எனக்கு ரசிகர் மன்றம் வேண்டாம் | தினேஷ், dinesh

வெளியிடப்பட்ட நேரம்: 10:08 (28/12/2013)

கடைசி தொடர்பு:10:08 (28/12/2013)

எனக்கு ரசிகர் மன்றம் வேண்டாம்

'அட்டகத்தி’ன்னாலே தினேஷ்தான்! அடுத்த படம் எப்போ பாஸ்? என எதிர்பார்க்க வைத்த புதுமுகம். அடுத்தடுத்து 'வாராயோ வெண்ணிலாவே’, 'குக்கூ’, 'திருடன் போலீஸ்’ என ஹாட்ரிக் அடிக்கக் காத்திருக்கும் அவரிடம் பேசியதில்...

'' 'அட்டகத்தி’ தினேஷ்னு போட்டாதான் கூகுளே உங்களைப் பத்திச் சொல்லுதே...?

''அங்கே இருந்துதானே ஆரம்பிச்சோம்.. அதனால, சந்தோஷப்படுறேன். நடிக்கிற படங்களை விட, அதை டைரக்ட் பண்ற ஆட்கள்தான் எனக்கு முக்கியம். ஸ்கிரிப்ட்டைக் கேட்கும்போதே ரெகுலரா இல்லாம, வித்தியாசமா இருந்துச்சுன்னா கண்டிப்பா ஓகே சொல்லிடுவேன். ஸ்கிரிப்ட்ல 'அட்டகத்தி’ மாதிரி இருக்க மாட்டேன்.''

''சினிமாவுல லவ் பண்ணி 'அட்ட’ ஆனது ஓகே... ஹீரோ ஆனதுக்கு அப்புறம் நிலைமையே மாறியிருக்குமே?''

''சினிமாவில் மட்டுமில்ல... சின்ன வயசுலேயே நாங்க அப்படி. எட்டாப்பு, பத்தாப்பு படிச்சுக்கிட்டு இருக்கும்போதே ஏகப்பட்ட லவ் லெட்டர்ஸ் எழுதியிருக்கேன். ஸாரி... லெட்டர் எழுத மாட்டேன். படம் வரைஞ்சு கொடுத்திருக்கேன். பிரமிட்ல இருக்கிற லேடி, மயில் படம், ரோஜா படம் வரைஞ்சு கொடுப்பேன். இதுல அதிகமா வரைஞ்சது ரோஜாதான். அப்போல்லாம் வழிச்சு சீவி, அநியாயத்துக்கு நல்ல பையனா இருக்கிறதனால டீச்சர்களுக்கே என்னைப் பிடிக்கும் ப்ரோ. அப்படி இருந்தும் எதுவும் செட் ஆகலை. கொஞ்சம் யோசிச்சுப்பாருங்களேன். 'ஈ’ படத்துல 'அந்தப் பொண்ணு என்னை ஏமாத்திட்டுப் போயிட்டா’னு டயலாக் பேசுவேன். 'ஆடுகளம்’ல 'நாங்க மவுத் கிஸ்ஸெல்லாம் அடிச்சிருக்கோம்... தெரியுமா?’னு லவ் ஃபீலிங் டலயாக் பேசுவேன். எல்லா ஃபீலிங்கும் மொத்தமாச் சேர்ந்து 'அட்டகத்தி’ ஆச்சு. இப்படி முழுக்க முழுக்க ஃபீலிங் பண்ணியே டயர்ட் ஆன ஆளுங்க நான். ஆனா, ஹீரோ ஆனதுக்கு அப்புறம் சேஞ்ச் ஆகி, ஏகப்பட்ட அப்ளிகேஷன்ஸ் வருது. ஆனா இன்னும் சைக்கிள்ல இடிச்சுக்கலை... அப்படி இடிச்சுக்கும்போது கண்டிப்பா சொல்றேன்.''

''சொல்றதைப் பார்த்தா, கல்யாணத்துக்கு ரெடியாகிட்டீங்களோ?''

''சைக்கிள்ல இடிச்சதுக்கு அப்புறம்தானே பிரதர் கல்யாணம் நடக்கும்?அதுக்கெல்லாம் இன்னும் நாலைஞ்சு வருஷம் இருக்கு. நான் இன்னும் பல ஹீரோயின்களோட டான்ஸ் ஆடலாம்னா விட மாட்டீங்க போல. நான் எப்பவுமே ஒரு விஷயத்தை நினைக்கிறேன்னா, அதுக்கு ஆப்போசிட்டாவே நடக்குது. அதனால, லவ் அண்ட் அரேஞ்டு மேரேஜா நடக்கணும்னு வேண்டியிருக்கேன்.''

''இன்னுமா ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலை?''

''ஐயயோ, வேணவே வேணாம் பிரதர்.  மத்தபடி, நமக்கெல்லாம் நிறையப் பொறுப்பு இருக்கு. ரசிகர் மன்றம் ஆரம்பிச்சு, அந்த பிரஷரையும் தூக்கி வெச்சுக்க விரும்பலை. அது எனக்கு பெர்சனலா எதையோ மிஸ் பண்ற மாதிரி இருக்கும். பைக்ல போகும்போது 'டேய் தினேஷ்டா’னு யாராவது பேசிக்கிட்டா, அவங்களைப் பார்த்து சின்னதா ஸ்மைல் பண்ணுவேன். பேசுற சூழல் இருந்துச்சுன்னா, பேசிட வேண்டியதுதான். இதுல என்ன இருக்கு?''

'' சினிமாவுல ஃப்ரெண்ட்ஸ் அதிகமாயிருப்பாங்களே?''

''இதுவரைக்கும் இல்லை. இனிமே கிடைப்பாங்கன்னு நினைக்கிறேன். நண்பர்களை விட அண்ணன்கள்தான் எனக்கு அதிகம். விஜய் சேதுபதியும் என்னையும் அண்ணன் - தம்பின்னே சொல்லலாம். அந்த அளவுக்கு அவரோட வளர்ச்சியை நானும் என்னோட வளர்ச்சியை அவரும் கொண்டாடுவோம்!''

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close