லட்சுமிமேனனைக் கலாய்த்தேனா? | விஷ்ணு, முண்டாசுப்பட்டி, லட்சுமி மேனன், vishnu, mundasupatti, lakshmi menon

வெளியிடப்பட்ட நேரம்: 11:06 (20/06/2014)

கடைசி தொடர்பு:11:06 (20/06/2014)

லட்சுமிமேனனைக் கலாய்த்தேனா?

'முண்டாசுப்பட்டி' ரிசல்ட்டின் மகிழ்ச்சியில் இருந்த விஷ்ணுவைச் சந்தித்தேன்.

''ஏன் இவ்வளவு இடைவெளி?''

'' நான் நடிச்சதுல சில படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடலைங்கிறதால பயம் வந்துடுச்சு. அதனால கதை கேட்டு எனக்கு 200 சதவிகித நம்பிக்கை வந்தா மட்டும்தான் ஒப்புக்கொள்கிறேன். எல்லோரும் குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்கணும், தயாரிப்பாளர்களுக்கும் லாபம் வரணும்ணு தேர்ந்தெடுத்துப் பண்றதால கொஞ்சம் இடைவெளி. இப்போ டைரக்டர் சுசீந்திரன் சார்கூட  அடுத்த படம், 'ஜீவா மேன் ஆஃப் தி மேட்ச்’. கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படம். இவ்ளோ நாள் பொறுமையா இருந்ததுக்குக் கிடைச்ச நல்ல படம். அப்புறம் சீனு ராமசாமி சாரின் 'இடம் பொருள் ஏவல்’. விஜய் சேதுபதியும் நானும் சேர்ந்து நடிக்கும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட். பரோட்டா சூரியும் நானும் சேர்ந்து நடிக்கும் 'கலக்குறோம் மாப்ளே’னு மூணு படம் பண்ணிட்டு இருக்கேன்.''

''உங்கள் மனைவி இயக்கத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானதே?''

''இப்போதைக்குத் தள்ளிப் போட்டிருக்கோம். மூன்று படங்களையும் முதலில் முடிக்கணும். என் மனைவி முடிவு பண்ணிவெச்சிருந்த கதையின் சாயலிலே ரெண்டு படங்கள் இந்த வருசம் வெளியாகிடுச்சு. இப்போ ஸ்க்ரிப்ட்டை மாத்தி எழுதிட்டு இருக்காங்க. அடுத்த வருஷம் அவங்க இயக்கத்தில் நடிப்பேன்.''

''விஷால். ஆர்யா, விக்ராந்துக்கு அடுத்து பார்ட்டி பாய்ஸ் லிஸ்ட்ல நீங்களும் சேர்ந்துட்டீடிங்க போல..?''

''ஆமாம். சி.சி.எல் மூலமா கிரிக்கெட் விளையாடப் போய், அவங்க ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல ஜாயின் பண்ணிட்டேன்.''

'' 'நான் சிகப்பு மனிதன்’ ஷூட்டிங்கில் தேடிப் போய் லட்சுமி மேனனைக் கலாய்ச்சீங்களாமே?’'

''நான் எங்கே கலாய்ச்சேன். என் கண்ணுல லட்சுமி மேனனை விஷால் காட்டவே இல்லையே. எப்போ போனாலும் இன்னைக்கு அவங்க சீன் இல்லைனே சொல்லிட்டு இருந்தார் விஷால். 'பாண்டிய நாடு’ ஷூட்டிங்லேயும் இப்படித்தான். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரேன்னு எஸ்.எம்.எஸ் செஞ்சா, இன்னிக்கு லவ் சீன்ஸ் எடுத்துட்டு இருக்காங்க. நீ வந்தா டிஸ்டர்ப் பண்ண மாதிரி ஆகிடும்னு திருப்பி விஷால் மெசேஜ் அனுப்பினார். இதுதான் உண்மை. அதைத்தான் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலாய்ச்சேன்.  ஆனா இந்த மெசேஜ் மேட்டரை ஃபங்ஷனில் சொல்வேன்னு அவர் எதிர்பார்க்கலை. அப்புறமா எனக்கு செம அடி விஷால்கிட்ட இருந்து!''

- செந்தில்குமார், படம் : ப.சரவணக்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்