''எனக்கு அதில் வருத்தம் இருக்கு!'' | மனிஷா, manisha

வெளியிடப்பட்ட நேரம்: 10:04 (28/12/2013)

கடைசி தொடர்பு:10:04 (28/12/2013)

''எனக்கு அதில் வருத்தம் இருக்கு!''

'வழக்கு எண் 18/9’, 'ஆதலால் காதல் செய்வீர்’, 'ஜன்னல் ஓரம்’ என்று குறுகிய காலத்தில் மூன்று படங்களை முடித்துவிட்டு, 'பட்டையைக் கௌப்பணும் பாண்டியா’ படத்தில் மனிஷா பிஸி.

''இவ்ளோ உயரமா இருக்கிறது ப்ளஸ்ஸா? மைனஸா?''

'' நான் அவ்வளவு ஹைட்டாவா இருக்கேன். 5.6-ங்கிறது பொண்ணுங்களுக்கான உயரம்தான். தவிர, உயரமா இருக்கிறது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. 'இந்தப் பொண்ணு நல்ல ஹைட்டு’னு சினிமாவில நிறையப் பேர் பாராட்டியிருக்காங்களே தவிர, 'இவ்ளோ ஹைட்டா இருந்தா சரிப்பட்டு வருமா?’னு யாருமே என்னை ரிஜெக்ட் பண்ணலை.''

''புதுமுகங்களோட ரெண்டு படம். அப்புறம் விமல், விதார்த்... அடுத்து தனுஷ், புரிஞ்சுக்கவே முடியலையே?''

''தனுஷ் கூட நடிக்கிற விஷயம் இன்னும் கன்ஃபார்ம் ஆகலை. அதனால் அதைப்பத்தி எதுவும் கேட்காதீங்க. இயக்குநர்கள்தான் என்னோட முதல் சாய்ஸ். அப்புறம் கதை, அதில் என் கேரக்டர்... இப்படி செலக்ட் பண்ணித்தான் நடிக்கிறேன். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதினு புதுசா வந்தவங்கதானே இப்போ கலக்கிட்டு இருக்காங்க? கரெக்ட்டா?''

''நியூ இயருக்கு ஸ்பெஷல் பிளான் என்ன?''

''நியூ இயரே எனக்கு ஸ்பெஷல்தான். கொஞ்சம் ரெஃப்ரெஷ் பண்ணிக்கலாம், புதுப்புது சான்ஸ் கிடைக்கும். கூடவே ரொம்ப சந்தோஷமாவும் இருக்கும். ஆனா, இந்த நியூ இயருக்கு ஷூட்டிங்குக்காக நான் ஹைதராபாத்ல இருப்பேன்னு நினைக்கிறேன்.''

''உங்க கல்லூரிக் காதல்கள் பத்திச் சொல்லுங்க...''

''பேருக்குத்தான் காலேஜ்ல சேர்ந்தேனே தவிர, சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சதால், அப்புறம் காலேஜுக்குப் போகாத கெஸ்ட் ஸ்டூடன்ட் ஆயிட்டேன். அதனால், லவ் அப்ரோச் வரலை. அதுக்கான வாய்ப்பை நானும் கொடுக்கலை. இனிமே வந்தா சொல்றேன்.''

''சினிமா நிகழ்ச்சிகளுக்கு வரும்போது சேலையிலேயே வர்றீங்களே? ஸ்பெஷல் காரணம் ஏதாவது?''

''அப்படி எதுவும் இல்லை. சேலை எனக்கு ரொம்பப் பிடிச்ச டிரெஸ். தவிர, இந்தியாவில் இருக்கிற எந்தப் பொண்ணுமே சேலை கட்டும்போது அல்ட்டிமேட் அழகாத் தெரிவாங்க.''

''மூணு படங்கள் நடிச்சிட்டீங்க, ஏதாவது வருத்தங்கள் இருக்கா?''

''ஆமாங்க. எனக்கு டான்ஸ்ல தனி இன்ட்ரெஸ்ட். ஆனா, இதுவரை நான் நடிச்ச ஒரு படத்தில்கூட முழுசா ஆடலை. முழுக்க முழுக்க டான்ஸை மையமா வெச்சு எடுக்கிற ஒரு படத்தில் நான் ஹீரோயினா நடிக்கணும்கிறது என்னோட ஆசை. அவ்வளவுதான்.''

கேட்டுக்கங்க டைரக்டர்ஸ்!

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்