இந்த அப்ரோச் பிடிச்சிருக்கா? | kaadhal, காதல்

வெளியிடப்பட்ட நேரம்: 11:49 (15/02/2014)

கடைசி தொடர்பு:11:49 (15/02/2014)

இந்த அப்ரோச் பிடிச்சிருக்கா?

பிப்ரவரி 14. உலகக் காதலர் தினம்... ஃபர்ஸ்ட் டைம் காதலை சொல்லப்போறவங்க காலாகாலத்துக்கும் கிரீட்டிங்ஸ் கார்டையும் முட்டி போட்ட காலோட ஒற்றை ரோஜாவையும் நீட்டாம, புதுசா எப்படி அப்ரோச் பண்ணலாம்னு ஐடியா சொல்றாங்க நம்ம நடிகைகள். இலவச இணைப்பா அவங்களுடைய 'ஃபர்ஸ்ட் லவ் எக்ஸ்பீரியன்ஸும்’ உங்களுக்கே உங்களுக்காக...

'அட்டகத்தி’ நந்திதா:  ''இப்போ இருக்கிற பசங்களுக்கும் பொண்ணுங் களுக்கும் நாம ஐடியா சொல்ல வேண்டிய அவசியமில்லை.  லெட்டர் கொடுத்தோ, ரோஜாவை நீட்டினாலோ யாராவது ஒருத்தர் பார்த்துட்டு போட்டுக் கொடுத்துடுவாங்க. அது மட்டுமில்லாம, அது எவிடென்ஸாவும் ஆகிடும். அதனால, இப்போதைய டிரெண்டான ஃபேஸ்புக், ட்விட்டரையே லவ் அப்ரோச்சுக்கும் ஃபாலோ பண்ணலாம்.  நல்ல பதில் கிடைச்சாலும் சரி, 'அக்கா தங்கச்சியோட பொறக்கலையா’னு அசிங்க அசிங்கமா அர்ச்சனை விழுந்தாலும் சரி... எல்லாமே டெக்ஸ்ட்டாவே வரும். அதையும் மீறி, 'இரு... எங்க அப்பாகிட்ட சொல்றேன்’னு அந்தப் பொண்ணு கிளம்பினாலும் அக்கவுன்டை குளோஸ் பண்ணிட்டுக் கிளம்பிடலாம். சக்ஸஸ் ஆயிட்டா, என்ன கிஃப்ட் கொடுக்கலாம்னு தானாகவே ஐடியா வந்துடும். எப்படி என் ஐடியா?

ஃபர்ஸ்ட் லவ் அப்ரோச்... நான் அஞ்சாவது படிக்கும்போது, ஏழாவது படிக்கிற பையன் சொன்னது. ஒரு மோதிரத்தை வெச்சுக்கிட்டு, கையில இருக்கிற பேப்பர்ல ஏதோ எழுதி, என்கிட்ட கொண்டுவந்து நீட்டினான். நான் அதை வாங்கிக்காம, அழுதுக்கிட்டே ஹெட் மாஸ்டர்கிட்ட போட்டுக் கொடுத்துட்டேன். அந்தப் பையனுக்கு சரியான அடி. இப்போ நினைச்சாதான் பாவமா இருக்கு. ஹெட் மாஸ்டர்கிட்ட சொல்லாம இருந்திருந்தா, அடி வாங்காமலாவது இருந்திருப்பான்!''

ப்ரியா ஆனந்த்: ''இதுவரைக்கும் எத்தனை தமிழ் சினிமா வந்துச்சோ, அத்தனை தமிழ் சினிமாவிலேயும் எப்படியெல்லாம் லவ் அப்ரோச் பண்ணலாம்னு சொல்லிக்கொடுத்துட்டாங்க. அதனால, கண்டிப்பா சாக்லேட்டையும் ரோஜாப்பூவையும் நீட்டாம வித்தியாசமாதான் அப்ரோச் பண்ணுவாங்கங்கிறது என்னோட நம்பிக்கை. அப்ரோச் பண்ணுங்க, ஓகே ஆச்சுன்னா, அந்தப் பொண்ணே உங்களுக்கு கிஃப்ட்தான்.

உண்மையிலேயே இதுவரைக்கும் எனக்கு லவ் அப்ரோச் வந்ததே இல்லை. நார்மலா எல்லாப் பொண்ணுங்களுக்கும் கிடைக்கவேண்டிய விஷயம்தான் இது.  கிடைக்கலைங்கிறது  கொஞ்சம் வருத்தம்தான்!''

மோனிகா: ''வித்தியாசமா அப்ரோச் பண்ணனும்னா, லவ் பண்ற பொண்ணோட அம்மா, அப்பாகிட்டேயே 'அந்நியன்’ அம்பி ஸ்டைல்ல சொல்லிடுங்க. அதுதான் பெஸ்ட் சாய்ஸ். ஏன்னா, கஷ்டப்பட்டு லவ் பண்ணி, அதை வீட்டுக்குத் தெரியாமக் காப்பாத்தி, என்னைக்காவது போட்டு உடைக்கிறதைவிட இது சூப்பரான ஐடியா. நல்லதோ கெட்டதோ, ஆன்சர் அடுத்த செகண்டே கிடைச்சுடும்.  ஏற்கெனவே லவ் பண்ணிக்கிட்டு இருக்கிறவங்க கிஃப்ட் கொடுத்தே ஆகணும். லேட்டஸ்ட்டா எல்லா நகைக் கடையிலேயும் கோல்டு, பிளாட்டினம்ல சின்னதா தாஜ்மஹால் செஞ்சு தர்றாங்க. காஸ்ட்லியான கிஃப்ட்டா இருக்குமோனு பயந்துடாதீங்க. ஒரு கிராம் கோல்டுல கூட இது கிடைக்கும். தவிர, நம்ம போட்டோவையும் ஒரு கிராம் நகையில ஆர்ட்டா தீட்டிக் கொடுக்கிறாங்க. இந்த கிஃப்ட்டை வாங்கிக் கொடுத்தீங்கனா வித்தியாசமான கிஃப்ட்டா இருக்கும்.

மத்தபடி, என்னோட ஃபர்ஸ்ட் லவ் எக்ஸ்பீரியன்ஸ் 8-ம் வகுப்பு படிச்சப்போ நடந்தது. ஒண்ணு இல்லை... ஒரே நேரத்துல மூணு. முதல்ல சொன்னவன் ஸ்ட்ரெய்ட்டாவே 'ஐ லவ் யூ’ சொல்லிட்டான். ரெண்டாவதா சொன்னவன், சைக்கிள்லேயே ஃபாலோ பண்ணி வந்தான். எனக்கும் அவனை லவ் பண்ணனும்னுதான் ஆசை. ஆனா, எங்க அப்பாவும் நான் படிச்ச ஸ்கூலும் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால அது நடக்கவேயில்லை.

இன்னொருத்தன் நான் படிக்கிற டியூஷன் வழியா ஃபாலோ பண்ணான்.  வீட்டுக்குத் தெரிஞ்சு பெரிய பிரச்னையாகி, அவன் அப்ரோச் பண்ணாமலேயே போயிட்டான். தட்ஸ் ஆல்!''

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்