Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நார்மலான நடிகையா இருந்தா போதும்!

'நாடோடிகள்’, 'எங்கேயும் எப்போதும்’ என சில படங்களே நடித்தாலும் நச்சென மனதில் பதிந்தவர் நடிகை அனன்யா. பிறகு காதல், திருமணம், ரகசிய வாழ்க்கை என 'பரபரப்புச் செய்தி’யாகிவிட்ட அவர் இப்போது 'மீண்டு’ம் வந்திருக்கிறார். மூணாரில் தெலுங்குப் பட ஷூட்டிங்கில் இருந்த அனன்யாவிடம் குட்டி பேட்டி.

 

''நடிப்பு என்னோட சின்ன வயசு ஆசை, இலக்குனு எல்லாம் கிடையாது. ஆக்ஸிடென்ட் மாதிரிதான் நடிகையானேன். காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறப்போ நடந்த ஒரு டி.வி நிகழ்ச்சியில கலந்துக்கிட்டேன். மலையாளத்துல அறிமுகமான படம் 'பாசிட்டிவ்’. அப்புறம் மலையாளப் படங்களோடு 'நாடோடிகள்’, 'சீடன்’, 'எங்கேயும் எப்போதும்’, 'புலிவால்’னு சின்னச் சின்ன இடைவெளியில தமிழ்லேயும் நடிச்சேன். இப்பவும் நடிச்சுட்டு இருக்கேன். மத்தபடி, இடையில நடந்த காதல், திருமணம்... இதெல்லாம் என்னுடைய பர்ஷனல் விஷயம். பத்திரிகைகாரங்கதான் பெரிய போராட்டத்துக்கு அப்புறம் எனக்கு கல்யாணம் நடந்த மாதிரி எழுதிட்டாங்க'' கொஞ்சம் கோபமாகவே ஆரம்பிக்கிறார் அனன்யா.

''எப்போ கல்யாணம் நடந்தது? மேரேஜ் ஃலைப் எப்படி இருக்கு?''

''என்னோட கணவர் ஆஞ்சநேயன் க்யூட் கேரக்டர். ரொம்ப அன்பா ஆதரவா இருக்கார். ஒரு பொண்ணோட கஷ்டத்துலேயும் சந்தோஷத்துலேயும் பங்கெடுத்துக்கிற ஆண்கள் கணவனா கிடைக்கிறது வரம். அது எனக்குக் கிடைச்சிருக்கு. கல்யாணத்துக்கு அப்புறமும் எந்தத் தடையும் இல்லாம, சினிமாவில நான் நடிக்கிறதுக்குக் காரணம் அவர்தான். என்னோட  ஆசைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காம, கமா போட்டு என்கரேஜ் பண்ற சூப்பர் கேரக்டர். மத்தபடி கல்யாணம் நடந்த தேதியைச் சொல்ல மாட்டேன்... சொல்லவும் விரும்பலை.''

''உங்க வீட்டுல பிரச்னை நடந்ததா வந்த செய்திகள்...?''

''எதுவுமே உண்மை கிடையாது. சினிமாவில நடிகை ஆகும்போது என்னோட ஃபேமிலி எவ்வளவு சப்போர்ட்டா இருந்தாங்களோ, அதே அளவு என் கல்யாணத்துக்கும் சப்போர்ட்டா இருந்தாங்க.''

''தமிழ்ப் படங்கள்ல பார்க்கவே முடியலையே?''

'அதிதி’ங்கிற படத்துல முக்கியமான கேரக்டர் பண்றேன். தவிர, வேற சில தமிழ்ப் படத்துலேயும் நடிக்கிறதுக்குப் பேசிட்டு இருக்கேன். ஒரு மலையாளிப் பொண்ணா இருந்தாலும் தமிழ் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். தமிழ் மேலேயும் தமிழ்ப் படங்கள் மேலேயும் ரொம்பவே பிரியம் இருக்கு. கூடிய சீக்கிரம் நிறையத் தமிழ் படங்கள்ல நடிப்பேன். தவிர, 'எங்கேயும் எப்போதும்’ல நீங்க பார்த்த அனன்யா கேரக்டர்தான் என்னோட ரியல் ஃலைப் கேரக்டரும். ரொம்ப அமைதியா, அடக்கமா இருக்கணும்னு ஆசைப்படுற பொண்ணு.  கவர்ச்சி டிரெஸ் எனக்கு செட் ஆகாது. அதனால, என்னோட கேரக்டருக்குத் தகுந்த மாதிரி நல்ல கதை, நல்ல டீம் கிடைச்சா மட்டும்தான் நடிக்கிறேன். தமிழ்ல மட்டுமில்ல, மலையாளத்துலேயும் குறிப்பிட்ட அளவு படங்கள்லதான் நடிச்சிருக்கேன். ஆனா, எல்லாமே நல்ல படங்கள், நல்ல கேரக்டர்கள்.''

'' நார்மலான நடிகையா இருந்தா போதும்னு நினைக்கிறீங்களோ?''

''யெஸ்... ரொம்ப கரெக்ட். ஏன்னா, சினிமாவில நான் இதையெல்லாம் சாதிக்கணும்னு எதையும் பிளான் பண்ணிட்டு வரலை. பெரிய ஸ்டார் ஆகணும்ங்கிற ஆசையும் எனக்குக் கிடையாது. சின்ன கேரக்டர்ல நடிச்சாலும், அது பவர்ஃபுல் கேரக்டரா இருக்கணும். இதுதான் என் ரூட்.''

''தொடர்ந்து உங்களைப் பற்றி வந்த நெகட்டிவான செய்திகளைப் படிக்கிறப்போ என்ன தோணுச்சு?''

''அதைப் பத்தியெல்லாம் யோசிச்சுட்டு இருந்தா அடுத்தடுத்த வேலைகள்ல கான்சென்ட்ரேட் பண்ண முடியாது. 'ஏன் இப்படி எழுதினாங்க?’னு ஆராய்ச்சி பண்றதுலேயே பாதி நாள் ஓடிடும். 'எப்படி வேணும்னாலும் எழுதிக்கட்டும்’னு விட்டுட்டேன்.''

''நடிப்பு தவிர...?''

''நிறையப் படங்கள் பார்ப்பேன். பாட்டு கேட்பேன். நல்லா சமைப்பேன்.   குறிப்பா, நான் வைக்கிற சாம்பார் நாலு தெரு தாண்டியும் மணக்கும்.''

''சினிமாவில ஆக்டிங் தவிர, வேற எதுவும் பிளான் இல்லையா?''

''இப்போதைக்கு இது மட்டும்தான். அப்பப்போ 'நாமளும் ஒரு படம் டைரக்ட் பண்ணா என்ன?’னு ஆசை வரும். ஸோ... சீக்கிரம் ஒரு படம் இயக்கிடுவேன்னு நினைக்கிறேன்!''

- கே.ஜி.மணிகண்டன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்