அப்பா கூப்பிட்டா அரசியலுக்கு வருவேனா? | varalakshmi, வரலட்சுமி

வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (21/02/2014)

கடைசி தொடர்பு:14:37 (21/02/2014)

அப்பா கூப்பிட்டா அரசியலுக்கு வருவேனா?

இப்போ வரலட்சுமி ஹேப்பி அண்ணாச்சி. இருக்காதா பின்னே? இயக்குநர் பாலாவின் புதிய படத்தில் ஸ்ரேயாவுக்குப் பதிலாக வரலட்சுமி.

''ஸ்ரேயா நடிக்கிறதா இருந்த கேரக்டர்ல நீங்க எப்படி?''

'' என்னை லுக் டெஸ்ட்டுக்கு வரச் சொன்னாங்க, போனேன். 'நீதான் 'கரகாட்டக்காரி’னு சொல்லிட்டார் பாலா சார். மத்தபடி, இந்தப் படத்துல ஸ்ரேயா கமிட்டானதும் எனக்குத் தெரியாது, ரிஜெக்ட் ஆனதும் தெரியாது.''

''வழக்கம்போல் 'இதுதான் என் 'கனவுப் படம்’னு சொல்வீங்களே?''

''சினிமாவில் இருக்கிற எல்லோருக்குமே பாலா சாரோட படத்துல நடிக்கிறது 'கனவுப் படம்’தான். பாலா சாருக்காகவும் அவருடைய படத்துக்காகவும் என்ன வேணும்னாலும் பண்ணுவேன். இன்னொரு சந்தோஷமான விஷயம்... கிளாஸிக்கல், ஹிப்ஹாப், சல்சானு பல விதமான டான்ஸ் கத்துக்கிட்ட நான், முதல் முறையா இந்தப் படத்துக்காகக் கரகாட்டம் கத்துக்கப்போறேன்.''

''ஹீரோயினா நடிச்ச முதல் படம் லேட், ரெண்டாவது படம் ரிலீஸே ஆகலை. ஏன்?''

''என் படங்கள் ரிலீஸாகாம இருக்கிறதுக்கு நான் காரணம் இல்லையே? சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரைத்தான் கேட்கணும். அதே சமயம், 'மதகஜராஜா’ படம் ரிலீஸானா, எனக்கு ஒரு திருப்புமுனையைக் கொடுக்கும்.''

''ஃபளைட்ல இருந்து பாராசூட்ல குதிக்கிறது, டான்ஸ், ஆக்டிங்னு ஆல் ஏரியாவிலேயும் கலக்குறீங்களே?''

''சேலஞ்சிங்கான எந்த விஷயங்களையும் ஒரு கை பார்த்திடணும்னு ஆசைப்படுவேன். மலையில இருந்து குதிக்கச் சொன்னாலும் சரி... என்ன ஏதுன்னு யோசிக்காம,  'தைரியமாப் பண்ணு, சப்பை மேட்டர் இது’னு

செஞ்சிடுவேன். அதனாலேயே பசங்க என்கிட்ட பேசுறதுக்கே பயப்படுவாங்க. இப்படி கெத்து உள்ள பொண்ணா இருக்கிறதுதான் என் ப்ளஸ் பாயின்ட்னு நினைக்கிறேன்.''

''இப்படி இருந்தா பசங்க உங்களைத் திரும்பிப் பார்த்திருக்க மாட்டாங்களே?''

''ஹலோ, படிக்கும்போது பசங்க எக்கச்சக்கமான லவ் லெட்டர் நீட்டியிருக்காங்க.? ஆனால், இதுவரை யாருக்கும் ஓகே சொன்னது இல்லை. என் கேரக்டர், ஃபிரெண்ட்லியாப் பழகினா ஜாலியா, சூப்பராப் பேசுவேன். கொஞ்சம் மக்கர் பண்ணினாலும் என்னோட கைதான் பேசும்.''

''ஐயயோ... சரி சினிமாவில் உங்களுக்கு இருக்கிற ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட் சொல்லுங்க?''

''ஹீரோயின்ஸ்ல த்ரிஷா, சோனியா என் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். ஹீரோக்கள்னு கேட்டீங்கனா, நிறையப் பேர் இருக்காங்க. செலிபிரட்டி கிரிக்கெட் டீம்ல இருக்கிற எல்லோருமே. எப்படி எஸ்கேப் ஆகிட்டேனா?''

''நடிகர்கள் மட்டும்தான் கிரிக்கெட் ஆடணுமா? ஹீரோயின்ஸும் களமிறங்கினா சூப்பரா இருக்குமே?''

''இது கொஞ்சம் டூமச் ஆசைதான். வெயில்ல நின்னா கலர் போயிடும்னு பாதி ஹீரோயின்ஸ் வர மாட்டாங்க. ஒருவேளை வந்தாங்கனா, 'கோலிவுட் டீம்’க்கு நான்தான் கேப்டன்'

''சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணிச் செயலாளரா ராதிகா சரத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காங்களே?''

''நோ கமென்ட்ஸ்... அதைப்பத்தி எனக்கு எந்த ஐடியாவும் இல்லை.''

''நடிகைகள் பல பேர் அரசியல்ல குதிக்கிற சீஸன் இது. ஒரு கட்சித் தலைவரோட மகளா உங்களுக்கு அரசியல் ஆர்வம் இல்லையா?''

''இப்போதைக்கு அரசியல் ஆர்வம் சுத்தமா கிடையாது. அப்பா என்னை சுதந்திரமா வளர்த்திருக்கிறார். என்னோட முடிவும் யோசனையும் அவருக்குத் தெரியும். என்கிட்ட பேசும்போதும் அவர் அரசியல் தொடர்பா டிஸ்கஸ் பண்ணதே இல்லை. ஒருவேளை ஃபியூச்சர்ல அப்பா கூப்பிட்டா, அந்தச் சமயத்துல என்னோட மைண்ட்ல என்ன ஓடுதோ, அதைப் பொறுத்து என் முடிவு இருக்கும். அப்போ எனக்கு அரசியல் ஆசை வரலாம்... வராமலும் போகலாம்!''

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close