“லைஃபை லைக் பண்ணுடா!”

கானா பாலா, கோடம்பாக்கத்தின் ஹிட் பாடகர். ஆனால், அவர் வசிக்கும் வடசென்னையின் புளியந்தோப்பு ஏரியாவில், அவருடைய மகள் அபிமன்யா, மகன் அபிமன்யூ இருவரும்தான் சூப்பர் சிங்கர்ஸ்!

''என் பொண்ணுக்கு நாலரை வயசு பிரதர். ஏரியால எனக்கு செம டஃப் குடுக்குறா. பையன் சங்கீதம் கத்துக்குறான். அவனுக்கு இரண்டு வயசு. ஆறு மாசத்துக்குள்ளாற நம்ம வீட்டுல இருந்து கோலிவுட்டுக்கு இன்னொரு 'கானா குயில்’ வந்துடும் பிரதர்!'' என்று சிரிக்கிறார் பாலா.

''எப்பவும் குவார்ட்டர், ஃபிகர்னே பாடிட்டு இருக்கீங்களே... இளைஞர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கிற மாதிரிப் பாட மாட்டீங்களா?'' என்று கேட்டதும், 'ஆன் தி ஸ்பாட்’ தடக்கென வந்து விழுந்தது ஒரு மெட்டு!

''வாழ்க்க ஒரு குவார்ட்டர், அதில் கலக்கு அனுபவ வாட்டர்...

அடிச்சா வரும் போதை, அதப் படிச்சா நீ மேதை...

உழைச்சாத்தான்டா நீ அம்பானி

கஷ்டப்படலைன்னா அம்போ நீ...

ரிஸ்க்கு, அது தொட்டுத் தின்னும் ரஸ்க்கு

அதைக் கோட்டை விட்டா, செய்வே நீ ரொம்ப மிஸ்டேக்கு...

வழுக்கை விழுந்துடுச்சுனா, தலையில சீப்பைப் போடாத

வாழ்க்கை கவுந்துடுச்சுனா சாகாத சாகாத...

ஜெயிக்காம சாகாத!

ஆடு, மாடு கோழியெல்லாம் ஐ.டி. கட்டுதா?

வீடு வாசல் கட்டி சொத்து சேர்க்குதா?

நாலு ஆணி, ஒரு கோணி போதும்டா...

நாமளும்தான் கெத்தா வாழ்ந்து காட்டலாம்.

ஃபேஸ்புக் இல்ல, டிவிட்டர் இல்ல,

ஷேரு பண்ண யாருமில்ல

ஆனாலும், இந்த லைஃபை லைக் பண்ணுடா

மச்சி, லைக் பண்ணுடா!''

- ஆ.அலெக்ஸ் பாண்டியன், படம்: கே.ராஜசேகரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!