அப்போ எனக்கு சினிமா பிடிக்கலை! | poorna, பூர்ணா

வெளியிடப்பட்ட நேரம்: 09:42 (30/11/2013)

கடைசி தொடர்பு:09:42 (30/11/2013)

அப்போ எனக்கு சினிமா பிடிக்கலை!

'தகராறு’, 'ஜன்னல் ஓரம்’, 'பேசும் படம்’ எனத் தனது செகண்ட் இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறார் பூர்ணா. மூன்று படங்களுமே அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் சூட்டோடு, ''பெண்கள் ஒழுங்கா டிரெஸ் பண்ணிட்டுப் போகாததுதான் பாலியல் பலாத்காரங்களுக்குக் காரணம்'' என பரபரப்புத் திரியைக் கிழித்துப் போட்டிருக்கும் அவரிடம் பேசியதில்...

''பெண்களோட உடைதான் பாலியல் வன்முறைக்குக் காரணம்னு சொல்லியிருக்கீங்களே, எப்படி?''

''சினிமாவில நடிகைகள் போட்டிருக்கிற டிரெஸ் மாதிரி, தங்களோட டிரெஸ் இருக்கணும்னு பொண்ணுங்க ஆசைப்படுறாங்க. ஆனா, நடிகைகள் சினிமாவில்தான் அப்படி இருப்பாங்களே தவிர, வெளியே அப்படி இருக்க மாட்டாங்க. நான் என்ன சொல்ல வர்றேன்னா, சினிமா நடிகைகள் மாதிரிபொண்ணுங்க டிரெஸ் பண்ணுங்க, தப்பில்லை. ஆனா, நைட்ல வெளியே போகும்போது டீசன்ட்டா டிரெஸ் பண்ணுங்க. ஏன்னா, மோசமான மைண்ட் செட்ல உள்ள பசங்களை நாம மாத்தமுடியாது இல்லையா?''

''ஷம்னா காசிம் எப்படி பூர்ணா ஆனாங்க?''

'' 'முனியாண்டி விலங்கியல்’ படத்துல அறிமுகமாகும்போது, ஷம்னா காசிம்கிற என்னோட பேரை எல்லோரும் 'ஷாம்னா, சம்ந்தா’னு அவங்க இஷ்டத்துக்குக் கூப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. அதான் எல்லோருக்கும் ஈஸியா இருக்கட்டுமேன்னு நியூமராலஜிஸ்ட்கிட்ட கன்சல்ட் பண்ணி பூர்ணா ஆயிட்டேன். என்னோட லக்கி நம்பர் மூணுன்னு சொன்னதும் நியூமராலஜிஸ்ட்தான். அட, 'பூர்ணா’வும் மூணு எழுத்துதான். கவனிச்சீங்களா?''

''ஆக்டிங் சின்ன வயசு ஆசையா?''

''இல்லவே இல்லை. எனக்கு டான்ஸ்தான் உயிர். கிளாஸிக்கல் டான்ஸ்ல பெரிய லெவலுக்கு வரணும்னு ஆசைப்பட்டேன். அப்போவெல்லாம் சினிமா என்னோட கனவுலகூட வந்தது கிடையாது. தவிர, நான் ஒரு முஸ்லிம் பொண்ணு. என்னோட பேக்ரவுண்ட்ல யாருமே சினிமாவில கிடையாது. முக்கியமா அதுக்கெல்லாம் அழகு இருக்கணுமே. ஒரு டான்ஸ் புரொகிராம்ல நேஷனல் லெவல்ல கோல்டு மெடல் வாங்கினது பத்திரிக்கைகள்ல வந்ததைப் பார்த்துட்டுதான் ஒரு மலையாளப் படத்துல ஹீரோயின் ஃப்ரெண்டா நடிக்கிற வாய்ப்பு வந்தது. அப்பவும் எனக்கு சினிமா பிடிக்கவே இல்லை. அங்கே இருந்த லைட்டிங், வெயில், 'ஒன்மோர்’ங்கிற வார்த்தை இதெல்லாம் கேட்டு சினிமாவே வெறுத்திருச்சு. அந்தப் படத்தோட அடுத்து ஒரு வருஷம் சினிமாவில நடிக்கவே இல்லை. அப்புறம்தான் இன்னொரு நல்ல கேரக்டர் கிடைச்சது.''

''ஹோம்லி கேரக்டர்களில் மட்டும்தான் நடிப்பீங்களா?''

''எனக்குப் பாவாடை, தாவணின்னா ரொம்பப் பிடிக்கும். அதான் எனக்கு கம்ஃபர்ட்டபிளாவும் இருக்கு. தவிர நான் காஸ்ட்யூம்ல ரொம்பக் கவனமா இருக்கணும்னு நினைப்பேன். ஒரு நடிகைக்குத் தெரியும், தனக்கு எந்த டிரெஸ் ஷூட் ஆகும்னு. கவர்ச்சி டிரெஸ் எனக்குக் கண்டிப்பா செட் ஆகாது!''

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்