எனக்கு கூச்சம் அதிகம்! | சரண்யா மோகன், பிரபு, saranya mohan, prabu

வெளியிடப்பட்ட நேரம்: 09:53 (04/07/2014)

கடைசி தொடர்பு:09:53 (04/07/2014)

எனக்கு கூச்சம் அதிகம்!

''இன்னும் எத்தனை வருஷத்துக்கு 'பச்சைக் குழந்தை மாதிரி இருக்கியே?’னு கமென்ட் குடுப்பீங்க? எம்.ஏ ஃபைனல் இயர் படிக்கிறேங்க!'' - ஜாலியாகவே ஆரம்பித்தார் சரண்யா மோகன்.

 

''சினிமாவில் எனக்கு நண்பர்கள் வட்டமே கிடையாது. 'இதுதான் உன்னோட வளர்ச்சிக்குத் தடையா இருக்கிற விஷயம்’னு நிறையப் பேர் சொல்றாங்க. ஆனால், எனக்கு போன் யூஸ் பண்ற பழக்கம்கூட அவ்வளவா இல்லை. யாருக்காவது பிறந்தநாள் வந்தா வாழ்த்து சொல்லி மெசேஜ் தட்டுறது, போன் பண்றதுக்கெல்லாம் எனக்குக் கூச்சமா இருக்கு. இப்படியெல்லாம் பண்ணாதான் சினிமாவில் இருக்க முடியுமா என்ன?'' என்கிறார் சிறிது தயக்கத்துடன்.

''தங்கச்சி கேரக்டராதான் மனசுல நிக்கிறீங்க. ஹிட் ஹீரோயினா செட் ஆகலையே... ஏன்?''

''மூணு வயசுலேயே நடிக்க ஆரம்பிச்சுட்டேன். ஹிட் ஹீரோயினை விடுங்க. ஹீரோயினாவே செட் ஆக மாட்டேங்கிறேன்னு சொல்றாங்க. நான் என்னங்க பண்றது? படம் பார்த்துட்டு வெளியே வரும்போது, என் கேரக்டர் ஆடியன்ஸ் மனசுல உட்கார்ந்தா அதுவே போதும். அதனால, ஹீரோயின் லேபிளைவிட நல்ல நடிகைங்கிற லேபிளைத்தான் விரும்புறேன். தங்கச்சியா நடிச்சா என்ன? ஹீரோயினா நடிச்சா என்ன? எல்லாமே நடிப்புதானே?''

'' 'சினிமாவுக்கு வந்து பத்து லட்சத்தை முழுசாப் பார்க்கலை’னு நீங்க சொன்னதா நியூஸ் வந்துச்சே?''

'' ஒரு படத்தில் நடிக்கிறப்போ, கேரக்டர் பிடிச்சிருந்தா மட்டும்தான் சம்பள விஷயத்தையே பேச ஆரம்பிப்பேன். இதையெல்லாம் படிச்சுட்டு, ஸ்மைல் பண்ண வேண்டியதுதான்.''

''ஏன் இந்த ஃபீல்டுக்கு வந்தோம்னு யோசிச்சிருக்கீங்களா?''

''என்னை ஸ்கிரீன்ல பார்க்கிற ஆடியன்ஸ் ஒரு நடிகையாப் பார்க்காம, அவங்க வீட்டுப் பெண்ணாகவே நினைச்சுக்கிட்டாங்க. சினிமாவுக்கு வரலைன்னா, இதெல்லாம் கிடைச்சிருக்குமா? ஆனா, 'ஏன்டா இந்தப் படத்துல நடிச்சோம்?’னு ஃபீல் பண்ணியிருக்கேன்.''

''மறக்க முடியாத பாராட்டு ஏதாவது?''

''பிரபு சார். 'பாலக்காட்டு பக்கத்திலே...’ பாட்டுக்கு என்னுடைய மேனரிஸம் ரொம்ப நல்லா இருந்ததுனு பாராட்டினார். அப்புறம் கல்யாண் ஜுவல்லரி விளம்பரத்துல நடிக்கும்போது ஷூட் முடிஞ்சதும் என்னையே பார்த்துக்கிட்டு இருந்தார் பிரபு சார். 'என்னாச்சு சார்?’னு  கேட்க, 'அம்மாடி... நீ ரெண்டு இஞ்ச் ஹைட்டா இருந்திருந்தா, இந்தியா முழுக்க சுத்தி சுத்தி நடிச்சுக்கிட்டு இருந்திருப்பே’னு நெகிழ்ந்துட்டார்!''

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close