Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

சினிமா அவ்வளவு ஈஸி இல்லை!

''ஒருநடிகனுக்கு, மூணாவது படத்துலயே உச்சம் தொடுற அளவுக்கு நல்ல பேர் கிடைக்கிறது சாதாரண விஷயம் இல்லை. எனக்கு அது கிடைச்சதுக்குக் காரணம் பாலா சார். கொஞ்ச நாள் அந்த சந்தோஷத்தை அனுபவிச்ச பிறகு யோசிச்சுப் பார்த்தா, எனக்கு பொறுப்பு ஜாஸ்தியாகி இருக்குனு தோணுது. இனி என் படங்களைப் பத்தி நானே பேசாம, ஆடியன்ஸைப் பேசவைக்கணும்!''  - குறுகுறு கண்களும் கன்னக்குழி சிரிப்புமாக அதர்வாவிடம் பேசும்போதே நமக்கும் உற்சாகம் ஒட்டிக்கொள்கிறது.

'' 'பரதேசி’ படத்துக்காக உங்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. அதில் எதுவும் வருத்தம் உண்டா?''

''நான் தேசிய விருது எல்லாம் எதிர்பார்க்கலை. ஆனா, பாலா சாருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்னு எதிர்பார்த்தேன். அவருக்கு விருது கிடைக்காமப்போனதில்தான் எனக்கு வருத்தம்!''

''ஃபீல்டுக்கு வந்து நாலு வருஷத்தில் மூணே படங்கள்தான்... இந்த ஸ்பீடு போதுமா?''

''எல்லா ஹீரோக்களுக்கும் வருஷத்துக்கு மூணு படம் பண்ணணும்னுதான் ஆசை இருக்கும். ஆனா, நான் பண்ற படங்கள் அப்படி சின்ன கேப்ல முடிக்க முடியாததா இருக்கு. 'பாணா காத்தாடி’க்கு ஷூட்டிங் நாட்கள் கம்மி. ஆனா, முதல் படம் என்பதால், ரிகர்சல் அதிகம் எடுத்துக் கிட்டேன். 'முப்பொழுதும் உன் கற்பனைகள்’ டெக்னிக்கலா நேரம் எடுத்துக்கிச்சு. 'பரதேசி’ பட லுக் காரணமா, மத்த படங்களில் நடிக்க முடியலை. இப்போ நான் ஓடவேண்டிய நேரம் வந்திருச்சு. அதான் 'ஈட்டி’, 'இரும்புக் குதிரை’னு வரிசையா கமிட் ஆகியிருக்கேன்!

இதுல ஒவ்வொண்ணும் 'பரதேசி’க்கு சம்பந்தமே இல்லாத படங்கள். 'இரும்புக் குதிரை’யில் பைக் ரேஸர் கேரக்டர். 'ஈட்டி’யில் அத்லெட் கேரக்டர். படம் முழுக்க ஓடிட்டே இருக்கணும். என்னை நீங்க அத்லெட்னு நம்பணும்கிறதுக்காக, சிக்ஸ்பேக் வெச்சிருக்கேன்!''

'' 'இதயம் பார்ட்-2’ படம் எடுத்தா நடிப்பீங்களா?''

''என்ன கதை, கான்செப்ட்னு தெரியணும். 'இதயம்’ அப்பாவுக்கு பெரிய அடையாளம் கொடுத்த படம். பெரிய அளவில் பேசப்பட்ட படம். அதை பீட் பண்ற அளவுக்கு நல்ல கதை கிடைக்கணும். 'இதயம்’ படத்தைவிட 'இதயம் பார்ட்-2’ கதை நல்லா இருந்தா, கண்டிப்பா நடிப்பேன்!''

''ஜனனி அய்யரோட சம்திங்... சம்திங், ப்ரியா ஆனந்த் உங்களைக் கலாய்ச்சுட்டே இருக்காங்கனு ஏதேதோ கேள்விப்படுறோமே!''

''அதெல்லாம் கிசுகிசு அளவுக்குக்கூட வொர்த் இல்லைங்க. சமந்தா, அமலா பால், ஜனனி அய்யர், ப்ரியா ஆனந்த்... இவங்க எல்லாரோடவும் நடிக்கும்போது ஃப்ரெண்ட்லி டச் உண்டு. ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, 'ஹாய்... ஹலோ’கூட சொல்லிக்கிறது இல்லை. ப்ரியா செம சேட்டை. 'இரும்புக் குதிரை’ செட்ல கஷ்டமான ஒரு சீன். அதுக்கு எட்டு டேக் ஆகும்னு நான் சொன்னேன். 10 டேக் மேல போகும்னு ப்ரியா பெட் கட்டினாங்க. 12 டேக் போச்சு. அதான் சைக்கிள் வாங்கித் தரணும்னு என்னைக் கலாய்ச்சுட்டு இருந்தாங்க. வேற ஒண்ணும் இல்லை!''

''முரளி பையனா இருந்துக்கிட்டு லவ் பண்ணலைனா எப்படி?''

''இப்போ எதுவும் தோணலைங்க. சினிமாவில் இன்னும் டிராவல் பண்ணவேண்டியது நிறைய இருக்கு. இப்போதைக்கு என் சினிமா கேரியர் மேல மட்டும்தான் எல்லாக் கவனமும். 24 வயசுதானே ஆகுது. இன்னும் கொஞ்ச வருஷம் போகட்டும். ஒட்டுமொத்தமாத் தீபாவளி கொண்டாடிடலாம்!''

''முதல் படத்துக்கும் மூணாவது படத்துக்கும் இடையிலான சினிமா பத்தின உங்க ஐடியா எந்த அளவுக்கு மாறியிருக்கு?''

''ஒரு கதை இருந்தா, அந்த கேரக்டர் தானா டெவலப் ஆகிடும்னு ஆரம்பத்துல நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, சுவாரஸ்யமான, சவாலான ஒரு கேரக்டர் இருந்தா, அதைச் சுத்தி பிரமாதமான கதை பிடிச்சிடலாம்னு 'பரதேசி’யில் நடிச்ச பிறகு தெரிஞ்சுக்கிட்டேன்.

அதே மாதிரி க்ளோசப் ஷாட்ல என்ன நடிச்சுட முடியும்னு முன்னாடி நினைப்பேன். ஆனா, வைட் ரேஞ்ச்ல எடுத்த ஒரு ஷாட்டுக்கு, முக ரியாக்ஷன்களை மட்டும் க்ளோசப்ல எடுக்கும்போது, எக்கச்சக்கமா பெர்ஃபார்ம் பண்ண வேண்டியிருக்கும். அந்த வித்தியாசத்தை இப்போ தெளிவாப் புரிஞ்சுக்கிட்டேன். சினிமா அவ்வளவு ஈஸி இல்லை சார்!''

- க.நாகப்பன், படம்: கே.ராஜசேகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement