ஆர்யாவைப் பார்த்து நான் மிரண்டுட்டேன்! | கார்த்திகா , karthika

வெளியிடப்பட்ட நேரம்: 11:46 (31/01/2014)

கடைசி தொடர்பு:11:46 (31/01/2014)

ஆர்யாவைப் பார்த்து நான் மிரண்டுட்டேன்!

 

 

ருண் விஜயுடன் 'டீல்’ முடிந்த கையோடு, ஆர்யா - விஜய் சேதுபதி காம்பினேஷனில் உருவாகும் 'புறம்போக்கு’ படத்தில் பிஸியாகிவிட்ட நடிகை கார்த்திகாவிடம் கொஞ்சம் ஜாலி அரட்டை.

'' 'அன்னக்கொடி’ படத்துக்கு ஏன்தான் கால்ஷீட் கொடுத்தோம்னு ஃபீல் பண்றீங்களா?''

''ஏன் ஃபீல் பண்ணனும்? ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு கனவுப் படம், கனவு கேரக்டர் இருக்கும். ரெண்டுமே ஒரே படத்துல எனக்குக் கிடைச்சதுனா, அது 'அன்னக்கொடி’தான். 100 படங்களில் நடிச்ச அனுபவத்தை அந்த ஒரு படம் எனக்குக் கொடுத்திருக்கு. தமிழ் சினிமாவோட முக்கியமான இயக்குநர் பாரதிராஜா. அவருடைய நாயகிகளில் நானும் ஒருத்திங்கிறது எவ்வளவு பெரிய சந்தோஷம்? வளர்ந்துவர்ற ஹீரோயினுக்கு இதைவிட பெரிய வாய்ப்பு கிடைக்காது.''

''புருவத்தைச் செதுக்கிறதுக்கு அதிகமா நேரம் ஒதுக்குவீங்களோ?''

'' பொறக்கும்போதே அப்படித்தாங்க. புருவத்தை செதுக்கிக்கிறதுக்கு ஸ்பெஷல் கிளாஸ் எதுவும் போறதில்லை. என் அப்பாவோட புருவம் இந்த மாதிரி ஷார்ப்பா, திக்கா இருக்கும். அம்மாவோட கண்ணு உருண்டையா, அழகா இருக்கும். அவங்களோட அழகுல கொஞ்சம் எனக்கும் கிடைச்சிருக்கு. அவ்வளவுதான்.''

''ரொம்ப உயரமா இருக்கீங்கனு சொல்லி, எந்தப் படத்திலேயாவது உங்களை ரிஜெக்ட் பண்ணியிருக்காங்களா?''

''உயரம்தான் என்னோட ஃப்ளஸ் பாயின்ட். 'புறம்போக்கு’ படத்துலகூட முக்கியமான கேரக்டர்ல நடிக்கிறவங்க ஒரே உயரத்தில இருக்கணும்னுதான், என்னை செலெக்ட் பண்ணியிருக்காங்க. இது எனக்கு முக்கியமான படம். இந்தப் படத்துல என்னோட கேரக்டரைப் பார்த்து ஷாக் ஆகப்போறீங்க.''

''ஆர்யா பிளேபாய். விஜய் சேதுபதி அமைதியான பையன். ரெண்டு பேரோட பழகும்போதும் எப்படி இருந்துச்சு?''

''விஜய் சேதுபதி கூட நான் நடிக்கிற போர்ஷன் இன்னும் ஆரம்பிக்கலை. ஆர்யா இப்போ ஹிட் லிஸ்ட்ல இருக்கிற ஹீரோ. முதல் முதல்ல அவரை 'டேப் டான்ஸ்’ பண்ணிக்கிட்டு இருக்கும்போது மீட் பண்ணேன். ஒரு படத்துல ஹீரோ மொக்கையா ஆடுறார்னா, அவருக்குத் தகுந்த மாதிரி ஸ்டெப்ஸை மாத்திக் கொடுப்பாங்க டான்ஸ் மாஸ்டர். ஆனா, எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் பரவாயில்லைனு சொன்னதோட, 'இன்னும் கஷ்டமாவே கொடுங்க’னு சொன்ன ஆர்யாவைப் பார்த்து நான் மிரண்டுட்டேன். ஹிஇஸ் அமே ஸிங்.''

''இதுவரைக் கும் உங்களைப் பத்தி கிசுகிசு வரலையே?''

''ரொம்ப நல்ல விஷயம்... 'கிசுகிசு இருந்தாதான் நடிகைகள் மக்கள்கிட்ட ஈஸியா ரீச் ஆவாங்க’னு சொன்னாங்க, எனக்கு அந்த ஈஸி ரீச் வேணாம். கிசுகிசு எழுதிடாதீங்க. ப்ளீஸ்.''

''லவ்?''

''இதுவரைக்கும் இல்லை. ஏன்னா, நான் படிச்சது கேர்ள்ஸ் ஸ்கூல்ல. காலேஜ்ல கோ-எஜுகேஷன்தான். எனக்கு பாய் ஃப்ரெண்ட்ஸ்தான் அதிகம். எல்லோருமே ஃப்ரெண் டாப் பழகிட்டதால லவ் சீனுக்கு இடம் கிடைக்கலை. அதுக்காக இப்போ யாராவது லெட்டர் கொடுத்தா, 'முதல்ல நாம ஃப்ரெண்டா இருக்கலாம்’னு சொல்லிடுவேன். அப்போதானே எஸ்கேப் ஆக முடியும்.''

''நீங்க நடிச்ச படத்தை, உங்க தங்கச்சி துளசி பார்க்கும்போதும் அவங்க நடிச்ச படத்தை நீங்க பார்க்கும்போதும் என்ன கமென்ட்ஸ் கொடுத்துப்பீங்க?''

''என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட், ஃபர்ஸ்ட் ரசிகைனா அது துளசிதான். அவ என்னோட படங்களைப் பார்க்கும்போது கேஷ§வலாத்தான் இருப்பா. அவளைப் பார்க்கும்போது எனக்குத்தான் பதட்டம்வரும்.''

''உங்களைப் பற்றி, வெளியில் அதிகம் தெரியாத விஷயம் ஏதாவது?''

''நான் ஒரு டான்ஸர்னு எல்லோருக்கும் தெரியும். நல்லா பெயின்டிங்கும் பண்ணுவேன். லண்டன்ல படிக்கும்போது ஆயில் பெயின்டிங் கத்துக்கிட்டேன். அப்பப்போ வரைவேன்... இப்போ அதுக்கும் டைம் இல்லை''

''இப்பதான் நடிக்க வந்தாங்க நஸ்ரியா... அதுக்குள்ளே அவங்களுக்குக் கல்யாணமாம். ஒரு நடிகையா இதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?''

''நல்ல விஷயம்தானே? சினிமாவுல ஹீரோயினா, நிறையப் படங்கள், நிறைய கேரக்டர்ஸ் நடிச்சுக்கிட்டே இருக்கணும்னா... இருக்கலாம்தான்.  ஆனா, கரெக்டான வயசுல கல்யாணம் நடக்கலைனா, ரொம்பக் கஷ்டம். வாழ்த்துகள் நஸ்ரியா!''

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்