Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விர்ர்ர்ருனு ஒரு நெடுஞ்சாலை!

'' 'சில்லுனு ஒரு காதல்’ பண்றதுக்காக கதை சொல்ல நிறையப் பேர் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கேன். 'ஒரு குழந்தைக்கு அப்பாவா நடிக்கணும்’னு சொன்னதும் பல நடிகர்கள் ரொம்ப யோசிச்சாங்க. சூர்யா மட்டும்தான் முன்வந்தார். அதுக்குப் பிறகு 'நெடுஞ்சாலை’ படக் கதையைச் சொல்லப் போனா, அதைக் கேட்கக்கூட யாரும் முன்வரலை. 'முதல் பட வாய்ப்புக்கு ஒருத்தன் கஷ்டப்படலாம்.ஆனா, முதல் படம் ரசிகர்கள்கிட்ட நல்ல பேர் வாங்கின பிறகும், ரெண்டாவது படத்துக்கு அதைவிட கஷ்டப்படணுமா?’னு தோணுச்சு. இனி யார்கிட்டயும் போய் நிக்க வேணாம்னு முடிவு பண்னேன். புது முகங்களைத் தேடிப் பிடிச்சோம்; உற்சாகமா வேலை பார்த்தோம். இதோ... இப்ப டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு. படத்தைப் பத்தி பாசிட்டிவ் செய்திகள் கேள்விப்பட்ட உதயநிதி ஸ்டாலின், எங்க படத்தை ரிலீஸ் பண்றார்!'' - சோகம், தாகம் கடந்த வேகத்துடன் பேசுகிறார் இயக்குநர் கிருஷ்ணா.

''நெடுஞ்சாலை... அது ஒரு பிரமாண்டமான கேரக்டர். கன்னியாகுமரியில் இருந்து இமயமலை உச்சி வரை நீண்டுகிடக்கும் ஒரு எலிமென்ட். முழுக்கவே ஒரு 'ரோட் மூவி’ தமிழ்ல பார்த்திருக்க மாட்டோம். இது அப்படியான ஒரு படம். தேனி வட்டாரத்தில் கேரள நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தாபாதான் கதையின் மையப்புள்ளி. அந்த தாபாவை நோக்கி மற்ற கதாபாத்திரங்கள் வரும். அந்த தாபாவை நடத்தும் பெண்தான் ஹீரோயின். அங்கே காசு இல்லாம சாப்பிட்ட ஹீரோவுக்கும் அவளுக்கும் ஏற்படும் பிரச்னையில் இருந்து தொடங்குது காதலும் கதையும்! ஆனா, தேனியில் மட்டுமே கதை நிக்காது. நூல் பிடிச்சு ரோடு பிடிச்சு இந்தியா முழுக்கப் பயணிக்கும். படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கு நம்மளை இழுத்துட்டுப் போவாங்க!

படத்துக்கு லொகேஷன் பிடிக்கிறதுதான் பெரிய சவாலா இருந்தது. ஏன்னா... இது 80-களில் டிராவல் ஆகும் கதை.          30 வருஷத்துக்கு முன்னாடி  இருந்த இந்திய சாலைகளுக்கும் இப்போதைய சாலைகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதனால இந்தியா மேப்ல இல்லாத ஊர்களுக்குப் போய் எங்களுக்குத் தேவையான சாலைகளைக் கண்டுபிடிச்சோம். அதுக்கே ஆறு மாசம் ஆச்சு!''  

''புதுமுகங்கள் ஒரு படத்துக்கு ப்ளஸ்தான். ஆனா, அவங்களே படத்தை மேக்சிமம் ரீச் பண்ணவெச்சிருவாங்களா?''

''பட கேரக்டர்கள் ஃப்ரெஷ்ஷா இருக்கணும்னு புதுமுகங்களை ஃபிக்ஸ் பண்ணோம். 'முருகன்’  கேரக்டர் ஆடிஷனுக்கு ஆரி வந்து நின்னப்போ, கரடுமுரடான உடம்பு வேணும்னு சொன்னேன். ரெண்டே மாசத்துல உடம்பை அப்படி டோன் பண்ணிட்டு வந்து நின்னார். 'மங்கா’ என்கிற மலையாளப் பெண் கேரக்டருக்கு மலையாளப் பெண் ஷிவதாவைப் பிடிச்சோம்.

படத்துல இவங்களையும் தாண்டி ஒரு கேரக்டர்தான் ஹீரோ. அது ஒளிப்பதிவு! ஒளிப்பதிவாளர் என் நண்பர் ராஜவேல் ஒளிவீரன். நைட் மோட், மோஷன் கேப்சர்னு இதுவரையிலான அத்தனை ஒளிப்பதிவு முயற்சிகளுக்கும் அடுத்த லெவலுக்கு முன்னேறி இருக்கோம். அனிமேஷன் ஸ்டோரி போர்டு செட் பண்ணோம். எங்கே கேமரா செட் பண்ணணும், சீன்ல எங்கே மூவ்மென்ட் இருக்கும், அதுக்கேத்த மாதிரி கேமரா எந்த ஆங்கிள்ல நகரணும்னு எல்லாமே முன்னாடியே முடிவு பண்ணிருவோம். இதனால் படப்பிடிப்பின்போது கேமராவை நாம எதிர்பார்க்காத கோணங்களில் நகர்த்திக்கலாம். பிரபு சாலமன்,  சீனு ராமசாமினு நண்பர்கள் பலர் படம் பார்த்துட்டு ஒளிப்பதிவைத்தான் முதல்ல குறிப்பிட்டுப் பாராட்டினாங்க. இத்தனைக்கும் ஒரே லென்ஸ், ஒரே கேமரா... அதுலயே அத்தனை வித்தை காமிச்சிருக்கார் ஒளிவீரன்!

பட டிரெய்லர் பார்த்துட்டு சிம்பு பேசினார். 'இந்த லைனை என்கிட்ட சொல்லியிருந்தா, நானே பண்ணி யிருப்பேன். ஏன் சொல்லலை?’னு கேட்டார். இந்த 'நெடுஞ்சாலை’ உற்சாகப் பயண அனுபவம் கொடுக்கும்!''

- ம.கா.செந்தில்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்