சின்னத்திரையை விட சினிமா ஈஸி! | சங்கவி, அஜித், விஜய், sangavi, ajith, vijay

வெளியிடப்பட்ட நேரம்: 11:19 (14/06/2014)

கடைசி தொடர்பு:11:19 (14/06/2014)

சின்னத்திரையை விட சினிமா ஈஸி!

ஜித்துடன் 'அமராவதி’யில் அறிமுகமான நடிகை சங்கவி. 'ரசிகன்’, 'கோயம்புத்தூர் மாப்ளே’, 'விஷ்ணு’ என்று ஆரம்பகால விஜய் படங்களில் ஜோடி போட்ட சங்கவி இடையில் திடீரெனக் காணாமல்போனார். நீ...ண்ட இடைவெளிக்குப் பிறகு, 'ஆஹா என்ன பொருத்தம்’ என்ற கேம்ஷோ மூலமாக சின்னத்திரைக்குத் திரும்பியிருக்கிறார்.

''சினிமாவில் வாய்ப்பு இல்லாத நடிகைகள் எல்லோருக்குமே சின்னத்திரைதான் செகண்ட் இன்னிங்ஸ் ஏரியாவா?''

''சினிமாவில் நடிச்சதைவிட, சின்னத்திரைக்கு வந்ததுக்கு அப்புறம்தான் என் சந்தோஷ லெவல் அதிகமாகியிருக்கு. எங்கே வாய்ப்பு கிடைக்குதோ, அதைப் பயன்படுத்தி நம்ம திறமையைக் காட்டணும். தவிர, சினிமாவில் ஹீரோயினுக்குப் பெரிய வேலை இருக்காது. இங்கே அப்படி இல்லை. சுருக்கமா சொல்லணும்னா சின்னத்திரைக்கு வந்ததுக்கு அப்புறம் நான், உங்க வீட்டுப் பெண் ஆகிட்டேன்.'

''அறிமுகமாகும்போதே அஜித், விஜய்க்கு ஜோடி நீங்க. 'எங்கேயோ போயிருக்கணும், இப்படி ஆகிட்டோமே?’னு ஃபீல் பண்றீங்களா?''

''என்னைப் பொறுத்தவரை இந்த வயசுலேயும் நான் இன்னும் ஃபீல்டில் இருக்கிறதையே பெரிய சாதனைனு நினைக்கிறேன். அஜித், விஜயோட நடிச்சு, இன்னைக்கு வரைக்கும் ஹீரோயினாத்தானே இருக்கேன். ஒரு சில நடிகைகள்தான் இந்த மாதிரி இருக்காங்க. அவங்க வரிசையில் நானும் நிற்கிறது எனக்கு சந்தோஷமான விஷயம்தான்.'

''அஜித், விஜய் இப்போ பேசுவாங்களா?''

''ஒரு சினிமா ஃபங்ஷன்ல பார்த்தப்போ பேசினேன். அவ்வளவுதான்.'

''உங்களுக்கு அமெரிக்க டாக்டரோட கல்யாணம் நடந்துட்டதா செய்தி வந்துச்சே?''

''கல்யாணம் முடிஞ்சுதுன்னா எழுதியிருந்தாங்க? சரி போகட்டும்... நான் இன்னைக்கு வரைக்கும் பாப்புலரா இருக்கிறதால எழுதுறாங்க. ஓகே?'

''அப்போ, இன்னும் எத்தனை நாளைக்குத் தான் மத்தவங்களுக்கே 'ஜோடிப்பொருத்தம்’ பார்த்துட்டு இருக்கப்போறீங்க?''

''தெரியலையே? சில நல்ல வரன்கள் அமைஞ்சது. அப்போ நான் என் கேரியர்ல பிஸியா இருந்ததால், ஓகே சொல்லமுடியலை. கவலைப்படாதீங்க... முடிவானதும் முதல் வேலையா உங்களுக்குச் சொல்றேன்.'

''சினிமாவில் நடிச்சதுக்கும் சின்னத்திரைக்கும் என்ன வித்தியாசம் இருக்கு?''

''படத்துல நடிக்கிறது ரொம்ப ஈஸிங்க. ஏற்கெனவே எழுதிவெச்சிருக்கிற வசனத்தை மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சிடலாம். ஆனா, இது ரொம்ப சவாலா இருக்கு. எப்பவும் ஆக்டிவா, மத்தவங்களுக்குப் பிடிக்கிற மாதிரி பேசணும். நிகழ்ச்சியில் கலந்துக்கிறவங்ககிட்ட ஒரு பிரபலமா நிற்காம, சாதாரண மனுஷியா ஐக்கியமானால்தான் அவங்களுக்கும் முகத்துல பதட்டம் தெரியாம இருக்கும்.'

''முன்னாள் ஹீரோயின்ஸ் எல்லோருமே அம்மா, அக்கா கேரக்டர், ஒரு பாட்டுக்கு ஆடுறது, அரசியல்ல இறங்குறதுன்னு இருக்காங்களே... ஏன்?''

''சான்ஸ் கொடுத்தா, எல்லோருமே கலக்குவாங்க. அதுக்கான இடம் தமிழ் சினிமாவுல கிடையாது. நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எல்லோருமே புதுப்புது ஹீரோயின்களையே விரும்புறாங்க. அதனால, இந்தக் கேள்வியை நீங்க அவங்ககிட்டதான் கேட்கணும். சினிமாவுல நடிச்சா படம் ஹிட் ஆனாதான் ரீச் கிடைக்கும். ஆனா, சின்னத்திரை கேம்ஷோ, சீரியல்ல பங்கெடுத்தா வேர்ல்டு லெவல்ல ஹிட் கிடைக்கும்.'

''அப்புறமென்ன? தாராளமா அரசியலுக்கு வரலாமே?''

''எனக்கு என்ன தெரியுதோ... அதைப் பண்றேன். அரசியல்ல எனக்கு 'அ’ கூட தெரியாது!'

- கே.ஜி.மணிகண்டன்

படங்கள்: ப.சரவணக்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்