Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“நிறைய நடிக்கணும்... நிறைய சம்பாதிக்கணும்!”

ன்சிகா அபார அழகிதான்; ஆனால், அந்த அழகை ரசிக்க விடாமல் கண்களில் வழியும் குழந்தைத்தனமும், குறும்புச் சிரிப்பும் நம்மை ஈர்க்கும். இப்போதும் அப்படியே!

'ரோமியோ ஜூலியட்’ படத்துக்காக 'ரவுடி ஜூலியட்’டாக பெர்ஃபார்ம் செய்துகொண்டிருந்தவரைச் சந்தித்தேன்.

''பப்ளி அழகியா இருந்தீங்க. ஏன் இவ்ளோ இளைச்சீங்க..?''

''இவ்ளோ வித்தியாசம் தெரியிற அளவுக்கு, அவ்ளோ குண்டாவா இருந்தேன்? தமிழ்நாட்டுலதான் 'நான் குண்டு’னு சொல்றீங்க. மும்பைல என் ஏஜ் கேர்ள்ஸ் அந்த வெயிட்தான் இருப்பாங்க. நடிக்கலைனா நான் ஃபிட்னெஸ் பத்தி கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனா, இங்க ஸ்க்ரீன் பிரசன்ஸ் முக்கியம்ல. அதான் கொஞ்சம் வெயிட் கம்மி பண்ணலாம்னு தோணுச்சு. டயட், ஜிம்னு கொஞ்சம் ஒல்லி ஆகிட்டேன். இப்பவும் க்யூட்டாதானே இருக்கேன்!''

''முன்னாடி எவ்வளவு வெயிட் இருந்தீங்க... இப்போ எவ்வளவு இருக்கீங்க?''

(சத்தம் போட்டுச் சிரிக்கிறார்) ''பொண்ணுகிட்ட வயசைக் கேட்கக் கூடாது. அதே மாதிரி அவங்க வெயிட்டும் கேட்கக் கூடாது!''

''அழகா இருக்கீங்க... குறும்பா நடிக்கிறீங்க... ஆனா, ஒரே மாதிரி ரோல் பண்ணிக்கிட்டே இருந்தா போரடிச்சுராதா?''

''ஒரே மாதிரி நடிச்சா போரடிக்கத்தான் செய்யும். அதுக்காகத்தான் நானும் ரொம்ப செலெக்டிவா நடிக்கிறேன். இப்போ 'ரோமியோ ஜூலியட்’ல பார்த்தீங்கன்னா, வெளியூர் போனா அனாசின்ல இருந்து அயோடெக்ஸ் வரைக்கும் எல்லாத்தையும் எடுத்துவெச்சிக்கிற பொண்ணு, தன் லைஃப் பார்ட்னரைத் தேர்ந்தெடுக்க என்னல்லாம் பண்ணுவா? அப்படி ஒரு கேரக்டர்! நடிக்கும்போது எனக்கே சேலஞ்சிங்கா இருந்தது. ஸ்க்ரீன்ல என்னைப் பார்க்கிற பசங்களுக்கு, அவங்கவங்க கேர்ள் ஃப்ரெண்ட்தான் ஞாபகத்துக்கு வரும். இப்படி ஒரு கேரக்டர் கொடுத்த இயக்குநர் லக்ஷ்மணுக்கு தேங்க்ஸ். அப்புறம் 'வேட்டை மன்னன்’ல செம ஸ்டைலிஷ் கேங்ஸ்டரா நடிக்கிறேன். ரொம்ப வித்தியாசமா இருக்கும். ஆனா, அந்தப் படம் எப்போ வருதுன்னுதான் தெரியலை!''

''குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பது, பெரிய பொறுப்பு. அந்தப் பக்குவம் எப்படி வந்தது?''

''என்னோட மூணாவது பிறந்த நாள் அன்னிக்கு, ஒரு ஆதரவற்ற இல்லத்துக்கு என்னைக் கூட்டிட்டுப் போயிருக்காங்க அம்மா. அங்கே நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேனாம். அப்புறம் என் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் என்னை அங்கே கூட்டிட்டுப் போறதை அம்மா வழக்கமாக்கிட்டாங்க. யாருமே இல்லாதவங்களுக்கு நாம சொல்ற ஒரு 'குட் மார்னிங்’கூட அவ்வளவு சந்தோஷம்              கொடுக் கும்னு அவங்களோட பழகினப்போதான் எனக்குப் புரிஞ்சது. அதான் இப்போ தத்தெடுத்து வளர்க்கிறேன். என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கிற அவங்களோட அன்புக்கு முன்னாடி இங்கே எதுவுமே கிடையாது. இப்போ குழந்தைகளைப் பார்த்துக்கிறேன். இதே மாதிரி வயசானவங்களையும் பார்த்துக்கணும். அதுக்காக எதிர்காலத்தில் முதியோர் இல்லம் கட்டுற ஐடியா இருக்கு. அதுக்காக நிறையப் படங்கள் நடிக்கணும்... நிறையச் சம்பாதிக்கணும்!''

''சிம்புவோட காதல்...''

(கேள்வியை முடிக்குமுன்னே...) ''ஸாரி.. நோ கமென்ட்ஸ்!''

''ஒரு காதல்... ஒரு பிரிவு... இப்போ என்ன மனநிலையில் இருக்கீங்க?''

(குரல் சட்டென மாறுகிறது...) ''உண்மையைச் சொல்லணும்னா ரொம்ப ப்ளாங்கா இருக்கேன். 10 வயசுலேயே நடிக்க வந்த பொண்ணு நான். குட்டிப்பொண்ணா அமிதாப், ஹிருத்திக் கூடலாம் நடிச்சிட்டேன். கேமராதான் என் உலகம். ஒரு நடிகையா, ஒரு படத்துக்கு நூறு சதவிகிதம் உண்மையா நடிச்சிட்டு இருக்கேன். அது மட்டுமே என் உலகமா இருந்தது. ஆனா, இப்போ அதையும் தாண்டி சில அனுபவங்கள். பர்சனல் விஷயங்களில் என்னை இம்ப்ரூவ் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன். கொஞ்ச நாள் காதல் இருந்தது. இப்போ இல்லை. இன்னொரு காதல் வருமா, கல்யாணம் பண்ணிப்பீங்களானு கேட்டா, என்கிட்ட சொல்ல உண்மையில் பதிலே இல்லை. இப்போ என் மனசுல, கண்ணுல கேமரா மட்டும்தான் இருக்கு. அவ்வளவுதான்... தேங்க் யூ!''

- எஸ்.கலீல்ராஜா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்