“அஜித்துக்கு நான்தான் வில்லன்!’ - விஜய்; ‘விஜய்க்கு நான்தான் வில்லன்!’ - அஜித் | ajith, vijay, venkatprabu, அஜித்,விஜய், வெங்கட்பிரபு

வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (07/12/2013)

கடைசி தொடர்பு:12:03 (15/10/2015)

“அஜித்துக்கு நான்தான் வில்லன்!’ - விஜய்; ‘விஜய்க்கு நான்தான் வில்லன்!’ - அஜித்

''நான், சூர்யா சார், கார்த்தி, பிரேம்ஜி, யுவன் ஷங்கர்... எல்லாருமே ஒரே ஸ்கூல், செயின்ட் பீட்ஸ். சூர்யா, எனக்கு ஒரு வருஷம் சீனியர். கார்த்தி, ஒரு வருஷம் ஜூனியர். பிரேம்ஜி, யுவன் ரெண்டு பேரும் கார்த்திக்கு ஒரு வருஷம் ஜூனியர். இதுல சூர்யா தவிர்த்து இப்ப நாங்க எல்லாருமே 'ஸ்கூல் ரீ-யூனியன்’ மாதிரி திரும்ப ஒண்ணு சேர்ந்திருக்கோம். ஸ்கூல் நண்பர்கள் திரும்ப லூட்டியடிச்சா, எவ்வளவு ஜாலியா இருக்கும். 'பிரியாணி’ அப்படி இருக்கும்!''- சூடான சூப் போல, சுவாரஸ்யமாகப் பேசுகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

''இந்தப் படம் ஒரு த்ரில்லர். அதற்குள் என் பிராண்ட் காமெடிகளும் இருக்கும். கார்த்திக்கு ஒரு பழக்கம். டிரிங்ஸ் பார்ட்டியில் கலந்துகிட்டா, கண்டிப்பா பிரியாணி சாப்பிட்டே ஆகணும். இல்லைன்னா மறுநாள் தலைவலி பின்னி, ஆள் மட்டை ஆகிடுவார். சுருக்கமா, பிரியாணி இல்லைன்னா, பிரச்னை! இந்தப் பழக்கம் அவரை எப்படி ஒரு சிக்கல்ல சிக்கவைக்குது, அதில் அவர் தப்பிக்கிறாரா இல்லையாங்கிறதுதான் படம்!''

''கார்த்திக்கு வரிசையா மூணு படங்கள் எதிர்பார்த்த அளவுக்குப் போகலை. 'பிரியாணி’, அந்த டிராக் ரெக்கார்டைத் திருப்பிப்போடுமா?''

''சார், நல்லா இருக்கணும்னு நினைச்சுதான் எல்லாரும் படங்கள் பண்றோம். வழக்கமான கதையா இருந்தாலும் இந்தப் 'பிரியாணி’ டிரீட்மென்ட் வித்தியாசமா இருக்கும். அதனால், கார்த்திக்கு இந்த 'பிரியாணி’ செம கல்லா வசூல் பண்ணும்!''

''சமீபத்தில் அஜித்தைச் சந்திச்சீங்க. அடுத்து அவரை இயக்கப்போறீங்களா?''

''என் பிறந்தநாள் அன்னைக்கு அஜித் சாரைப் பார்த்தேன். கூட கார்த்தியும் இருந்தார். படம், இயக்கம்னு எதுவும் பேசிக்கலை. ஆனா, நிச்சயமா அவரை இன்னொரு படத்தில் இயக்குவேன். நம்புவீங்களா... அதில் விஜய்யும் நடிப்பார். ஆனா,  ஒரு சின்ன சிக்கல்!''

''அஜித்-விஜய் சேர்ந்து நடிக்க சம்மதம் வாங்கியிருக்கீங்களா? சொல்லவே இல்லை! அதில் என்ன சிக்கல்?''

''ரெண்டு பேரையும் பர்சனலா பலமுறை சந்திப்பேன். அவங்க ரெண்டு பேரையும் சேர்த்துவெச்சு ஒரு படம் பண்ணணும்னு எனக்கு ரொம்ப ஆசை. அதை அவங்ககிட்டயே சொன்னேன். சொல்லிவெச்ச மாதிரி, 'தாராளமாப் பண்ணலாம் வெங்கட். ஆனா, அந்தப் படத்தில் நான்தான் வில்லன் ரோல் பண்ணுவேன்’னு ரெண்டு பேரும் ஒரே பதில் சொன்னாங்க. சும்மா விளையாட்டுப் பேச்சு இல்லை இது. அவங்க ரெண்டு பேரும் இப்படி ஒரு புராஜெக்ட்ல உண்மையிலேயே விருப்பமா இருக்காங்க. சரிசமமா ஸ்கோர் பண்ணக்கூடிய ஒரு ஸ்க்ரிப்ட் அமைஞ்சுட்டா, தைரியமா ரெண்டு பேரிடமும் கால்ஷீட் வாங்கிடுவேன்.

ஏன்னா, அஜித் சும்மா ஒரு வார்த்தையை விட மாட்டார். 'சென்னை 28’ முடிஞ்சதும், 'எனக்காகக் கதை சொல்லு’னு சொல்லி ரெண்டு பிரபல தயாரிப்பாளர்கள்கிட்ட என்னை அனுப்பி வெச்சார். ஆனா, 'இவ்வளவு பெரிய ஹீரோவை இவன் எப்படிச் சமாளிப்பான்?’னு அவங்க என்னை நம்பலை. அதனால 'சென்னை 28’க்கு அப்புறமே நான் அஜித் படம் பண்ண முடியாமப் போச்சு. ஆனா, 'மங்காத்தா’ அவரோட 50-வது படம். அதை என்னை நம்பிக் கொடுத்தார். அப்பவும் நான் வெறும் ஒன்லைன்தான் சொன்னேன். 'ஓ.கே. போகலாம்’னு சொல்லிட்டார். படப்பிடிப்பு ஆரம்பிக்கிறதுக்கு ரெண்டு நாள் முன்னாடிதான் முழுக் கதையையும் சொன்னேன். அவர் என் மேல் அப்படி ஒரு நம்பிக்கை வெச்சிருக்கார். அதனால, 'அஜித் - விஜய் இணைந்து கலக்கும்’ படத்துக்கான சிந்தனை மனசுல ஓடிட்டே இருக்கு!''

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close