விஜய்யின் புது நண்பேன்டா!

''இப்போ விஜய் சாரோட 'பெஸ்ட் ஃப்ரெண்ட்’ பட்டியல்ல மோகன் லால் சாருக்கும் ஒரு இடம் இருக்கு!'' உற்சாகத் தகவல் சொல்கிறார் 'ஜில்லா’ பட இயக்குநர் நேசன்.

''வழக்கமா இப்படி ரெண்டு மாஸ் நட்சத்திரங்களை வெச்சு படம் பண்ணும்போது பயங்கர பிரஷர் இருக்கும். ஆனா, ரெண்டு பேரோட நட்பு கெமிஸ்ட்ரி எங்களுக்கு அந்தக் கவலையே இல்லாம பண்ணிருச்சு. லால் சார் ஒரே டேக்ல ஷாட் ஓ.கே. பண்ணிடுவார். ஆனாலும், நான் ரெண்டு, மூணு டேக் கேட்பேன். அதனால என்னை 'ஒன்ஸ்மோர் டைரக்டர்’னு கிண்டலடிப்பார்.

ஒருநாள் லால் சார் குடும்பத்தை தன் வீட்டுக்கு வரவழைச்சு பிரியாணி விருந்து கொடுத்தார் விஜய். இன்னொரு சமயம் விஜய் குடும்பத்தை, தன் ஈ.சி.ஆர். வீட்டுக்கு அழைச்சு கேரள ஸ்டைல் விருந்து கொடுத்தார் லால். அங்கே வீடு முழுக்க ஓவியங்கள். காரணம், அவரே ஒரு ஓவியர். விருந்து முடிஞ்சதும், தானே வரைஞ்ச ஆறடி உயர விஜய் ஓவியத்தை ஆச்சர்யப் பரிசாக் கொடுத்தார் லால் சார். அப்போ விஜய் முகத்துல சந்தோஷத்தைப் பார்க்கணுமே... திக்குமுக்காடிப் போயிட்டார்!''

''ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் பொங்கலுக்கு விஜய் நடிக்கிற 'ஜில்லா’, அஜித் நடிக்கிற 'வீரம்’ ரெண்டும் ஒரே சமயத்துல வெளியாகுது போல...''

''நல்ல விஷயம்தானே..! கண்டிப்பா இரண்டு படங்களும் ஜெயிக்கும். திரைப்படக் கல்லூரியில் என் ஜூனியர்தான் 'வீரம்’ இயக்குநர் சிவா. ஒரே இன்ஸ்டிட்யூட்ல இருந்து வந்தவங்க இயக்கிய படம், ஒரே நாள்ல வெளியாகுறதும் சந்தோஷமான விஷயம்தானே!''

- எம்.குணா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!