விஜய்-அஜித் வரிசையில் நானும் சிவகார்த்திகேயனுமா? - மறுத்த விஜய்சேதுபதி | விஜய் சேதுபதி, vijay sethupathi

வெளியிடப்பட்ட நேரம்: 11:32 (07/02/2014)

கடைசி தொடர்பு:11:32 (07/02/2014)

விஜய்-அஜித் வரிசையில் நானும் சிவகார்த்திகேயனுமா? - மறுத்த விஜய்சேதுபதி

பிப்ரவரி 1 அன்று கலகல ஜிகுஜிகு ஜாலி ஹோலிப் பண்டிகையாய் நடந்து முடிந்தது 'பண்ணையார் விருந்து!’ ஆயிரக்கணக்கான வாசகர்கள் அனுப்பிய எஸ்.எம்.எஸ். மற்றும் விஜய் சேதுபதி பற்றிய நச் கமென்ட்ஸ் அடிப்படையில் வாசகர்களைத் தேர்ந்தெடுத்து விருந்துக்கு அழைத்திருந்தோம்.விஜய் சேதுபதியுடன் விருந்து சாப்பிட வந்த டைம்பாஸ் வாசகர்கள்-கம்-ரசிகர்கள் அத்தனை பேரும் ஹேப்பி அண்ணாச்சி!

விழாவுக்கு வந்த வாசகர்களை டைம்பாஸ் டீமோடு 'பண்ணையாரும் பத்மினியும்’ படக்குழுவினரும் இணைந்து வரவேற்றனர். படத்தின் இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார், ''படம் உங்க மனசில நிற்கும் கதையாக இருக்கும். நிச்சயம் ஒரு நல்ல சினிமா பார்க்கிற உணர்வைக் கொடுக்கும்'' என்றார் சுருக்கமாக.

படத்தில் விஜய் சேதுபதிக்கு முதலாளியம்மாவாக செல்லம்மாள் என்ற பாத்திரத்தில் துளசி நடித்திருக்கிறார். ''கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர்ல வந்து பலரின் கவனத்தைப் பெற்ற குறும்படம்தான் இந்தப் படம். பண்ணையாருக்கு ஜோடி பத்மினி அல்ல. நான்தான்'' என்றார் சிரிப்புடன்.

'ரம்மி’ படத்தைத் தொடர்ந்து 'பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் ஹிட் ஹீரோவோடு ஜோடி சேர்ந்த பெருமிதம் முகத்தில் தெரிந்தது ஹீரோயின்  ஐஸ்வர்யாவுக்கு. விஜய் சேதுபதி ஹாலுக்குள் நுழைந்தவுடனே 'குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்று வாசகர்கள் உற்சாகக் குரல் எழுப்பினார்கள். ''உங்களைப் பார்த்ததில் நான்தான் ஹேப்பி அண்ணாச்சி'' என்றார் விஜய் சேதுபதி. வாசகர்கள் விஜய் சேதுபதியிடம் கேட்ட கலகல ஜாலி கேள்வி பதில்கள் இவை....

'' ஹீரோவா நடிச்சுட்டு இருக்கிறப்பவே எப்படி 'சுந்தரபாண்டியன்’ மாதிரி நெகட்டிவ் ரோல்ல நடிக்கிறீங்க சார்?''

''அந்தப் படத்தோட கேமராமேன் பிரேம்குமார் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். அவர் ஒருநாள் பேசிக்கிட்டு இருக்கிறப்போ விஜய் சேதுபதி லுக்ல ஒரு வில்லன் இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னார். நானே நடிச்சிடுறேன்னு வான்ட்டடா போய் அந்த கேரக்டரை வாங்கிப் பண்ணினேன்.  எனக்கு நெகட்டிவ் ரோல் பண்ணனும்னு ரொம்ப நாள் ஆசை. அந்தப் படத்துல அது நிறைவேறிடுச்சு. முழுக்க முழுக்க நெகட்டிவ் ரோல்ல நடிக்க வாய்ப்பு வந்தா தாராளமா நடிக்கக் காத்திருக்கேன். எனக்கு வில்லன் கேரக்டர்ல நடிக்கிறதுன்னா ரொம்பப் பிடிக்கும். நம்ம எல்லோருக்குள்ளும் கெட்டவங்கதான் அதிகம். ஆனா நல்லவங்களா காட்டிக்க ரொம்ப முயற்சி செய்வோம்'' என்று முதல் கேள்வியிலேயே சேதுபதி சிக்ஸர் அடிக்க, அடுத்தடுத்த கேள்விகளில் எதிர்பார்ப்பு எகிறியது.

'' 'ப்ப்ப்ப்ப்பா££...’ இந்த எக்ஸ்பிரஷன் நீங்க 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படத்துல யூஸ் பண்ணி செம பிராண்டாவே ஆகிடுச்சு. அண்மையில் விஜய், அஜித் ரெண்டு பேருமே தங்களோட படத்துல அந்த எக்ஸ்பிரஷனை யூஸ் பண்ணி இருந்தாங்க. அதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க?''

''ஹைய்யோ... அது அவங்களோட பெருந்தன்மைங்க. நேத்து வந்தவனோட டயலாக்கை நாம பேசி நடிக்கணுமானு ரெண்டு பேரும் யோசிக்கலை.  அதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும்.''

''ஏன் அண்ணா இவ்ளோ சிம்பிளா இருக்கீங்க?  நடிகர்னா கூலிங் கிளாஸ்லாம் மாட்டிக்கிட்டு பந்தாவா வருவாங்க. நீங்க ரப்பர் செருப்போட வந்துருக்கீங்க?' என்று ஒருவர் ஏகத்துக்கும் நெகிழ, அவரை இடைமறித்த விஜய் சேதுபதி, ''இந்தச் செருப்பு 2,000 ரூபா பாஸ். எனக்கு ஷூ போட்டா வசதியா இருக்காது. அதுக்காகத்தான் செருப்புப் போடறேன். இப்படித்தான் எல்லோரையும் ஏகத்துக்கும் பாராட்டிடறீங்க'' என்று  விஜய் சேதுபதி சொல்லவும் கூட்டத்தில் சிரிப்பலைகள்.

''அஜித், விஜய்க்கு அப்புறம் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்னு இப்போ இண்டஸ்ட்ரியில் பேசிக்கிறாங்க. இதை எப்படிப் பார்க்குறீங்க?'' என்றார் ஒரு வாசகர்.

''ரஜினி -கமல், அஜித் - விஜய்னு இனிமே ரெண்டு ஹீரோ காம்பெடிஷன் இருக்காது. திறமையானவங்க இப்போ இங்கே நிறையப் பேர் இருக்காங்க. 'அட்டகத்தி’ தினேஷ், 'பரதேசி’ அதர்வால ஆரம்பிச்சு ஏகப்பட்ட நடிகர்கள் இப்போ வெரைட்டியாப் பின்னி எடுக்குறாங்க. இங்கே ரெண்டு பேரெல்லாம் பத்தாதுங்க. இந்தி டிரெண்ட் போல நிறையப் பேரு வரட்டும். வந்தாதான் சினிமாவுக்கும் நல்லது.''

''கதைக்காக விஜய் சேதுபதி நடிக்கிறதுபோய், விஜய் சேதுபதிக்காக கதை சொல்ற காலம் எப்போ?''

''கதைக்காகத்தான் விஜய் சேதுபதி. அப்படி இருக்கிறதுதான் எனக்கு நல்லது. இப்போ இந்த ஃபங்ஷன்ல சுவாரஸ்யமாப் பேசலைனு வைங்க... 'டே இவன் மொக்கைடா’னு அசால்ட்டா சொல்லிட்டுப் போய்ட்டே இருப்பீங்க. கதைதான் உங்களை ஈர்க்கும். என் படத்துக்கு வந்துட்டு 'ஏன்டா வந்தோம்’னு ஆகிடக் கூடாது. அதனாலதான் நெகட்டிவ் கேரக்டரைக்கூட நானா கேட்டுப் பண்றேன். கதையைக் கேட்டு அந்தக் கதைக்குள்ளே என்னைப் பொருத்திக்க முடியுமானு பார்த்துதான் ஓ.கே. சொல்றேன். இனியும் அப்படித்தான்''

- இப்படி போய்க்கொண்டிருந்த கேள்வி பதில் செக்ஷன் இரண்டு மணியை நெருங்க,  ''வாங்க எல்லோரும் சாப்பிடப்போகலாம். உங்க எல்லோர் கூடவும் போட்டோ எடுத்துட்டு உங்களை அனுப்பி வெச்சுட்டுதான் நான் கிளம்புவேன்'' என்று விஜய் சேதுபதி சொல்லவும் நெகிழ்ந்தனர் அனைவரும். சொன்னது மட்டும் அல்லாமல் வந்த அனைவருடனும் பெர்சனலாகப் பேசி நலம் விசாரித்துக்கொண்டிருந்தார்.  'பண்ணையாருக்கும் பத்மினிக்கும் மகனாய் பிறந்து தென்மேற்குப்பருவக்காற்று வீசும் ஊரில் சுந்தரபாண்டியனோடு ரம்மியாடி சூது கவ்விய சங்குத் தேவனே இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’ என ஒருவர் கவிதை வாசிக்க... ''என் மகனோட க்ளாஸ்மேட்ஸ் எல்லோரும் விஜய் சேதுபதியோட ஃபேன்ஸ். 48 பேரும் 'எங்களுக்கும் ஆட்டோகிராப் வாங்கிட்டு வாடா’னு அனுப்பிவெச்சிருக்காங்க பாருங்க'' என்று ஒரு வாசகர் நோட்டைக் காட்ட,

''இதுதான் சார் எனக்கு ஆஸ்கர்... படத்தோட சக்சஸ் மீட்டையும் இங்கே வெச்சுட்டு உங்களைத் திரும்ப சந்திக்கிறேன்!'' என எல்லோரையும் அன்போடு வழியனுப்பிவிட்டுக் கடைசியாகக் கிளம்பிப் போனார் விஜய் சேதுபதி!

விழாவைப் பத்தி சுருக்கமாச் சொல்லணும்னா சூப்பர்ஜி... சூப்பர்ஜி!

- ஆர்.சரண்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்