சிறிய பட்ஜெட் படங்களுக்கு இனி கவலையில்லை! | சிறிய பட்ஜெட், smaal budget, cinema,சினிமா

வெளியிடப்பட்ட நேரம்: 16:44 (19/04/2014)

கடைசி தொடர்பு:16:44 (19/04/2014)

சிறிய பட்ஜெட் படங்களுக்கு இனி கவலையில்லை!

மிழ் சினிமாவில் இருக்கும் சங்கங்களில் புதிதாக ஒன்று சேர்ந்திருக்கிறது. 'தமிழ் இலக்க திரைப்பட, குறும்பட மற்றும் ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்’. குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் டிஜிட்டல் திரைப்படங்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறதாம். இந்தச் சங்கத்தின் செயல்பாடுகள், நோக்கம், இலக்கு குறித்து, சங்கத் தலைவர் கலைப்புலி ஜி.சேகரனிடம் பேசினேன்...

 

''ஃபிலிமில் எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை குறைஞ்சு, டிஜிட்டல் மயமாகிடுச்சு தமிழ் சினிமா. இதனால் பல பேருக்குப் படம் தயாரிக்கணும்னு ஆசை வந்தாலும் பெரிய நடிகர்களையோ, பெரிய தொழில்நுட்பக் கலைஞர்களையோ வெச்சுப் படம் பண்ண முடியாது. சின்ன பட்ஜெட் படங்களுக்குப் பலர் கால்ஷீட்டும் தர மாட்டாங்க. இதற்கான மாற்று வழிதான் இந்த அமைப்பு. சுருக்கமா சொல்லணும்னா, இந்த அமைப்பின் வரவால் சினிமாவில் சாதிக்கணும்னு கனவோட இருக்கிற இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், நடிகர்னு எல்லாத் துறையினருக்கும் சரியான அங்கீகாரமும் வாய்ப்பும் கிடைக்கும்'' என்றவர், தொடர்ந்து...

'' இந்த அமைப்பில் உறுப்பினரா இருக்கணும், இந்தத் தொழிலாளர்களைத்தான் பயன்படுத்தணும், இவருக்கு இவ்வளவு சம்பளம்னு அந்தந்த அமைப்புகளே தீர்மானிச்சு வெச்சுட்டா, ரஜினிகாந்த் மாதிரி பெரிய லெவல்ல இருக்கிறவங்க மட்டும்தான் படம் எடுக்க முடியும். டிஜிட்டல் கேமராவை நம்பி, பத்து லட்சத்திலேயே படத்தை முடிச்சிடணும்னு ஆசைப்படுகிற கலைஞர்களுக்கு இதெல்லாம் எப்படி சாத்தியமாகும்? அவங்களுக்குக் கை கொடுக்க வேண்டியது எங்க சங்கத்தின் கடமை. இந்த அமைப்பில் உறுப்பினரா சேர்றவங்க, தங்களுடைய படத்துக்கோ, குறும்படத்துக்கோ, ஆவணப்படத்துக்கோ 'பெப்சி’ அமைப்பைச் சேர்ந்த தொழிலாளர்களைத்தான் பயன்படுத்தணும்னு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. அவங்க பட்ஜெட்டுக்குத் தேவையான ஆட்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் அவங்களே தேர்ந்தெடுக்கலாம். எங்களால முடிஞ்ச உதவிகளையும் பண்ணுவோம். அதேசமயம், அவங்க பட்ஜெட்டுக்கு ஏற்ப 'பெப்ஸி’ தொழிலாளர்கள் கிடைச்சாலும் பயன்படுத்திக்கலாம்.  

தவிர, குறைஞ்ச பட்ஜெட்ல எடுக்கிற படமோ, குறும்படமோ, ஆவணப்படமோ எல்லாத்துக்கும் எந்த கேமராவைப் பயன்படுத்தலாம்? எந்த சாஃப்ட்வேர்ல எடிட்டிங் பண்ணலாம்? படத்தை சென்சாருக்கு அனுப்புவது எப்படினு 'ஏ டு இஸட்’ விஷயங்களையும் கற்றுத் தரப்போகிறோம். முக்கியமா, தியேட்டர்களில் படத்தை வெளியிடுவதில் உள்ள பிரச்னைகளைத் தீர்ப்போம். குறும்படங்களைத் தயாரிப்பவர்களோ, ஆவணப்படங்களைத் தயாரிப்பவர்களோ 6,000 ரூபாய் கட்டணத்தில் எங்கள் சங்கத்தில் உறுப்பினர் ஆகலாம்.

'தயாரிப்பாளர்கள் சங்கத்தில் குறும்பட, ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் உறுப்பினர் ஆக முடியாது. அதனால, அவங்களுக்கெல்லாம் இந்தச் சங்கம் வசதியான, பாதுகாப்பான இடமாக இருக்கும். அதனால, 'தமிழ் இலக்க திரைப்பட, குறும்பட மற்றும் ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்’ அரசாங்க சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுமே தவிர, யாரும் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது. 'தமிழ் சினிமாவில் யாருமே புதுசா வந்துடக் கூடாது... நாங்க மட்டுமே இருப்போம்’னு நினைக்கிறவங்களுக்கு நியாயமான பதிலடியா இருக்கும்!''

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close