உலகத்தைச் சுற்றிப் பார்க்கணும்! | ரூபா மஞ்சரி, rupa manjari, roopa manjari

வெளியிடப்பட்ட நேரம்: 11:13 (20/06/2014)

கடைசி தொடர்பு:11:13 (20/06/2014)

உலகத்தைச் சுற்றிப் பார்க்கணும்!

ஸ்லிம் ஸ்ட்ரக்சர், வசீகரக் கண்கள், கியூட் ஸ்மைலுடன் 'மக்கயாலா...’ வுக்கு ஆட்டம் போட்ட ரூபா மஞ்சரியுடன் ஜாலி அரட்டை.

''அப்பப்போ எஸ்கேப் ஆகிடுறீங்களே?''

'' நான் என்னங்க பண்றது? 2009-ல 'திருதிரு துறுதுறு’ ரிலீஸ் ஆகும்போதே 'நான்’ படத்துல கமிட் ஆனேன். அது 2012-லதான் ரிலீஸ் ஆச்சு. ஆனா, இதுக்கிடையில ரெண்டு மலையாளப் படங்கள் பண்ணினேன். மறுபடியும் 'யாமிருக்க பயமே’, 'சிவப்பு’ படங்கள் மூலமா தமிழுக்கு வந்தேன். 'யாமிருக்க பயமே’ படம் நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்திருக்கு. இனிமே கலக்கிடலாம்.''

'' 'மக்கயாலா...’ பாட்டைக் கேட்கும்போது மட்டும்தான் உங்க முகம் ஞாபகத்துக்கு வருது. இதை ப்ளஸ்ஸா நினைக்கிறீங்களா? மைனஸா நினைக்கிறீங்களா?''

'' ப்ளஸ்தான். 'திருதிரு துறுதுறு’ல அறிமுகமானப்போ, நல்ல நடிகைனு எல்லோரும் சொன்னாங்க. அப்புறம், 'மக்கயாலா...’ பாட்டுதான் என்னை எல்லா தரப்பு ஆடியன்ஸ¨க்கும் கொண்டுபோச்சு. எல்லா நடிகைகளுக்கும் பாப்புலாரிட்டி ரொம்ப முக்கியம். இந்தப் பாட்டுல எனக்கு அது அதிகமாவே கிடைச்சது.''

'' நடிகை ஆன கதையைச் சொல்லுங்க''

''சின்ன வயசுலேயே நடிக்கணும்னு ஆசைதான். வீட்டுல ஏத்துக்க மாட்டாங்கனு கனவிலேயே நடிச்சுட்டு இருந்தேன். அப்புறம் காலேஜ் சேரும்போது 'நடிக்கத்தான் முடியலை, சினிமாவை டெக்னிக்கலா தெரிஞ்சுக்கலாம்’னு மாஸ் கம்யூனிகேஸனுக்கு அப்ளிகேஷன் போட்டேன். 'நீ நடிகையா முயற்சி பண்ணா என்ன?’ னு ஃப்ரெண்ட்ஸ் உசுப்பிவிட்டாங்க. அதே நேரத்துல 'திருதிரு துறுதுறு’ க்கு ஆடிஷன் நடந்துட்டு இருந்துச்சு. இதான் சான்ஸுன்னு வீட்டுல கெஞ்சிக் கூத்தாடி சம்மதம் வாங்கி நடிகை ஆனேன்.''

''த்ரிஷா, அனுஷ்கா, நயன்தாரானு பெரிய நடிகைகள் லிஸ்ட்ல இடம் பிடிக்கிற ஐடியா இல்லையா?''

''இப்போதைக்கு சின்ன நடிகர், பெரிய நடிகர்ங்கிற பாகுபாடெல்லாம் இல்லாம, நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இதுவரை நான் நடிச்ச நாலு படங்களும் வேற வேற கான்செப்ட். இது எல்லா நடிகைகளுக்கும் அமையாது. இனி, அடுத்தடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தினு வேகமா போய்க்கிட்டே இருக்கணும். நாலு பாட்டுக்கு வந்துட்டுப் போற ஹீரோயினா இல்லாம, நல்ல நடிகைனு பெயர் வாங்கணும். த்ரிஷா பண்ற 'டீசன்டான கிளாமர்’ கேரக்டர்ஸ் கிடைச்சாலும் ஓகேதான்.''

''ஆக்டிங் தவிர?''

''எனக்கு வைல்ட் ஃலைப் ரொம்பப் பிடிக்கும். ஒருவேளை நான் சினிமாவில நடிகை ஆகலைனா, கண்டிப்பா வைல்ட் ஃலைப் ஃபிலிம் மேக்கர் ஆகியிருப்பேன். தவிர, விலங்குகளோட விளையாடுறது, டிரெக்கிங் போறது, ரொம்ப தூரம் கார்ல டிராவல் பண்றதுனு பல விஷயங்கள் பிடிக்கும். உலகத்தில் இருக்கிற எல்லா நாட்டுக்கும் போய், எல்லா இடத்தையும் ஒரு தடவையாவது சுத்திப் பார்த்துடணும்கிற ஆசையும் இருக்கு.''

''நடித்ததில் பிடித்தவர்கள்னு யாரையெல்லாம் சொல்லுவீங்க?''

''தமிழ்ல கிருஷ்ணாவும், 'சிவப்பு’ ஹீரோ நவீன் சந்திராவும் பிடிக்கும். அவங்க டெடிகேஷன் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சு. மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன். பெரிய நடிகர் என்கிற எந்த பந்தாவும் இல்லாம, ரொம்ப சிம்பிளா இருப்பார். பக்கா ஜென்டில்மேன்!''

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்