''சிம்பு வெட்கப்பட்டார்!'' | சார்மி, charmi

வெளியிடப்பட்ட நேரம்: 12:44 (27/12/2013)

கடைசி தொடர்பு:12:44 (27/12/2013)

''சிம்பு வெட்கப்பட்டார்!''

சார்மியைப் படங்களில் பார்ப்பதைவிட கூகுளில் 'ஹாட்’ என்று டைப் செய்தால் இமேஜாகப் பார்க்க முடிகிறது. சார்மியின் நம்பருக்கு போன் போட்டால் ஸ்விட்ச்டு ஆஃப். சில நாட்கள் கழித்து அவரே லைனுக்கு வந்தார். ஒரு வருடத்துக்கு முன் பேசும்போதே நம்பரைப் பெயரோடு ஸ்டோர் செய்துவைத்து இன்ப அதிர்ச்சி கொடுக்கிறது இந்த சார்மிங் பேபி!

''என்னாச்சு... உங்களைத் தமிழ் சினிமா பக்கமே காணலையே?''

''தமிழ்ல இருந்து இப்போதான் நல்ல ஆஃபர் வருது. சில குத்துப்பாடல்கள் சான்ஸ் வந்தது. வேணாம்னு சொல்லிட்டேன். எனக்கு சவாலான ரோல்கள் பண்ண ஆசை. அதுக்காகக் கதை கேட்கிறேன். நடுவே இந்திக்குப் போனேன். அமிதாப் கூட நடிச்ச, 'புத்தா... ஹோகா தெரா பாப்’ படம் ஆவரேஜ் தான்னாலும் நல்ல அறிமுகம் எனக்கு. சஞ்சய் தத், விவேக் ஓபராயோட நடிச்ச 'ஜில்லா காஸியாபாத்’ ரொம்ப எதிர்பார்த்தேன். பட், அது ஹிட் ஆகலை. அப்படியே மலையாளம் பக்கம் வந்தேன். மம்முட்டி கூட ஒரு படம் பண்ணிட்டுத் திரும்பித் தெலுங்குல கான்சென்ட்ரேட் பண்றேன். கூடிய சீக்கிரம் தமிழ்ல ஒரு பெரிய ரோல் பண்ணப்போறேன்.''

''ஆனாலும் தெலுங்கு சேனல்ல பாடல்களில்தான் அதிகம் உங்களைப் பார்க்க முடியுது தெரியுமா?''.

''நிறைய நட்புக்காக டான்ஸ் ஆடி இருக்கேன். எனக்கு ஒரு பாட்டுக்கு ஆடுவதில் தயக்கம் இல்லை. நாம ரீச் ஆகணும். அதான் முக்கியம். அதுக்காக வரம்பு மீறியும் நடிக்க மாட்டேன்.''

''சிம்புவின் முதல் ஹீரோயின் நீங்கதானே? இப்பவும் டச்ல இருக்கீங்களா?''

''நடுவுல டச் இல்லை. அதனால பேசலை. ஒரு ஃபங்ஷன்ல மீட் பண்ணப்போ ஆர்வமா, 'எப்படி இருக்கீங்க, உங்க லைஃப் எப்படிப் போகுது, என்ன படம் பண்றீங்க?’ன்னெல்லாம் கேட்டார். 'விண்ணைத்தாண்டி வருவாயா’ என்னோட ஆல்டைம் ஃபேவரைட். அவரைப் பாராட்டினதும் வெட்கத்தோட சிரிச்சார். சிம்பு செம டீஸன்ட். ரொம்ப எனெர்ஜெடிக்காப் பேசுவார். நல்ல கதையைத் தேர்ந்தெடுங்கன்னு சின்ஸியரா அட்வைஸ் சொன்னார்.''

''கல்யாணம் எப்போ?''

''ஒரு நேஷனல் அவார்டு வின் பண்ணினதுக்கு அப்புறம்தான்!''

- ஆர்.சரண்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்