நான் பார்ட்டி கேர்ள் கிடையாது | ramya nambeesan, ரம்யா நம்பீசன்

வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (17/01/2014)

கடைசி தொடர்பு:11:12 (17/01/2014)

நான் பார்ட்டி கேர்ள் கிடையாது

 

 

'கலாய்ச்சி ஃபை...’க்கு ரசிகர்கள் கொடுத்த ஆரவார ஆதரவால் ஹேப்பி மூடில் இருக்கிறார் ரம்யா நம்பீசன். அருள்நிதியுடன் 'நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’, வைபவுடன் 'டமால் டுமீல்’ என நடிப்பிலும் பிஸி.

''இதுவரை உங்களை யாரெல்லாம் கலாய்ச்சிருக்காங்க?''

''யாருமே இல்லை. யார் யாரை, எந்த இடத்துல, எவ்வளவு டிஸ்டன்ஸ்ல வெச்சுக்கணும்னு எனக்குத் தெரியும். மறைமுகமாக் கலாய்ச்ச சிலபேரே என்கிட்ட எதையாவது சொல்லிச் சமாளிக்கப் பார்ப்பாங்க. ஏன்னா, அதுக்கெல்லாம் நான் இடம் கொடுக்க மாட்டேன்னு, என்கூடப் பழகுறவங்களுக்குத் தெரியும்.''

''அவ்வளவு டெரரான ஆளா நீங்க?''

'' 'ரம்யா’ன்னா ரம்யமான, அமைதியான பொண்ணுனுதான் அர்த்தம். அதுக்காக நான் அமைதியா இருப்பேன்னு நினைக்கக் கூடாது. ரொம்ப ஹோம்லியாவும் இல்லாம, ரொம்ப ரொம்ப மாடர்னாவும் இல்லாம நார்மலா இருக்கணும்னு ஆசைப்படுவேன். டிரெஸ்ஸிங்ல... கேரக்டர்லயும் அப்படித்தான். ஓவரா ஆட்டம் போடாத, ரொம்ப அடக்கஒடுக்கமாகவும் இல்லாத, சுறுசுறுப்பான பொண்ணுன்னு வெச்சுக்கோங்களேன்.''

''ஏன் சினிமாவை செலக்ட் பண்ணீங்க?''

''சின்ன வயசுல இருந்தே பாடணும், ஆடணும்னு ரொம்ப ஆசை. அதனாலதான் கர்னாட்டிக் மியூசிக்கும் கிளாஸிகல் டான்ஸும் கத்துக்கிட்டேன். அதுவே கொஞ்சம் கொஞ்சமா சினிமாப் பக்கமா இழுத்துட்டு வந்திருச்சு. தவிர, சினிமாவுல இருந்தா நான் விரும்பின மாதிரி ஆடிப் பாடுறதோட கொஞ்சம் நடிக்கவும் கத்துக்கலாம்ல? அதனால, கிடைச்ச வாய்ப்பை மிஸ் பண்ணாம ஹீரோயின் ஆகிட்டேன்.''

''நியூ இயர் எங்கே பார்ட்டிக்குப் போனீங்க?''

''பார்ட்டியா? ஹலோ, பக்கத்து தெருவுல இருக்கிற சர்ச்சுக்குப் போயிட்டு வந்தேன். கூட்டமும் இரைச்சலும் எனக்கு சுத்தமாப் பிடிக்காது. அதனாலேயே எந்த பார்ட்டிக்கும் ஃபங்ஷனுக்கும் நான் போறது இல்லை. தவிர, நான் பார்ட்டி கேர்ள் கிடையாது. மத்த எல்லோருக்கும் கொண்டாட்டமாகவும், சந்தோஷமாகவும் இருந்த நியூ இயர்ல நான் வீட்டுல, தனி ரூம்ல இருந்தேன். எனக்கு அந்தத் தனிமைதான் சந்தோஷம். ஏன்னா, தனிமைதான் நிறைய யோசிக்கவைக்கும். அதுல நமக்குனு ஒரு உலகத்தை உருவாக்கிக்கலாம். மனசும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும். அதனால ஷூட்டிங் இல்லாம, வீட்டுல இருக்கும் போதெல்லாம் அம்மா, அப்பா, தம்பியோட கொஞ்ச நேரம் பேசிட்டு மத்த நேரமெல்லாம் தனியாகவே இருப்பேன்.''

அதுசரி!

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்