நயன்தாராவுக்கு அடிச்ச லக் எனக்கு அடிச்சா போதும்! | ப்ரீத்தி தாஸ், preethidoss

வெளியிடப்பட்ட நேரம்: 11:36 (15/11/2013)

கடைசி தொடர்பு:11:36 (15/11/2013)

நயன்தாராவுக்கு அடிச்ச லக் எனக்கு அடிச்சா போதும்!

பாம்பே பொண்ணுதான் என்றாலும் கோதுமையுடன் வீரமும்  விளையும் பஞ்சாப் மாநிலம் ப்ரீத்தி தாஸின் சொந்த ஊர்.

படிப்பு முடித்து விட்டு மாடலிங் முகத்தைத் தேர்ந்தெடுத்து செய்து கொண்டிருந்தவருக்கு  நடிகை என்கிற இன்னொரு முகத்தைக் கொடுத்தது  'மறுமுகம்' படம். அவருடன் ஒரு ஜாலி பேட்டி.

'' ப்ரீத்தி நடிகையான கதையைச் சொல்லலாமே?''
'' மும்பையில் மாடலிங் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது இயக்குனர் கமல் அவரது படத்திற்குக் கதாநாயகி தேடிக்கொண்டிருந்தார். எனது புகைப்படத்தைப் பார்த்து விட்டு தேர்வுக்கு (ஆடிஷன்) வரச்சொன்னார்…. நம்பிக்கையுடன் கலந்து கொண்டேன்…. ஆனால் அடுத்த மூன்று நாட்கள் ஒரே டென்ஷன் வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதா என்று… திடீரென்று ஒரு போன் இயக்குனரிடமிருந்து “உங்களை செலக்ட் பண்ணியிருக்கோம்..” என்று … இன்று அடுத்தடுத்த இரண்டு படங்கள் 'மறுமுகம்' மற்றும் 'உயிருக்கு உயிராக' வெளியாகவிருக்கிறது.

''மாடலிங்குக்கும் நடிப்பதற்கும் உள்ள வேறுபாடு?''
''மாடலிங்கில் விதவிதமான உடைகளை உடுத்திக் கொண்டு ராம்ப் வாக் மட்டும் தான் வரமுடியும் ஆனால், நடிப்பது அப்படியல்ல. கதாபாத்திரங்களுக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். காதல், ரொமான்ஸ், சோகம் இப்படி பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சவாலான துறை நடிப்புத் துறை. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.''

''லிப்  டு லிப்  முத்தக்காட்சியில் நடித்து        இருக்கிறீர்களாமே?''
  '' மறுமுகத்தில் அப்படி ஒரு காட்சி வருகிறது. முதல் படத்திலே லிப்  டு லிப் கொடுக்க வைத்துவிட்டார்கள். கதாநாயகர்களுக்கு சந்தோஷம் இருக்கலாம் . ஆனால் நமக்குத்தான் அத்தனை பேருக்கு முன்னால் கொடுக்க தயக்கமாகிவிடுகிறது. அதுவும் ஒரு டேக்கில் முடிந்தால் பரவாயில்லை. எது சீக்கிரம் முடிஞ்சிடம்னு நினைக்கிறோமோ அது இன்னும் அதிக டேக் வாங்கும். முத்தக்காட்சி பத்து டேக் போயிருக்கும். இருந்தாலும் கதைக்குத் தேவைப்பட்டதால் நடித்தேன்.

''வட மாநிலத்திலிருந்து தமிழுக்கு வந்த மூத்த நடிகைகள் குறிப்பாக பஞ்சாப்பிலிருந்து வந்திருக்கும் சிம்ரன் உங்களுக்கு அறிவுரை வழங்கினாரா?''
''இல்லை. ஆனால் சினேகாவை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். உனக்கு என்ன விருப்பமோ அதை தைரியமாகச்  செய். கிளமாரோ ஹோம்லியோ அதை அழகாகச் செய்யணும். வெறுக்கும்படி இருக்கக்கூடாது  என்று ஊக்கப்படுத்தினார்''.

''யாருடன் நடிக்க ஆசை?''
''அஜித்தை கல்யாணமே பண்ணிக்கலாம். நடிக்க  மாட்டோமா? அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அதனால் பொழச்சிப்போகட்டும்.  நடிக்க எப்போ எப்போன்னு எதிர்பார்த்திருக்கேன். ஆனா அப்படியொரு வாய்ப்பு அமையுமான்னு தெரியலை. குட் லக் டு மைசெல்ஃப்.  இருந்தாலும் எனக்கு எல்லா நடிகர்களுடனும் நடிக்கணும். அஜித், விஜய், இன்றைய டாப் நாயகர்களுடன் நடிக்கணும். நயனுக்கு அடிச்ச லக் எனக்கு அடிச்சா போதும்ங்க. ''

'' இந்தியில் நடிக்குற ஐடியா இருக்கா?
 '' ஷாருக்கான் தீபிகா படுகோன் போன்றவர்கள் தென்னிந்திய குறிப்பாக தமிழ்ப்படங்களுக்கு கொடுக்கும் மரியாதையை நான் ஏற்கனவே அறிந்து வைத்திருக்கிறேன். தமிழ்நாடு இந்திய சினிமாவின் மிகமுக்கியமான இடம். இங்கு ஜெயித்தால் போதும்.''

- வள்ளியூர் குணா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்