என்னைப் பத்தி ஏன் கிசுகிசு வர்றதில்லைனா... | priya anand, ப்ரியா ஆனந்த்

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (18/11/2013)

கடைசி தொடர்பு:10:30 (18/11/2013)

என்னைப் பத்தி ஏன் கிசுகிசு வர்றதில்லைனா...

கைவசம் சில படங்களோடு முன்னணி ஹீரோயின்கள் போட்டியில் இருக்கிறார் ப்ரியா ஆனந்த். 'வணக்கம் சென்னை’ நாயகிக்கு ஒரு வணக்கத்தைப் போட்டு அடித்த அரட்டை.

''இளம் ஹீரோக்கள் கூடவே நடிக்கிறதுக்கு ஸ்பெஷல் காரணம் எதுவும் இருக்கா?''

''இளம் ஹீரோக்களோட மட்டுமா, சின்னச் சின்ன இடைவெளியில் மூணு லேடி டைரக்டர்ஸ்கூட வொர்க் பண்ணிய ஹீரோயினும் நான்தான். இந்த மாதிரி வாய்ப்பு எல்லா நடிகைகளுக்கும் கிடைக்காது. முக்கியமான விஷயம், இப்போ நான் நடிச்சிட்டு இருக்கிற படங்களுக்கெல்லாம் 'நல்லா தமிழ் பேசுற பொண்ணு’ங்கிற காரணத்தினாலதான் செலக்ட் பண்றாங்களாம். உண்மையிலேயே நான் ரொம்ப லக்கி கேர்ள்.''

''உங்களைப் பத்தி கிசுகிசு அவ்வளவாக் கிளம்பலையே?''

''அது ஏன்னு எனக்கும் தெரியலை. இதுக்கு முன்னாடி என்கூட நடிச்சவங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகியிருந்துச்சு. அதனால அப்படி எதுவும் வர்றதுக்கு வாய்ப்பு இல்லாம இருந்திருக்கலாம். என்னைப் பத்தி கிசுகிசு வந்தாலும் எனக்கு எந்தக் கவலையும் கிடையாது. ஏன்னா, நான் மத்தவங்க மாதிரி எந்த பார்ட்டிக்கும் போறதில்லை, வெளியிலேயும் சுத்துறதில்லை. சென்னையில பாட்டி என்னோட தங்கியிருக்கிறதுனால, ஷூட்டிங் முடிஞ்சா வீடுனு இருக்கிற பொண்ணு நான். அதனால், எப்படி எழுதணும்னு நினைச்சாலும் ரெண்டு வரிக்கு மேல எழுதுறதுக்கு ஒண்ணும் இருக்காது. நோ டென்ஷன்.''

''பசங்க லவ் ஃபெயிலியர்னா தாடி வெச்சுக்கிறாங்க... பொண்ணுங்க எப்படி?''

''பொண்ணுங்க லவ் ஃபெயிலியர்னா, அவங்க வீட்டுல கல்யாணம் பண்ணி வெச்சுடுறாங்கனு நினைக்கிறேன். இவ்ளோதான் எனக்குத் தெரியும். நானும் லவ் பண்ணி, அந்த லவ் ஃபெய்லியர் ஆயிருந்தா, இன்னும் டீட்டெயிலா சொல்லியிருப்பேன்.''

''நீங்களும் அம்மாவைக் கூட்டிக்கிட்டுதான் ஷூட்டிங் போறீங்களா?''

''ஷூட்டிங் என்னோட வேலை. அதுக்கு அம்மாவையும் கூட்டிட்டு வந்தால், அம்மாவுக்கு போர் அடிக்கும்ல. தவிர, எங்க வீட்டுல என்னை சுதந்திரமா வளர்த்திருக்காங்க. தனியா நிறைய இடங்களுக்குப் போயிருக்கேன், தனியா இருந்திருக்கேன், தனியா மேனேஜ் பண்ணிக்கிற தைரியமும் இருக்கு.''

''தமிழ்நாட்டுப் பசங்க எப்படி இருந்தா பிடிக்கும்?''

''பசங்க லுங்கியில் கொஞ்சம் லோக்கலான லுக்ல இருப்பாங்க. அதே பசங்க வெள்ளை வேட்டியும், வெள்ளைச் சட்டையும் போட்டுக் கிட்டு நடந்துவந்தா, அவ்ளோ அழகா இருப்பாங்க. அதோட, வொய்ட் அண்ட் வொய்ட்ல சுமாரா இருக்கிறவங்களும் சூப்பராத்தெரிவாங்க!''

நோட் பண்ணிக்கங்கப்பா!

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close