காதலிக்க இடம் தரலை! | பூஜா, pooja

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (20/12/2013)

கடைசி தொடர்பு:11:20 (20/12/2013)

காதலிக்க இடம் தரலை!

'விடியும் முன்’ படத்தினால், மீண்டும் லைம்லைட்டுக்கு வந்திருக்கிறார் பூஜா. அவருடன் ஜாலி கொஞ்சம், கேலி கொஞ்சமுமாய் 50-50 பேட்டி.

''சமீபத்தில் தான் 'இயக்கியதில் பிடித்த நடிகை’னு பாலா உங்களைச் சொல்லியிருக்கார். ஆனா, உங்களை சினிமாவிலேயே பார்க்க முடியலையே?''

'' நான் சாப்பிடுற சாப்பாடு, தங்குற இடம், பண்ற டிரெஸ்னு எனக்கு வாழ்க்கை கொடுத்ததே தமிழ் சினிமாதான். கொஞ்சம் இடைவெளியினால் அந்த மாதிரித் தோணலாம். பாலா சார் எனக்குத் தந்த பெயரைக் காப்பாத்தணும்னா, நல்ல கேரக்டராத் தேர்ந்தெடுத்து நடிக்கணும். ஒரு டைரக்டர் எனக்கு போன் பண்ணி, ' 'பிகினி’யில் வர்ற ஒரு சீன் இருக்கு’னு சொன்னார். 'நான் கடவுள்’ மாதிரி ஒரு படத்தில் நடிச்சுட்டு, அந்த மாதிரி நடிக்க மனசு வருமா? அதையும் மீறி நடிச்சா, பாலா சாரோட ஆபீஸ¨க்குப் போகும்போது தலையைக் குனிஞ்சு, தயங்கித் தயங்கிப் போகவேண்டிவரும்!''

'' 'விடியும் முன்’ படத்துக்காக, 'பரதேசி’, 'தகராறு’னு ரெண்டு வாய்ப்பை மிஸ் பண்ணீங்களாமே?''

'' 'தகராறு’ டைரக்டர் கணேஷ் என் ஃப்ரெண்ட். 'நான் படம் பண்ணும்போது நீதான் ஹீரோயின்’னு சொல்லிட்டே இருப்பார். ஆனா, 'தகராறு’ படம் ஆரம்பிக்கிற சமயத்தில்தான் பாலா சார்கிட்ட இருந்து 'பரதேசி’ சான்ஸ் வந்துச்சு. உடனே கணேஷ்கிட்ட, 'பாலா சாரோட படம் என்னைக்காவதுதான் கிடைக்கும்’னு எடுத்துச்சொன்னேன். அவரும் சரின்னு சொல்லிட்டதும், 'பரதேசி’யில் தன்ஷிகா நடிச்சிருந்த கேரக்டருக்கு ரெடி ஆயிட்டேன். ஆனா, அப்போ யூனியன் பிரச்னையால் ஸ்ட்ரைக், அது இதுன்னு பல விஷயங்கள் தடுத்துட்டதால், ஷூட்டிங் தள்ளிப்போச்சு. அதுக்கிடையில் வந்த வாய்ப்புதான், 'விடியும் முன்’. கதையோட ஃபர்ஸ்ட் லைன் கேட்டதுமே மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு யோசிக்கவெச்ச படம். பாலா சாரும், 'அது புது டீம், உன்னைத்தான் நம்பியிருப்பாங்க. அவங்க நம்பிக்கையைக் காப்பாத்திடு’னு சொன்னார். இப்போ எதிர்பார்த்ததைவிடவும் அதிகப் பாராட்டுகள். பூஜா ஹேப்பி அண்ணாச்சி!''

''ஆர்யா..?''

''(சிரித்துக்கொண்டே) ஐயோ... இதை இன்னுமாங்க விடலை? எங்க ஊர்ப் பக்கமெல்லாம் 22, 24 வயசுக்குள்ளே கல்யாணத்தை முடிச்சிருவாங்க. அப்போ ஆர்யா, 'உன்னை யாரும் கல்யாணம் பண்ணிக்கலைன்னா, நான் பண்ணிக்கிறேன். கவலைப்படாதே’னு சும்மா கலாய்ப்பான். அதைத்தான் பெரிய பப்ளிசிட்டியாக்கிட்டாங்க. எதையுமே நான் சீரியஸா எடுத்துக்கலை. இப்பவும் சொல்றேன், ஆர்யா என் ஃபெஸ்ட் ஃப்ரெண்ட்!''

''ஆர்யாவை விடுங்க, வேற யாரெல்லாம் உங்களுக்கு புரபோஸ் பண்ணியது?''

''என்கிட்ட பழகின யாரையுமே நான் லவ் அப்ரோச் பண்றதுக்கு இடம் தரவே மாட்டேன். அதனால் என்னை லவ் பண்ற சான்ஸ் இதுவரை யாருக்கும் கிடைக்கலைனு நினைக்கிறேன்''

''கல்யாணம் எப்போ?''

''இதுவரை ஐடியா இல்லை. அதெல்லாம் நிதானமா யோசிச்சு முடிவெடுக்க வேண்டிய விஷயம்.''

பாப்பா உஷார்தான்!

- கே.ஜி. மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close