீரோ வேணும். அதுக்காகக் காத்திருக்கேன். அந்த இடைவெளியில் டாக்குமென்டரி, பயணங்கள்னு ரிலாக்ஸா பொழுது போகுது!''

'சூது கவ்வும்’ நலன் குமாரசாமி:

'' எனக்கு 'சூது கவ்வும்’ சக்சஸ் ஃபீவரே இன்னும் குறையலைங்க. அதுவும் ஷாரூக் - தீபிகாவை வெச்சு 'சென்னை எக்ஸ்பிரஸ்’ இந்திப் படம் இயக்கிய ரோஹித் ஷெட்டி, 'சூது கவ்வும்’ படத்தை இந்தியில் ரீமேக் பண்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. டிசம்பரில் கேரள ஃபிலிம் ஃபெஸ்டிவலில் ஸ்க்ரீன் பண்றதுக்கு 10 தமிழ் படங்கள் போட்டிப் போட்டுச்சு. அதில் 'சூது கவ்வும்’ தேர்வாகி இருக்கு. இப்படித் தொடர்ந்து சந்தோஷம் கவ்விட்டே இருக்கிறதால, திக்குமுக்காடிப்போயிருக்கேன். அடுத்த படத்துக்கு ஸ்கிரிப்ட் ரெடி. படம், ரொமான்டிக் காமெடி!''

'எதிர்நீச்சல்’ ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்:

''இரண்டாவது படத்துக்கும் அதே டீம்தான். சிவகார்த்திகேயனுக்கு இது புது பிளாட்டா இருக்கும். போலீஸ் கதை. அதுக்காகப் பறந்து பறந்து அடிக்கிற ஆக்ஷன் இருக்காது. காமெடி... அதோட ஓரளவுக்கு ஆக்ஷன். ஆனா, ஸ்கிரிப்ட் பரபரனு தீப்பிடிக்கும். இந்தப் படத்தையும் தனுஷ்தான் தயாரிக்கிறார்!''

'மூடர்கூடம்’ நவீன்:

''அட, இன்னும் நான் 'மூடர்கூடம்’ல இருந்தே வெளிய வரலைங்க. கல்வி நிறுவனங்கள், மாற்று சினிமா அமைப்புகள்னு தமிழகம் முழுக்க ஓடிட்டே இருக்கேன். கூத்துப்பட்டறை முத்துசாமி சார் கூப்பிட்டுப் பாராட்டினது ரொம்பப் பெரிய விஷயம். இதுக்கெல்லாம் விகடன் விமர்சனத்துக்குதான் தேங்க்ஸ் சொல்லணும். சமீபத்துல நம்ம நண்பன் ஒருத்தன் பர்மாபஜாருக்குப் போயிருக்கான். அங்கே புதுப்பட திருட்டு டி.வி.டி. விற்பனையில் 'மூடர்கூடம்’தான் லீடிங். 'ஏதோ 'மூடர்கூடம்’னு ஒரு படம் நல்லா இருக்காமே... அதைக் கொடுங்க’னு கேட்டு வாங்கிட்டுப் போறாங்களாம். படம் நல்லா இருக்குனு நியூஸ் ரீச் ஆனப்போ, படம் எந்தத் தியேட்டர்லயும் ஓடலை. 'நல்ல படத்தை மிஸ் பண்ணக் கூடாது’னு நினைக்கிறவங்களுக்கு திருட்டு டி.வி.டி. தவிர, வேற சாய்ஸே இல்லை. இப்போ படம் கலெக்ஷன் குவிக்கலையேனு நான் வருத்தப்படுறதா, இல்லை திருட்டு டி.வி.டி-ல நல்லாப் போகுதுனு சந்தோஷப்படுறதா? இதுக்கு நடுவுல அடுத்தப் படத்துக்கான கதையை முடிவு பண்ணிட்டேன். ஸ்க்ரிப்ட் வேலைகளைஆரம்பிக்கணும்!''

'நேரம்’ அல்போன்ஸ் புத்திரன்:

 ''தமிழ், மலையாளத்தில் முதல் படம் பண்ணிட்டு, ரெண்டாவது படம் இந்தியில் பண்றேன். 'ஷட்டர்’னு பேர். ஃபேமிலி த்ரில்லர். இந்த ஸ்கிரிப்ட்டை பாலிவுட்ல சில நடிகர்களிடம் படிக்கக் கொடுத்தேன். படிச்சாங்களானுகூடத் தெரியலை. 'பிடிக்கலை’னு திருப்பிக் கொடுத்துட்டாங்க. ஆனா, டிசம்பர்ல ஷூட் போறேன். அதுக்குள்ள கதை பிடிச்சு வந்தா... பெரிய ஹீரோ நடிப்பார். இல்லைனா, புதுமுகங்களை நடிக்கவெச்சுப் பண்ணிடுவேன். அந்தப் படம் முடிச்சிட்டு மறுபடி தமிழ், மலையாளத்தில் ஒரு படம் பண்றேன். அதை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார்!''

'ராஜா ராணி’ அட்லி:

'' 'புதுப்படங்கள் வெளியாகும் சமயம், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை எட்டு மணி ஷோ போடுவோம். அதுல பெரும்பாலும் ரசிகர்கள்தான் வருவாங்க. ஆனா, சமீபத்துல அந்த ஷோவுக்கு நிறைய லேடீஸ் வந்தது உங்க படத்துக்குத்தான்’னு தியேட்டர் உரிமையாளர்கள் சொன்னப்ப, எதை மனசுல வெச்சு 'ராஜாராணி’ ஸ்கிரிப்ட் எழுதினேனோ, அது கச்சிதமா நிறைவேறி இருக்குனு தோணுச்சு. இப்போ அடுத்தப் படமும் அதே ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவுக்கே பண்றேன். இதுதான் லைன்னு இப்பவே சொல்ல முடியாது. ஆனா, 'ராஜாராணி’ல இருந்து வேற கலர்ல இருக்கும். குடும்பங்களைக் கவரும் எமோஷனல் டச் நிச்சயம் இருக்கும்!''

'வணக்கம் சென்னை’ கிருத்திகா உதயநிதி:

''சிம்பிளா எடுப்போம்னு எடுத்ததுதான் 'வணக்கம் சென்னை’. அடுத்து ரொமான்ஸ், கிரைம் காமெடினு ரெண்டு கதைகள் பிடிச்சிருக்கேன். அதுல கிரைம் காமெடி கதைக்கு ஸ்கிரிப்ட் எழுதிட்டு இருக்கேன். இது 'வணக்கம் சென்னை’ மாதிரி லைட்டரா இருக்காது. அடுத்த லெவல் ஆஃப் சினிமா. ஸ்கிரிப்ட் முடிச்சப் பிறகுதான் ஆர்ட்டிஸ்ட் யார் யார்னு முடிவு பண்ணணும்!''

அனைவருக்கும், ஆல் தி பெஸ்ட்!

- ம.கா.செந்தில்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்