''எனக்கு ரசிகை மன்றம் ஆரம்பிப்பாங்களா?'' | நந்திதா, nanditha

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (22/11/2013)

கடைசி தொடர்பு:13:50 (22/11/2013)

''எனக்கு ரசிகை மன்றம் ஆரம்பிப்பாங்களா?''

விஷ்ணு ஜோடியாக நடித்த, 'முண்டாசுப்பட்டி’ முடிவடைந்த கையோடு விமல் ஜோடியாக, 'அஞ்சலா’வில் ஒப்பந்தமாகியிருக்கும் நந்திதாவுக்கு, 'குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ கச்சிதமாய்ப் பொருந்துகிறது. அதே உற்சாகத்தோடு கொஞ்சம் கன்னடம், நிறையத் தமிழ்... என சிணுங்கிப் பேசிய அவருடன் ஜாலியான அரட்டையில்...

'' 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய்...’ல வர்ற பிரேயர் சாங் மாதிரி, உங்ககிட்ட யாராவது பாடியிருக்காங்களா?''

''பசங்களுக்குப் பொண்ணுங்களைத் திட்டிப் பாடுறது அவ்வளவு பிடிக்கும் போல. அதனாலதான் அந்தப் பாட்டு பெரிய ஹிட் ஆகிருக்குனு நினைக்கிறேன். ஆனா, என் முன்னாடி அப்படிப் பாடுற அளவுக்கு யாருக்கும் தைரியம் இல்லை. எனக்கே கேட்காத மாதிரி பாடியிருக்கலாம். ஏன்னா, காலேஜ் படிச்சுட்டு இருந்தப்போ, என்னை ஃபாலோ பண்ண பசங்களோட லிஸ்ட் ரொம்பப் பெருசு.''

''பார்றா... பசங்க ஃபாலோ பண்ணது ஓகே... நீங்க?''

''எனக்கு சின்ன வயசுல இருந்தே படிப்பை விட எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிட்டீஸ்ல ரொம்ப இன்ட்ரஸ்ட். அதனாலயோ என்னவோ காலேஜ் படிக்கும்போதும் சினிமா கனவோடவே இருந்துட்டேன். ஆனா, பசங்க கிரீட்டிங்ஸ் கார்ட், இ-மெயில், மெசேஜ்னு பல வழிகள்ல அப்ரோச் பண்ணியிருக்காங்க. நான்தான் சிக்கலை.''

''நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் இருக்கிற மாதிரி, நடிகைகளுக்கு 'ரசிகை மன்றம்’ வைக்க மாட்டேங்கிறாங்களே. ஏன்?''

''நீங்க சொன்னதும்தான் அந்த மாதிரி ஒரு விஷயத்தையே நான் யோசிக்கிறேன். நல்லா இருக்கே இந்த ஐடியா. அப்படி யாராச்சும் வெச்சா உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கும். இனி யாராவது கேட்டா, உடனே ஓ.கே. சொல்லிடறேன்.''

''வீட்டுல ஜாலியா அரட்டை அடிப்பீங்களா?''

''ஐயயோ... நோ சான்ஸ். இந்த நந்திதா வீட்டுல ரொம்ப சைலன்ட், வெளியே வந்துட்டா அடாவடி. ஏன்னா, அம்மா அப்பா முன்னாடி அடக்கஒடுக்கமா இருக்கணும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.''

''உங்க பர்த்டேயை எப்படிக் கொண்டாடுவீங்க?''

''ஆக்சுவலா, மத்த நடிகைகள் மாதிரி இல்லாம ரொம்ப நார்மலான கொண்டாட்டமாதான் என்னோட பர்த் டே இருக்கும். ஏன்னா, ஒவ்வொரு பிறந்தநாள் வரும்போதும், 'ஒரு வருஷம் போயிடுச்சே’ங்கிற பயம்தான் ஜாஸ்தியாகும்!''

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close