நயன்தாரா, த்ரிஷா, சினேகா எல்லாம் என் கஸின் சிஸ்டர்ஸ்! | சங்கீதா, sangeetha, விஷால், vishal

வெளியிடப்பட்ட நேரம்: 11:07 (22/01/2014)

கடைசி தொடர்பு:11:07 (22/01/2014)

நயன்தாரா, த்ரிஷா, சினேகா எல்லாம் என் கஸின் சிஸ்டர்ஸ்!

புதுயுகம் சேனலின் 'நட்சத்திர ஜன்னல்’ நிகழ்ச்சியை, சும்மா கலகலனு நடத்தும் சங்கீதாவை ஆச்சர்யமா பார்த்தேன்.

''என்ன ரீட்டா... புதுசா பார்க்குற மாதிரி பார்க்குறே..?''

''இல்ல... தமிழ்த் தொலைக்காட்சிகளில் வரும் ரியாலிட்டி ஷோவுல சங்கீதா... சங்கீதானு ஒரு ஸ்ட்ரிக்ட் ஜட்ஜ் இருந்தாங்களே... அவங்க என்ன ஆனாங்கனுதான்.''

''அந்த ஷோவெல்லாம் பார்த்துட்டு எல்லோரும் இயல்புலயே நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்னு நினைச்சுட்டாங்க. ஒரு போட்டியோட நடுவரா அமரும்போது, எந்த சமரசமும் இல்லாம, நேர்மையான மதிப்பெண்கள் வழங்கறதுக்காக காட்டுற கண்டிப்பு அது. உடனே 'ஸ்ட்ரிக்ட் ஆபீஸர் சங்கீதாவுக்கு சிரிக்கக்கூடத் தெரியாது’னு சொல்லிட்டாங்க. இப்ப 'புதுயுகம்’ சேனல்ல 'நட்சத்திர ஜன்னல்’ நிகழ்ச்சியில நான் பண்ற ஜாலி கலாட்டாக்களைப் பார்த்துட்டு, உன்னை மாதிரியேதான் எல்லாரும் ஆச்சர்யமா பாக்கறாங்க!''

''அது சரி, இந்த நிகழ்ச்சியில நீங்க எப்படி..?''

''தனிப்பட்ட முறையில் நான் ரொம்ப சிநேகமானவ! நடிகைங்கற பந்தாவெல்லாம் இல்லாம... எல்லார்கிட்டயும் இயல்பா பேசிடுவேன். அதனாலதான் 'நட்சத்திர ஜன்னல்’ நிகழ்ச்சி நடத்துற வாய்ப்பு வந்தப்போ, 'இது நமக்கான நிகழ்ச்சி'னு தோணுச்சு. உடனே சம்மதிச்சுட்டேன்!''

''நிகழ்ச்சியில என்ன ஸ்பெஷல்?''

''திரையில் பார்க்கும் நடிகர், நடிகைகளோட கலகலப்பான இன்னொரு பக்கத்தை காட்டுறதுதான் இந்த நிகழ்ச்சி. ரொம்ப ஜாலியான ஷோ. ஒரு பெரிய ஆக்ஷன் ஹீரோ... இயல்பில் ரொம்பக் குழந்தைத்தனமா இருக்கறது; ஹோம்லி நடிகை... உண்மையில் 'க்யூட் ரவுடி’யா இருக்கறதுனு ஒவ்வொருத்தரோட மறுபக்கத்தையும் பார்க்கறது... சுவாரஸ்யமானதுதானே..?! சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் பத்தின 'கிசுகிசு’வை... அவங்க கிட்டயே நேரடியா கேட்குறதும், நிகழ்ச்சி யோட ஹைலைட். ஒரு தடவை இந்த நிகழ்ச்சிக்கு அதர்வா வந்திருந்தார். 'உங்களுக்கும் அமலா பாலுக்கும் ஒரே லவ்வாமே..?’னு கேட்டதும்... சட்டுனு அமலா பாலுக்கு போன் போட்டுட்டாரு (பேசறதுக்கு ஒரு காரணம் வேணாமா? ஹி... ஹி..!) 'அமலா... உனக்கும் எனக்கும் லவ்வுனு பேச்சு போகுதே... நீ என்ன சொல்றே?’னு கேட்க, எனக்கே கொஞ்சம் அதிர்ச்சிதான்...''

''ம்ம்ம்... அப்புறம்...?''

''இந்த அமலா பொண்ணு, 'உன்னைப் போய் யாரு லவ் பண்ணுவா?’னு கெக்கெபிக்கேனு சிரிக்க... அதர்வாவும் சேர்ந்து சிரிக்கறாரு. இன்னொரு ஷோல விக்ரம்பிரபுகிட்ட, யாருக் காச்சும் போன் பண்ணி ஏமாத்தச் சொன்னேன். 'எதிர்நீச்சல்’ சதீஷ§க்கு போன் போட்டு, 'டேய்... வண்டிய எக்குத்தப்பா விட்டுட்டேன், ஒரு லேடி போலீஸ் என்னைப் புடிச்சு வெச்சுருக் காங்க. நீ எனக்காக அவங்ககிட்ட பேசு...’னு சொல்லி என்கிட்ட மொபைலைக் கொடுத்தாரு. சதீஷ் என்கிட்ட, 'மேடம்... அவரு சிவாஜி சாரோட பேரன், பிரபு சாரோட பையன். 'கும்கி’ படம் பாத்திருக்கீங்களா..? அதுல அவர் தான் ஹீரோ!’னு பிரயத்தனப்பட்டு விளக்க, ஒரே காமெடிதான்!

போன சண்டே விஷாலோட ஷோ. அவர்கிட்ட 'சினேகா, த்ரிஷா, நயன்தாரா...’ன்னு கேட்டு முடிக்கறதுக்குள்ள 'தே ஆர் ஆல் மை கஸின் சிஸ்டர்ஸ்’னு டபால்னு பல்யடிச்சுட் டாரு. ஷோ செம்மயா போச்சு!

நானும் சினிமா ஆளுங்கறதால பெரும் பாலும் பல ஸ்டார்களைப் பத்தி எனக்குத் தெரிஞ்சுருக்கறதை எந்தத் தயக்கமும் இல்லாம தைரியமா கேள்வி கேட்க முடியுது. அதேசமயம் எனக்கு தெரியாதவங்களா வந்தா... அவங்கள பத்தின விஷயங்கள தெரிஞ்சுக்கறதுல எனக்கும் சுவாரஸ்யம்தானே!''

கலக்குங்க கலக்குங்க..!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close