கானா பாலாவுக்கு கிடைச்சது எனக்குக் கிடைக்கலை! | gana bala. கானா பாலா, கானா, உலகநாதன், gana ulaganathan

வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (09/05/2014)

கடைசி தொடர்பு:10:47 (09/05/2014)

கானா பாலாவுக்கு கிடைச்சது எனக்குக் கிடைக்கலை!

'வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...’ பாட்டிலேயே பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆகிய கானா உலகநாதன் இப்போ ஆளையே காணோம். சென்னை நேரு ஸ்டேடியத்தில்  கால்பந்து போட்டியை ரசித்துக்கொண்டிருந்தவரிடம் ''எப்படி இருக்கீங்க?' என்றால்...

 

''ஜாலியா ஃபுட்பால் மேட்ச் பார்த்துட்டு இருக்கேன்' என்கி றார்.

'' ஒன்பது வயசுல இருந்தே கோயில் திருவிழா, கலை நிகழ்ச்சிகள்னு பாடிட்டு இருக்கேன். அந்த ஆர்வம்தான் 16 வயசிலேயே சொந்தமா பாடல்களை எழுதிப் பாடவெச்சது. நண்பர்களுக்குள்ள நடக்கிற சண்டை, காதல் தோல்வி, வெற்றினு அத்தனை உணர்வு களையும் 'கானா'வா எழுதிப் பாடுவேன்.  33 ஆல்பங்கள் பாடினேன். அதுக்குப் பலனா 'மச்சி’ படத்தில் பாட்டு எழுதுற வாய்ப்பு கிடைச்சது.

ஏ.ஆர்.ரெஹானா இசையில் பாடின 'கும்மாங்கோ கும்மாங்கோ...’தான் என்னோட முதல் பாடல். அப்புறம் மிஷ்கின் சாரோட 'வாள மீனு’ பாட்டு. இதுதான் என் ஹிட். வெளிநாட்டு மேடைக் கச்சேரிகள் அடுத்தடுத்து இருந்ததால, அப்புறம் எனக்கு வந்த சினிமா வாய்ப்புகளை என்னால பயன்படுத்திக்க முடியலை.

கானா என்னோட மூச்சு. இப்போ யார் யாரோ 'கானா’ங்கிற பெயர்ல பெண்களை இழிவுபடுத்தியும் குடியைக் கொண்டாடியும் பாடிக்கிட்டு இருக்காங்க. கூடிய சீக்கிரம் நல்ல கானாவைப் பாடணும்.''

''இப்போ வர்ற பெரும்பாலான படங்கள்ல 'கானா பாலா’வுடைய பாடல்கள் இருக்கு. அவருடைய வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீங்க?''

''நான்தான் பொதுவாச் சொல்லிட்டேனே. 'கானா’ பாடுறவங்க நல்ல விஷயத்துக்கும் கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் பாடணும். பெண்களை இழிவுபடுத்துற பாடல்களையோ, குடியின் சிறப்பைப் பாடுற பாடல்களையெல்லாம் குறைச்சுட்டு நல்ல விஷயங்களைச் சொல்ற பாடல்களை அதிகமா கொண்டுவரணும். மத்தபடி, கானா பாலா நல்ல கலைஞர். அவருடைய வளர்ச்சி என்னைப்போல எல்லா பாடகர்களுக்கும் சந்தோஷம்தான். நான் அறிமுகமானபோது இருந்த சூழலும், கானா பாலா அறிமுகமாகி அசத்திக்கிட்டு இருக்கிற இந்தச் சூழலுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கு. அவருக்குக் கிடைச்ச சப்போர்ட் எனக்குக் கிடைக்கலை.'

''சினிமாவுல கானா பாடல்களும் பாடகர்களும் குறுகிய இடத் திலேயே இருக்கிறதுக்குக் காரணம்?''

'’ஒரே வரியில் சொல்லணும்னா, 'கானா’னா என்னன்னு தெரியா ததுதான். ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் சொல்றேன். உபயோகமில்லாத கப்பலை உடைக்கிற வேலைக்காக மும்பை போன நம்ம ஆளுங்க களைப்பு தெரியாம இருக்கிறதுக்காகப் பாடினதுதான் 'கானா’. 'கானா’னா இந்தியில 'பாட்டு’னு அர்த்தம். ஆனா, இங்கே பல பேர் 'கானா பாட்டு’ங்கிற வார்த்தையை உபயோகிச்சுட்டு இருக்காங்க. யார் வேணும்னாலும் பாடலாம். அதுக்காக 'கானா’னா என்னன்னே தெரியாம பாடக் கூடாது.'

''அடுத்த திட்டம் என்ன?''

'' 'என்னை நான் நிரூபிச்சும், சரியான இடம் கிடைக்கலை. பழையபடி வாய்ப்புகளைத் துரத்தணும். கூடிய சீக்கிரம் பழைய கானா உலகநாதனை நீங்க பார்க்கலாம். ஏன்னா, நமக்கு வேற தொழில் தெரியாதே?'

- கே.ஜி.மணிகண்டன்

படம்: ஜெ.வேங்கடராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close