கேரளாவின் ஏலியன் ஸ்டார்! | cinema, santhosh pandit,சினிமா, சந்தோஷ் பண்டிட்

வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (09/05/2014)

கடைசி தொடர்பு:13:03 (09/05/2014)

கேரளாவின் ஏலியன் ஸ்டார்!

ஒல்லிக்குச்சி உடம்பு, மாநிற தேகம், தெத்துப்பல் வரிசை, கண்ணில் அடிக்கும் ஜிகுஜிகு காஸ்ட்யூம் என மல்லுவுட்டின் ஏலியன் ஸ்டார் சந்தோஷ் பண்டிட்டைத் தெரியாத கேரளவாசிகள் கிடையாது!

குறும்பும் காமெடியும் நிறைந்த லொள்ளு சபா டைப் மேக்கிங்கில் இவர் பண்ணும் அட்ராசிட்டி வீடியோக்கள் கேரளாவையும் தாண்டி யூடியூப் பிரசித்தம். கையைக் காலை வெட்டி, ஆடியும் பாடியும் உள்ள 'ராத்திரி சுபராத்திரி’ பாடலை மட்டும் ஒரு கோடி பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள் இணையத்தில்.

''ரெண்டு வருஷத்துக்கு முன்பு நீங்க கேரளாவில் அவ்ளோ பாப்புலர்...இப்போ சைலன்ட் ஆகிட்டீங்களே?''

''என்னோட முதல் படம் 'கிருஷ்ணனும் ராதையும்’  நல்லா ஓடுச்சு. இரண்டாவது படம் 'ஜித்து பாய் என்ன சாக்லேட் பாய்’ சூப்பர் ஹிட். ஆனால் அதன் பிறகு நிறைய எதிர்ப்புகள், கேலிகள், கிண்டல்கள். திட்டிப்பேசும் ரசிகர்களோடு சிலர் உண்மையில் என்னுடைய காமெடி நடிப்பை உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்காக இதோ இந்த ஆண்டு 'மினி மோலுடே அச்சன்’ என்ற படத்தில் ரீ-என்ட்ரி ஆகி இருக்கிறேன்.''

''போகும் இடங்களில் அழுகிய முட்டை எல்லாம் அடித்த சம்பவங்கள் நடந்ததே?''

''என் வளர்ச்சி பொறுக்காத யாரோ ஒருவர் பண்ணியதை ஏன் பெருசுபடுத்தணும்? 'கிருஷ்ணனும் ராதையும்’ படத்தில் ஹீரோவா நடிச்சு, பாட்டும் எழுதி, பாடல்கள், இசை, சண்டைப் பயிற்சி, கலை, பின்னணி இசை, கிராஃபிக்ஸ், பாடகர், கதை, வசனம், திரைக்கதை, உடைகள், பி.ஆர்.ஓ, இயக்குநர், தயாரிப்பு என 18 ஒர்க்குகளை செய்து ரெக்கார்டு பிரேக் செய்திருந்தேன். ஆனால் படத்தை சிலர் தடுத்தார்கள். கடவுளின் புண்ணியத்தில் படம் சக்சஸ்ஃபுல்லாக ஓடியது.''

''இப்போ என்ன செய்கிறீர்கள்?''

'' கோழிக்கோட்டில்  இரிகேஷன் டிப்பார்ட்மென்ட் சூப்பர்வைஸராய் இருப்பதால், சினிமாவுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் இருந்தேன். கூடிய விரைவில் வி.ஆர்.எஸ். வாங்கிவிட்டு மீண்டும் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தப்போகிறேன்.''

''உங்களுக்கு சப்போர்ட்டாக பல சீனியர்கள் இருக்கிறார்களாமே?''

''சலீம் குமார் சார் என்னைப் பாராட்டி பேட்டி கொடுத்தார். நேரிலும் பார்த்து ஆசிபெற்றேன். என் இரண்டாவது படத்திற்கு 'சூப்பர் ஸ்டார் சந்தோஷ் பண்டிட்’ என்ற டைட்டில் கொடுத்தது தேவை இல்லாமல் இரண்டு பெரிய ஸ்டார்களின் ரசிகர்களின் பகையை சம்பாதிக்கவைத்தது.  சில இடங்களில் என்னைத் திட்டித் தீர்த்தார்கள். 'ஏலியன் ஸ்டார்’ என்ற பட்டத்தை ஃபேஸ்புக்கில் என் ரசிகர்கள் வைத்ததுதான். அதையே இனி தொடர்ந்து வைத்துக்கொள்ளப் போகிறேன். இனி என் படங்கள் மூலமே பேச இருக்கிறேன்.''

- ஆர்.சரண்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்