கிளாமரா நடிக்கப் பிடிக்கலை! | monika. monica., மோனிகா, கிளாமர், glamour

வெளியிடப்பட்ட நேரம்: 11:59 (06/06/2014)

கடைசி தொடர்பு:11:59 (06/06/2014)

கிளாமரா நடிக்கப் பிடிக்கலை!

ந்து மதத்திலிருந்து எம்.ஜி.ரஹிமா என்ற புதிய பெயருடன் இஸ்லாத்தைத் தழுவியிருக்கிறார் நடிகை மோனிகா. மேலும் 'இனி திரைப்படங்களிலும் நடிப்பதில்லை’ என்று அறிவித்துள்ளார்.

''இத்தனை நாள் சினிமாவில் இருந்துட்டு திடீர்னு பிரியிறது கொஞ்சம் ஃபீலிங்கான விஷயம்தான். குழந்தை நட்சத்திரமா அறிமுகமானதில் இருந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், சிங்களம்னு பல மொழிகளில் 69 படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கு. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேல் சினிமாத் துறையிலேயே இருக்கேன். அதான், இனி வேற துறையில கவனம் செலுத்தலாம்னு இருக்கேன். தவிர, இஸ்லாம் மதத்தைத் தீவிரமா ஃபாலோ பண்ணணும்னு ஆசைப்படுறேன். என் அம்மாவும் 'உனக்கு எது சரினு படுதோ... செய்’ங்கிற அளவுக்கு சுதந்திரம் கொடுத்திருக்காங்க. ஸோ... இனி எப்பவுமே ரஹிமாவாவே இருக்க விரும்புறேன்'' நிதானமாக ஆரம்பித்துத் தொடர்கிறார் ரஹிமா என்கிற மோனிகா.

''இஸ்லாமுக்கு மாறிட்டா நடிக்கக் கூடாதுங்கிற நிர்ப்பந்தம் எதுவும் இல்லையேனு நிறையப் பேர் கேட்டுட்டாங்க. ஆனா, கவர்ச்சியான உடை போட்டுக்கிட்டு எனக்கு நடிக்கப் பிடிக்கலை. விதிவிலக்கா ஒண்ணு, ரெண்டு கதைகள் நல்லபடியா அமைஞ்சா அதிகம். தவிர, இந்த 2014-ம் வருஷத்துல 'இழுத்துப் போர்த்திட்டுதான் நடிப்பேன்’னு சொன்னா, யார் ஏத்துக்குவாங்க? கலைங்கிறது ரெண்டாவது விஷயம்தான். சினிமா ஒரு பிஸினஸ். இங்கே நடிகையா வர்றவங்க கிளாமர் பார்டரைத் தொட்டுத்தான் ஆகணும். அது எனக்குப் பிடிக்கலைனுதான் சினிமாவையே விட்டுடலாம்னு முடிவெடுத்தேன். இப்போ 'கன்னிகாபுரம் சந்திப்பில்’, 'நதிகள் நனைவதில்லை’ங்கிற ரெண்டு படமும், மலையாளத்துல ஒரு படமும் நடிச்சு முடிச்சிருக்கேன். அவ்வளவுதான்'' என்றவரி டம்...

''தொடந்து கிளாமர் கேரக்டர்களே வந்ததுதான் இந்த முடிவுக்குக் காரணமா?''

''அதுவும் ஒரு காரணம். மற்றபடி, பெர்ஸனலாகவே நான் வெளியே போகும்போது பர்தா போட்டுக்கிட்டுதான் போவேன். இப்போ இஸ்லாம் மதத்துக்கு மாறிட்டதால அல்லாவுக்குப் பயந்து வாழ ஆரம்பிச்சுட்டேன். சினிமாவுல நடிக்க மாட்டேன்னு சொன்னதுக்குக் காரணம் அதுதான். இங்கே இஸ்லாம்ல எல்லா ரூல்ஸும் ஸ்ட்ரிக்ட்டா இருக்கும். கடவுளை நம்ப ஆரம்பிச்சுட்டோம்னா சில விஷயங்களை ஃபாலோ பண்ணியாகணும். நான் அதை உறுதியாப் பின்பற்றப்போகிறேன்.''

''இஸ்லாம் இளைஞரு டன் விரைவில் திருமணம்னு சொன்னது?''

''ஏன்னா, மற்ற மத இளைஞரைத் திருமணம் செஞ்சுக்கிட்டா நிறைய விஷயங்கள்ல கருத்து வேறுபாடு வரும். அதனாலதான் அப்படிச் சொன்னேன். ஒருவேளை என்னோட உணர்வுகளைப் புரிஞ்சுக்கிட்டு, 'உன் இஷ்டப்படி நீ இரு’னு சொல்ற இளைஞர் எந்த மதமா இருந்தாலும் எனக்கு ஓகேதான். ஆனா, இப்போதைக்கு வேற என்ன பிஸினஸ் பண்ணலாம்ங்கிற ஐடியாதான் ஓடிக்கிட்டு இருக்கு.''

''அடுத்து ஏதாவது ஐடியா கிளிக் ஆகியிருக்குமே?''

''என்னோட சொந்தக்காரங்க, நண்பர்கள் எல்லோருமே துணி ஏற்றுமதியில் பிஸினஸ் பண்றவங்க. எங்க அப்பாவோட சொந்த ஊர் ஈரோடு. அங்கேயும் சரி, அதைச் சுற்றி இருக்கிற ஊர்களிலேயும் சரி துணி ஏற்றுமதிக்கு நிறைய ஸ்கோப் இருக்கு. தவிர, எனக்கு டெய்லரிங் நல்லா தெரியும். காஸ்ட்யூம் டிஸைனிங் பண்ணலாம்ங்கிற ஆசையும் இருக்கு. பார்ப்போம். 'இதைப் பண்ணலாம்’னு எப்போ எனக்கு தைரியம் வருதோ, அப்போ அதிரடியா இறங்கிடுவேன்.''

''ஒருவேளை நீங்க ஆசைப் பட்ட மாதிரி கேரக்டர் கிடைச்சா, மறுபடியும் சினிமாவில் நடிக்கிற ஐடியா இருக்கா?''

''என் வாழ்க்கையில் இதுவரை நான் எடுத்த முடிவுகளெல்லாம் அந்தந்த சூழலுக்குத் தகுந்த முடிவுகள்தான். நடிக்கிற வாய்ப்பும் இனி அந்தச் சூழலைப் பொறுத்து தான்!''

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்